தொழிலதிபர்களை மிரட்டும் வரி!



தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது.

“நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா.

உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரம் தொழிலதிபர்கள் (2%)இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனை குளோபல் மைக்ரேஷன் ரிவ்யூ, நியூ வேர்ல்டு வெல்த் ஆகிய நிறுவனங்களின் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் உள்ள மொத்த செல்வத்தில், இந்த இடம்பெயரும் பணக்காரர்களிடம் 36 சதவீதம் உள்ளது என்பது கவனிக்க வேண்டியது. இந்தியா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த இடம்பெயர்வு தீவிரமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் இதன் அளவு 48 சதவீதமாக அதிகரித்துள்ளது, எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.

கடன் சுமைக்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி,    2020 ஆண்டுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதுள்ள கடன்களை முற்றிலும் ஒழிப்பதாக கூறியுள்ளார். முன்னர் 2.88 ட்ரில்லியன் டாலர்கள் கடன் சுமை கொண்ட ரிலையன்ஸ், தற்போது 1.54 ட்ரில்லியன் டாலர்களாக கடனைக் குறைத்துள்ளது. முகேஷ் அம்பானி, ஊடக நிறுவனரான சுபாஷ் சந்திரா ஆகியோரும் கூட நிறுவனக் கடன்களைச் சமாளிக்க தங்களது பங்குகளை விற்றே நிலையைச் சமாளித்துள்ளனர். வங்கிகள் மக்களின் சிறுசேமிப்பை ஆதாரமாக பெற்று தொழில் கடன்களை வழங்கி வந்தன. தற்போது இப்பிரிவின் சேமிப்பும்கூட குறைந்துள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் கடன்தொகை (2018-19), 131 லட்சம் கோடியாக உள்ளது. வரிகளை சீராக்கி பணப்புழக்கத்தை அதிகரித்தால் மட்டுமே பொருளாதார நிலை சீராக வாய்ப்புள்ளது.

ஆதாரம்:

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-petrol-and-diesel-prices-arent-falling/articleshow/70969223.cms?utm_source=ETMyNews&utm_medium=ASMN&utm_campaign=AL1&utm_content=10

பிசினஸ் டுடே 22.9.2019 இதழ்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!