டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த மருத்துவர்

 

டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025

லியாங்க் வென்ஃபெங்

டீப் சீக் ஏஐ நிறுவன இயக்குநர்


எல்லோரும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, பர்பிளக்சிட்டி என பேசிக்கொண்டிருக்கும்போது இணையத்திற்கு வந்த ஏஐ நிறுவனம். டீப்சிக் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு மாடல்களை விட குறைவானசெலவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆப்பிளின் ஆப்களில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் ஆப்களில் ஒன்றாக முதலிடத்தில் உள்ளது. சாட்ஜிபிடி போல பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது. இலவசம். லியாங்க்கிற்கு நாற்பது வயதாகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த டெக் ஆளுமை. ஸெஜியாங்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தவர். சீனாவின் நம்பிக்கைக்குரிய ஏஐயாக நம்பப்படுவது, டீப் சீக்தான். நாங்கள் இப்போதைக்கு லாபம் சம்பாதிக்க ஆசைப்படவில்லை என சொல்லி ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.


சீனா முன்னேறிவிடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா கணினி, செயற்கை நுண்ணறிவு சிப்களை வாங்குவதற்கான தடைகளை விதித்துள்ளது. இப்படியான பாதகமான சூழ்நிலையிலும் கூட டீப் சீக் போன்ற சிறந்த ஏஐ ஒன்றை சீனா உருவாக்கி சாதித்துள்ளது. டீப் சீக் வெளியாகி வரவேற்பு பெற்றவுடனே பங்குச்சந்தையில் இருந்த சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா, 600 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை ஒரே நாளில் இழந்தது. 



தாமஸ் சிலர், வெஸ்லி சன்குயிஸ்ட்


எச்ஐவி தடுப்பு மருந்து


எச்ஐவி நோயை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. வந்து விட்டாலும் நோயின் தீவிரத்தை குறைத்து ஆயுளை அதிகரிக்க மருந்துகள் உள்ளன. முற்றாக காப்பது கடினம். அப்படியாயினும் அனைத்து மக்களுக்கும் ஊசி மருந்துகள் கிடைக்கின்றன என உறுதியாக கூறமுடியாது. 


எச்ஐவி வந்துவிட்டால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி பாதாளத்திற்கு சென்றுவிடும். எனவே, பல்வேறு நோய்கள் தாக்கத் தொடங்கும். அதைத்த தடுக்க லீனாகேபாவிர் என்ற மருந்தை தாமஸ், வெஸ்லி ஆகியோர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை ஆண்டுக்கு இருமுறை செலுத்தி்க்கொண்டால் போதும். இப்போதைக்கு ஆய்வில் நம்பிக்கை தெரிகிறது. மனிதர்களிடம் சோதித்து வருகிறார்கள். வெற்றி பெற்றால் சந்தையில் எதிர்பார்க்கலாம். 



ராபர்ட் மான்ட்கோமெரி

உறுப்பு மாற்ற மருத்துவர்


பன்றியின் உடலிலுள்ள சிறுநீரகத்தை எடுத்து மனிதர்களுக்கு பொருத்தி உறுப்புமாற்ற அறுவைசிகிச்சைகளை ஒரு மருத்துவர் செய்வதை நினைத்து பார்க்க முடியுமா? ராபர்ட் ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு அறுவை சிகிச்சையை செய்தார். கடந்த ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. மனிதர்களிடம் உறுப்புகளை பெற்று பிறருக்கு பொருத்துவது கடினமான செயலாக மாறி வருகிறது. அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் பெற்று பொருத்தமுடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாக மனிதர்களை ஒத்த பன்றியின் உடல் உறுப்புகளை ராபர்ட் தேடி அடையாளம் கண்டார். அதில் உலகம் முழுக்க சாதித்து புகழ்பெற்றார். லேப்ராஸ்கோபிக் முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். உக்ரைனில் ரஷ்யா போர் செய்து வருகிறது. அந்த சூழலில் உக்ரைனுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்துள்ளார். அதற்காக நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். மஞ்சள் காமாலை பாதிப்பு கொண்ட உறுப்புகளை பிறருக்கு பொருத்துவதிலும் அஞ்சுவதில்லை. 2018ஆம் ஆண்டு இந்த வகையில் இதயத்தை தானே தானம் பெற்று பொருத்திக்கொண்டுள்ளார். சவால்களை கண்டு அஞ்சாமல் புதிய தீர்வுகளை கண்டறிந்து வரும் மருத்துவர் என்று தைரியமாக கூறலாம். 


