இடுகைகள்

பேரிடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்

படம்
  இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...

பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்

படம்
    இறுதிப்பகுதி     பிழைத்திருப்போம் எங்கே செல்லும் இந்தப்பாதை? பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தூரம் போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு இடங்கள் ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி...

பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து

படம்
  பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து இந்திய பேரரசரின் மதக்கலவர ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு என்பதே முக்கியமான சுலோகம். அவர் சொல்ல மறந்துவிட்டார். இருந்தாலும் மக்கள் தாமாகவே புரிந்துகொண்டுவிட்டார்கள். சட்டவிரோதமாக குளிரில் உறைந்து செத்தாலும் தாய் நாட்டில் வாழமுடியாது என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதுவும் பேரரசரின் பூர்விக ஆட்களே ஆள விட்டுவிடுடா சாமி என தப்பி ஓடிவருகிறார்கள். ஓகே கெட் டு தி பிசினஸ். தப்பி ஓடுவது சரி. அதை எப்படி திட்டமிடுவது? திட்டமிட்டாலும் கூட ஒருமுறை சாலைக்கு வந்துவிட்டால் அப்புறம் நடப்பது எல்லாம் நம் கையில் இருக்காது. அப்படியே வரும் சூழ்நிலைகளை சந்தித்து பயணிக்க வேண்டியதுதான். இருந்தாலும் சில முன்னெச்சரிக்கைகளைப் பார்ப்போம். பேரிடர், மதக்கலவரம், போர் என எது வந்தாலும் சரி, டிவி சேனல்களைப் பார்த்து தேசப்பற்று எனும் உச்சத்தை அடைவதை கட்டுப்படுத்தினால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம். தப்பிச்செல்லும் சாத்தியம் கொண்ட சாலைகளை அடையாளம் கண்டு அதிகம் பயன்படுத்தாத சாலைகளை தேர்வு செய்து தப்பிக்க முயலவேண்டும். எப்போது...

பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்

படம்
  பிழைத்திருப்போம் பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி? வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம். பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினர...

பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே?

படம்
  பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே? மின்சாரம் இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இன்று அப்படியான காலம் சாத்தியமில்லை. அதை சாத்தியப்படுத்த இயற்கை பேரிடர்கள் முயல்கின்றன. மின்சாரம் இல்லையென்றாலும் எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம். ஜெனரேட்டர்களை வாங்கவில்லையா? வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கூடவே அதற்கான பெட்ரோல், டீசலும் போதுமான அளவுக்கு தேவை. அடிப்படையில் உணவு, நீர், தங்கும் இடம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகவே மின்சாரம் வரும். எனவே மின்சாரத்தையே நினைத்து அடிப்படை விஷயங்களை கோட்டை விட வேண்டாம். செல்போன், இபுக் ரீடர், ஷேவிங் கருவிகள், அடுப்பு என அனைத்துமே மின்சாரத்தில் இயங்குபவை என்றால் மின்சாரத்தை ஜெனரேட்டர் வழியாக பெறுவதற்கு முயலவேண்டும். வேறு வழியே இல்லை. வீட்டில் சோலார் முறையில் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்தாலும் நன்மையே. ஆபத்துகாலத்தில் ஜெனரேட்டர்களை அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, முன்னமே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. பவர் பேங்குகளின் காலம் இது. எனவே, அவற்றை சார்ஜ் போட்டு வைத்தால் போன்களை உயிரோடு வைத்துக்கொள்ளலாம். மின்சாரம் இல்லாதபோது போனில் பணத...

கலவரச்சூழலில் தற்காப்பை உறுதிசெய்துகொள்வோம்!

படம்
  பாதுகாப்பு மனநிலை தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தடுக்க சில பலவீனமான அரசுகளால் முடியாது. பதிலுக்கு அரசை கேள்வி கேட்கும் சமூக செயல்பாட்டாளர்களை பிடித்து வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். அவர்களின் விமர்சனங்களில் உண்மை இருப்பதுதான் காரணம். இது பாதுகாப்பான மனநிலை அல்ல. பேரிடர் காலங்களில் ஆயுதங்களை, வெடிமருந்துகளை வாங்கி குவித்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நினைக்காதீர்கள். அது பிழை. மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவேண்டும். எப்படி அந்த சூழ்நிலையில் எதிர்வினையாற்றுவது என திட்டங்களை வகுக்க வேண்டும். பாதுகாப்பு மனநிலை கருத்தை அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜான் போய்டு உருவாக்கினார். வயிறு சொல்லும் அறிவுரை சண்டை போடுவதா, ஓடிவிடுவதா என்பதை உங்கள் புத்தி கூறும். தேவை கூர்மையான திறன் கொண்ட காது. சில நேரங்களில் நாம் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் நெருக்கடியில் சிக்குவோம். ஒருவரோடு சண்டை போட்டுக்கொண்டே இன்னொருவரை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல. தாக்குவது, தப்பி ஓடுவது என இரண்டில் எதையும் நீங்கள் செய்யலாம். விபத்து, தாக்குதல் காலங்களில் மக்கள் பெரும்பாலும் திகைத்து என்ன செய்வதென தெரிய...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

