பாலியல் தேர்வு என்பது முக்கியமா?



 உளவியல்
அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி
பாலியல் தேர்வு என்பது முக்கியமா?

இயற்கைக்கு முக்கியம். பொதுவாக பெண் விலங்குகள் முட்டையிட, குட்டி போட அதிக சக்தியை செலவிடுகின்றன. அப்படி பெறும் குஞ்சு, குட்டி எதிர்பார்த்த அளவுக்கு வலிமையாக இல்லையென்றால் இயற்கையை எதிர்த்து, அந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆண்கள், பெண்களை ஈர்க்கவே பல்வேறு அழகான சிறகுகளைக் கொண்டிருக்கின்றன. பெரிதாக, எடை கூடுதலாக உள்ளன. இப்படி உள்ள ஆண்கள், அதிக பெண் இணைகளை அணுகி இனத்தைப் பெருக்க முடியும். பலவீனமான ஆண்களுக்கு பெண் இணைகள் கிடைக்காது. அப்படி கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில்தான் வலிமையான ஆணின் பெருமை உள்ளது.

ஒரு ஆண், பெண்ணை ஈர்க்க அவளுக்கு நகைகளை வாங்கிக்கொடுப்பது, நல்ல உணவகத்திற்கு கூட்டிச்சென்று பிரியாணி வாங்கிக்கொடுத்து கையாலேயே பரிமாறுவது எல்லாம் எதற்காக? ஈர்ப்புக்காகத்தான். இணையை தன் அருகிலேயே வைத்துக்கொள்ளத்தான்.

ஐக்யூ டெ்ஸ்ட் என்றால் என்ன?

இன்டெலிஜென்ஸ் கொசியன்ட். சிந்திக்கும் திறனை போட்டிகள் வைத்து சவால்களை தீர்ப்பதன் வழியாக முடிவு செய்து மதிப்பெண்களை வழங்குவார்கள். நினைவு, மொழி, காரண காரியம், கவனம், நகலெடுப்பது என பல்வேறு விதமாக சோதிப்பார்கள். இந்த சோதனை மூலம் ஒருவரது உளவியல் பிரச்னைகள், மனநிலை பற்றி எளிதாக கண்டுபிடிக்கலாம். தனிநபர்களின் திறனைப் பொறுத்தது என்றால், சில துறைகளில் அதிக மதிப்பெண்ணும், சிலதில் குறைவான மதிப்பெண்ணும் பெறுவார்கள். ஒருவரின் பொதுவான அறிவுத்திறனைப் பற்றிய மதிப்பீட்டை அறிவியல் முறையில் வழங்குகிறது.

ஆல்பா பீட்டா சோதனை என்றால் என்ன?

முதல் உலகப்போர் சமயத்தில் ஆல்பா பீட்டா என்ற பெயரில் உளவியல் தேர்வுகளை அமெரிக்க ராணுவவீரர்கள் சந்தித்தனர். இதில் தோல்வியுற்றவர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படவில்லை. வேலையில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த சோதனையை ராபர்ட் யெர்கெஸ் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் உருவாக்கினார். இதன் பெயர் ஆர்மி ஆல்பா, ஆர்மி பீட்டா. இச்சோதனையில் நாற்பது சதவீத ராணுவ வீரர்களுக்கு படிக்கத் தெரியவில்லை. எழுத்து தேர்வில் பெரும் தோல்வியை அடைந்தனர்.

இந்த தேர்வு அங்குள்ள பாரம்பரிய அமெரிக்கர்களுக்கு ஆதரவாகவும், அகதிகளாக வந்தவர்களுக்கு முன்னுரிமை இல்லாமலும் அமைக்கப்பட்டிருந்தது என விமர்சனங்கள் உருவாயின. அதாவது அடிப்படையில் கேள்விகள் அமெரிக்க நாட்டின் பன்மைத்தன்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவில்லை. எனவே, தேர்வு ஜனநாயகத்தன்மை கொண்டதாக இல்லை.

முதல் அறிவுத்திறன் சோதனையை செய்தவர் யார்?

உளவியலாளர் ஜான் கால்டன் என்பவர், அறிவுத்திறன் சோதனையை செய்து தனிநபர்களுக்குள் உள்ள வேறுபாட்டை நிரூபித்தார். அறிவுத்திறன் வேறுபாட்டிற்கு பாரம்பரியமே காரணம், மரபணுக்களே பின்னணியில் உள்ளன என்று கூறினார்.

மனநிலை பிரச்னைகளை அறிய சோதனைகள் உள்ளதா?

பிரெஞ்சு அரசு, மனநிலை குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டறிய முயன்றது. இதற்காகவே பைனட் சைமன் என்ற உளவியல் சோதனை உருவாக்கப்பட்டது. இதன் வழியாக ஒருவர், மனநிலை குறைபாடு கொண்ட குழந்தைகள எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு மேம்பட்ட பதிப்புகள் உள்ளன. இதை ஐந்து கண்டங்களிலுள்ள அறிவியலாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!