கார்டெலியா பாஹ்ர்

சூழல் வழக்குரைஞர்


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழல் வழக்குரைஞர். காலநிலை மாற்றத்தால் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை அரசு கண்டுகொள்ளவில்லை என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். எட்டு ஆண்டு சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். மதவாத பாசிச இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் நீதிபதியாக அல்லாமல் போனது அந்த நாடு செய்த நல்வினை. ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம், கடந்த ஆண்டு. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் குடிமக்களை முறையாக பாதிப்பிலிருந்து காத்து பராமரிப்பது அரசுகளின் கடமை என கூறியது. 


கார்டெலியா தனது சட்ட அறிவு மூலம் சூழல் சார்ந்த கவனத்தை ஸ்வீடன் மட்டுமல்லாது உலகம் முழுக்க ஏற்படுத்தியுள்ளார். 



டெட்ரோஸ் அதானோம் கெப்பிரேசஸ்

உலக சுகாதார நிறுவன தலைவர்


அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டது. கொரோனா மீண்டும் பரவுகிறது. நிதிப்பற்றாக்குறை நெருக்கடி, சில நாடுகள் செய்யும் போர் என உலக சுகாதார நிறுவனத்திற்கு எப்போதும் இல்லாத அளவு சிக்கல்கள் உள்ளன. அத்தனையும் தாண்டி 194 நாடுகளில் சுகாதார வசதிகளை வழங்கி அவற்றை கண்காணித்து ஒழுங்குமுறைபடுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். அதன் தற்போதைய தலைவர் டெட்ரோஸ் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முதல் நபர். மருத்துவர் அல்லாதவரும் கூட. 


ரேஷ்மா கேவல்ரமணி

வெர்டெக்ஸ் மருந்தக நிறுவனத்தின் இயக்குநர்


இந்தியாவை விட்டு வெளியேறினாலே ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் வேகமாக முன்னேறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு மற்றொரு உதாரணமாக ரேஷ்மாவைக் காட்டலாம். பதினொரு வயதில் இந்தியாவை விட்டு வெளியே சென்று அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். மருத்துவ ஆராய்ச்சியில அக்கறை காட்டி இன்று வெர்டெக்ஸ் பார்மசூட்டிகல் நிறுவனத்தின் இயக்குநராக சாதித்திருக்கிறார். அமெரிக்க உணவு மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கிரிஸ்பிஆர் தெரபி ஒன்றை செய்ய அனுமதி பெற்றிருக்கிறது வெர்டெக்ஸ். இனி வரும் மருந்துகள் டிஎன்ஏவை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு ரேஷ்மா செயல்பட்டு வருகிறார். 


ஏஞ்சலின் முரிமிர்வா



ஜிம்பாவே நாட்டில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் ஏஞ்சலின். நன்றாக படிக்கும் மாணவி. பெற்றோருக்கு படிக்க வைக்க ஆசை என்றாலும் பொருளாதாரம் பற்றாக்குறையாக போய்விட்டது. கம்பைன் ஃபார் ஃபீமேல் எஜூகேசன் என்ற அமைப்பு மூலம் கல்வி கட்டணம், தங்குமிடத்திற்கான தொகை என இரண்டும் கிடைத்தது. பள்ளியில் உணவு கிடைத்தாலும் கூட வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்ற கவலை ஏஞ்சலினுக்கு உண்டு. 


தான் உதவித்தொகை பெற்ற அமைப்பிலேயே வேலைக்கு சேர்ந்து அதன் இயக்குநராக இருக்கிறார் ஏஞ்சலின். கானா, மாலாவி, தான்சானியா, ஜாம்பியா, ஜிம்பாவே ஆகிய நாடுகளில் கல்வி உதவியை காம்ஃபெட் அமைப்பு செய்கிறது. இந்த அமைப்பின் உதவியால் பெண்கள், சிறந்த தன்னம்பிக்கை கொண்ட தலைவர்களாக உருவாக வாய்ப்புள்ளது. ஒரு சமூகத்திற்கு பெண்கள் அவசியம். அவர்கள்தான் சமூகத்தின் அடிப்படையை அதற்கு தேவையான அனைத்தையும் உருவாக்குகிறார்கள்.ம 2024ஆம் ஆண்டு ஏஞ்சலின் செய்த செயல்பாடுகளுக்காக ஆப்பிரிக்கா கல்வி பதக்கம் வழங்கப்பட்டது. 

thanks - time magazine

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!