நிலநடுக்க பேரிடரில் தாயைக் காப்பாற்ற முயலாமல் மக்களைக் காப்பாற்றிய தந்தையை வெறுக்கும் மகள்!

படம்
  லைட் சேசர் ரெஸ்க்யூ சீனதொடர் யூட்யூப் 40 எபிசோடுகள் அறுவை சிகிச்சை மருத்துவர், அவரது தந்தை என இருவருக்குமான வெறுப்பு, பாசப்போராட்டம்தான் முக்கிய கதை. நாயகன் வக்கீல், நாயகி மருத்துவர். இருவருக்குமான மோதல், காதல் எல்லாம் பிறகு வருகிறது. லைட் சேசர் ரெஸ்க்யூ என்ற மீட்பு அமைப்பு தன்னார்வமாக இயங்கி வருகிறது. அதற்கான நிதியை கேப்டன் குயின்சன் வழங்கி வருகிறார். அவர்தான் அதில் தலைவர்,பயிற்சியாளர். தனது அமைப்புக்கு தன்னார்வமாக பயிற்சி பெற வருபவர்களுக்கு மாதச்சம்பளம் கொடுக்கமுடியாவிட்டாலும் முறையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை வழங்குகிறார். கேப்டனின் மீட்பு படையில் உள்ள அனைவருமே பிழைப்புக்கு கூடுதல் வேலை ஒன்றை செய்து வருகிறார்கள். மீட்பு பணி என்பது உயிரைக் காப்பாற்றும் பெருமை என்பதால் அதிலுள்ளவர்கள் அனைவருமே அதை விரும்பி செய்கிறார்கள். நாயகன், பெருநிறுவனங்களுக்கான வக்கீல். நல்ல சம்பளம் தரும் சட்டசேவை நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு வாய் பேச முடியாத தங்கை ஒருத்தி இருக்கிறார். அவர் ஏன் வாய் பேசமுடியாமல் போனார் என்பதற்கு பின்கதை உள்ளது. அதை தொடர் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர...

இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

படம்
            அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...

நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி உலகில் மோசமான நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம். உலகில் உருவாகும் அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம்.   அதாவது நீங்களும், நானும்தான்.   ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும் பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான பேரழிவு நேருகிறது.   இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம். Madras The cpllected works vol .5october 1947 the collected works 4 நவீன உலகம் என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது. இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர...

இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்! - இயற்கை பேரிடர்கள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுகின்றன

படம்
              இயற்கையும் பழக்கத்தை தடுக்கும் ! தினசரி செய்யும் உடற்பயிற்சி , வாசிப்பு , வேலை என பல்வேறு விஷயங்களை தடாலடியாக மாற்றுவதில் இயற்கைக்கு பெரும் பங்கு உண்டு . வெயில் , மழை , புயல் என வரும்போது ஒருவரின் தினசரி வாழ்க்கை பட்டியல் தடாலடியாக மாறிவிட வாய்ப்புள்ளது . அமெரிக்காவின் சாண்டி புயல் ஏற்பட்டபோது அங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் மாறுதலை சந்தித்தது . அவர்களின் உடற்பயிற்சி இருமடங்கு சரிவைச் சந்தித்தது . 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதிவரை சாண்டி புயல் தாக்குதல் இருந்தது . அதற்குப்பிறகு நியூஜெர்சி , நியூயார்க் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துவிட்டது . அதேநேரம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முன்பை விட ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கிவிட்டனர் . புகைப்பிடிப்பவர்களின் அளவு இப்பகுதிகளில் கூடியது . ஏறத்தாழ 17 சதவீதம் . இயற்கை பேரிடர்கள் பொதுவாக ஒருவரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் மாற்றக்கூடியது .. தி...