பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்
இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று.
அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடியும். செயற்கைக்கோள் வழியாக தொலைக்காட்சி, வானொலி, வயர்கள் இல்லாத கேபிள் அமைப்புகள் மூலம் எச்சரிக்கைகளை அனுப்புகிறார்கள். புயல், கதிர்வீச்சு காலத்தில் அரசு சொல்லும் வழிமுறைகளை மக்கள் பின்பற்றலாம்.
பொதுவாக நோய்த்தொற்று காலங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது நல்லது. முறையாக பாதுகாப்பு விதிமுறைகளை கையாண்டால் நோய்த்தொற்று ஏற்படாது. அப்புறம் என்ன? தடுப்பூசி போட்டு ரத்தம் உறைந்து அல்லல் பட வேண்டியதில்லை. அதிக நாட்கள் வெளியே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கேற்ப பொருட்களின் சேகரிப்பை செய்துகொள்ள வேண்டும்.
அரசின் பொதுவான தங்குமிடத்தில் தங்குவது என்றால் அரசு வழங்கும் செய்திகளை கவனிக்க வேண்டும். இயற்கை பேரிடர் காலங்களில் மாஸ்க் அணிந்து வெளியே வருவது நன்று. அரசின் கால்நக்கி பிழைக்கும் ஊடகங்கள் அல்லாத நேர்மையான ஊடகங்களை பின்தொடருங்கள். அதில் கூறப்படும் தகவல்களை வாசியுங்கள்.
ஒரு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாறுகிறீர்கள் என்றால் வாழும் வீட்டில் செல்லும் இடத்தைப் பற்றிய தகவலை எழுதி வைக்கலாம். இதனால் உறவினர்கள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என தெரிந்துகொள்வார்கள். குளிர்பதனப்பெட்டி தவிர மற்ற பொருட்களை மின் இணைப்பிலிருந்து துண்டித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் மழை வெள்ளத்தில் பொருட்கள் மிதந்து செல்வதை பார்ப்பீர்கள். அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு கிளம்புங்கள்.
சாதாரண நாட்களில் பிஎஸ்என்எல் போன்ற இந்திய அரசின் தொலைத்தொடர்பு சேவை செயல்படாது. ஆனால், மழை வெள்ளம், புயல் காலங்களில் வேலை செய்யும். எதற்காக என்று கேட்காதீர்கள். இந்தியா அப்படித்தான் இயங்குகிறது. அழைப்புகளை விட குறுஞ்செய்தி அனுப்புவது நல்லது. அதை நேரடியாக அனுப்புவதை விட குறுஞ்செய்தி செயலிகளான சிக்னல், டெலிகிராம் வழியாக அனுப்பலாம்.
அவசர காலங்களில் யாரைத் தொடர்பு கொள்வது என குழப்பம் ஏற்படும். எனவே, இதற்காக தொலைபேசி எண்களை எழுதி பட்டியலை தயார் செய்துகொள்ளுங்கள். தினசரி பயன்படுத்தும் பைகளில் பட்டியலை அனைவரும் வைத்திருக்கவேண்டும்.
வீடு என்றால் சந்திப்பு அறை, அல்லது பாதுகாப்பான அறை, வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் நண்பர் அல்லது உறவினரின் அறை, தெருவில் உள்ள பாலம், இடிந்த சுவர், கட்டி முடிக்காத பாலத்தின் கீழே, தேவாலயம், பிரியாணிக்கடை என ஏதாவது ஒரு இடத்தை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். மேற்சொன்ன இடங்கள் எல்லாம் அவசரகால இடங்கள்.
பேரிடர் காலங்களில் டிஜிட்டல் இந்தியா இருண்டுபோய்விடும். எனவே, ஏடிஎம்களில் அல்லது வங்கியில் வடக்கன்களோடு மல்லுக்கட்டி போராடி காசு வாங்கி வைத்திருந்தால் நல்லது. ரொக்கம்தான் உங்களை எப்போதும் காப்பாற்றும். மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரொக்கம் பொருட்களை வாங்க உதவும்.


கருத்துகள்
கருத்துரையிடுக