சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

 



பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன. 


எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது. 


கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற்பத்தி, அதில் கிடைக்கும் உபரி என்றே இயங்கி வந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. 


கச்சா எண்ணெய் விலை குறைவு, சந்தை விலை சரிவு ஆகியவையும் முக்கிய காரணங்கள். அமெரிக்கா செய்துள்ள டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தம், டிரான்ஸ்லாண்டிக் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஒப்பந்தம் என இரண்டிலும் சீனா பங்கேற்கவில்லை. இதற்கு நிகராக சீனா பட்டுச்சாலை திட்டத்தை நிலம், நீர் என இரண்டு இடத்திலும் உருவாக்கி வருகிறது. 


2014ஆம் ஆண்டு தொடங்கி சீனா, பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்து வருகிறது. உலகளவில் மூன்றாவது பெரிய முதலீட்டு நாடு சீனாதான். 2002ஆம் ஆண்டு சீனா செய்த முதலீடு என்பது குறைவுதான். காலப்போக்கில் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. 


பட்டுச்சாலை திட்டத்தி்ல 65 நாடுகள் பங்கேற்றுள்ளன. மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் பேர் திட்டத்தில் பங்கேற்கிறார்கள். வெளிநாட்டு முதலீடு 6.5 சதவீதமாக உள்ளது. இத்திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளில் தனிநபர் வருமானம் 3000 டாலர்களை தாண்டவில்லை. புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால்தான் பெரிய சந்தையை அடைய முடியும். 


பட்டுச்சாலை திட்டத்திற்கு சீனாவின் முதலீடு முக்கியமான மூலாதாரம். பல்வேறு நாடுகளோடு இணைந்து கூட்டுறவு முறையில் நிறுவனங்களை தொடங்கலாம். தனியார் நிறுவனங்கள், தனியார் அரசு நிறுவனங்கள் என நிறைய வாய்ப்புகள் உள்ளன. பட்டுச்சாலை திட்டம் வழியாக சாலை, ரயில், அடிப்படை கட்டுமான திட்டங்களை செய்ய முடியும். இரு தரப்பிலும் வேலைகளும் உருவாகின்றன. வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆசிய உள்கட்டமைப்பு வங்கி, பட்டுச்சாலை திட்ட நிதி என நிதியை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 


பட்டுச்சாலை திட்டத்திற்கு முக்கியமான சவால், நாடுகளின் அரசியல் சமச்சீரின்மை. அடிக்கடி போரோ, கலவரங்களோ நடந்தால் வணிகம்நடைபெறாது. பிறகு எப்படி வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கட்டுவார்கள்? 




மின் டாங் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 




குறிப்பு

பெல்ட் அண்ட் ரோடு திட்டம்  புரிதலுக்காக பட்டுச்சாலை திட்டம் என எளிமையாக கூறப்படுகிறது. 



மூலம் - பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ் - எகனாமிக் ஜியோகிராபி - வெய் லியு ஜியான்ஷியாங்க் கே, அன்காங் ஹூ.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!