ஆண்களின் மேலாதிக்கத்தை, சுகத்தை ஆதரித்துப் பேசும் அராபிய காமசூத்திர நூல் - நறுமணத்தோட்டம்
நறுமணத் தோட்டம்
நெஃப் சுவாஹி
ஆங்கில மொழிபெயர்ப்பு - ரிச்சர்ட் பர்ட்டன்
தமிழில் பெரு முருகன்
இந்த நூல் அராபிய காமசூத்திரம். இதை மொழிபெயர்ப்பாளர் தமிழுக்கு மொழிபெயர்த்து முக்கிய இலக்கியப் பங்காற்றியுள்ளார். நூல் எப்படிப்பட்டது என்றாலும் அதன் வழியாக அரபு நாடுகளில் உள்ள சமூக நிலைமை, ஆண், பெண் பாகுபாடு, மேலாதிக்கம் போன்றவற்றை அறிய முடிகிறது. அதுவே முக்கியமான விஷயம்.
நூலில் அரபு நாட்டு ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களை உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை திட்டவட்டமாக வரையறுத்துவிடுகிறார்கள். உடல் பருமனான, இடுப்பில் மடிப்புகள் விழும் பெண்கள். இவர்கள்தான் ஆண்களுக்கு சுகத்தை தருபவர்கள். உண்மையில் பாலுறவு என்பதில் பங்குகொள்ளும் இருவருக்குமே இன்பம் பகிரப்படுகிறது.
ஆனால், இந்த நூலைப் பொறுத்தவரை முழுக்க ஆண்களுக்கான பார்வையில் எழுதப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பெண்கள் எப்படி இருக்கவேண்டும், உடல் பருமனாக, யோனி அகலமாக, உடலுறவின்போது பெண் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு எழுச்சி திரும்ப திரும்ப உருவாக்கும் வகையில் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. நூல் எழுதப்பட்ட காலம் பெண்களை அடிமைகளாக வைத்துக்கொள்ளும், பலதார மணங்களை செய்யும் காலகட்டமாக இருந்திருக்க கூடும்.
நூல் முழுக்க பெண்கள் மீதான வெறுப்பு கடலென பரந்திருக்கிறது.
பெண் உடலுறவுக்காக சூழ்ச்சி, சதி, தந்திரம் செய்பவளாக ஒரு அத்தியாயம் முழுக்க காட்டப்படுகிறாள். அதற்கென சில கதைகள் புனையப்பட்டுள்ளன. காம சூத்திரத்தில் இடையிடையே வரும் இறை வணக்கம் வேடிக்கையாக உள்ளது. அதிலும் ஒரு கதை உள்ளது. அதில் அரசர் நகர்வலம் செல்கிறார். அப்போது ஒருவர் அரசனை சபிக்கிறார். தனக்குத்தானே பேசிக்கொண்டு அழுதபடி நிற்கிறார். அவருடைய காதலியை கருப்பின அடிமை ஒருவர் தூக்கிக்கொண்டு போய்விடுகிறார். அடிமையின் முதலாளி அரசியல் அதிகாரம் கொண்டவர். அந்த பெண்ணை எப்படி மீட்பது என அழும் ஆணுக்கு தெரியவில்லை. அதற்கு அரசன் உதவுகிறார். இந்தக்கதை முழுக்க அரசர் எதற்கு கடவுளை அத்தனை முறை வாழ்த்துகிறார் என்றே நமக்கு காரணம் புரியாது. கடத்தப்பட்ட பெண்களை மீட்க செல்கிறார். அதற்கு செய்யும் ஒவ்வொரு செயலின் போதும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும், எனக்கு வல்லமை கொடுக்கட்டும், இறைவன் அறிவார் என ஏகத்தும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள காம சூத்திரத்தில் தர்மம், அர்த்தம், காமம் என்று மூன்று பொருட்களை அதற்கான வரிசையில் விளக்குவார்கள். நூலில் பாலின வெறுப்பு இருக்காது. ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வின் விதிகளுக்கு ஏற்ப வாழவேண்டும். ஒரு பெண் விபச்சாரம் செய்கிறாள் எனில் அவளுக்கான நீதி என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு பெண்ணை பாலுறவு கொள்ள என்னென்ன விஷயங்களை செய்யவேண்டும் என விவரித்து கூறியிருப்பர். ஆனால், அராபிய காம சூத்திரத்தைப் பொறுத்தவரை அறம், விதிகள் ஏதும் கிடையாது. முழுக்க வீரிய மாத்திரை போட்டுக்கொண்டு பெண்ணின் யோனி கிழிய கிழிய உறவு கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. அப்படி செய்தால் பெண், ஆணை விட்டு பிரியமாட்டாள் என துணிச்சலாக பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை கூறுகிறது. குறிப்பாக நூலின் இறுதிப்பகுதியில் வரும் கதையில், ஒரு ஆண் 80 பெண்களோடு உறவு கொள்கிறார். ஆனால், விந்து யோனியில் சிந்தக்கூடாது. அடுத்து, ஐம்பது நாட்களுக்கு இடையறாது பெண்ணோடு உறவு கொள்ளவேண்டும். களைப்பாக கூடாது. அடுத்து, பெண்கள் உள்ள அறையில் ஆண் தன் குறியின் விரைப்புத்தன்மை குறையாமல் இருக்கவேண்டும். இப்படியாக மூன்று ஆண்களுக்கு ஒரு இளவரசி உத்தரவிடுகிறாள். இதற்கெல்லாம் என்ன பொருள் என்றே புரியவில்லை. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் செய்யும் இழிவு என்று வைத்துக்கொள்ளலாமா?
ஒரு கட்டத்தில் இந்த நூல் ஆண்மைக்குறைவுக்கான மருந்துகளை விற்பார்களே அவர்களது பேச்சாக மாறுகிறது. அதுவும் ஆண்மைக்குறைவு தொடர்பான மருந்துகளைப் பற்றி பேசும்போது கண்களே இருண்டுவிடுகிறது. பாலுறவு நிலைகள் பற்றி எழுத்து விவரிப்புகள் நிறைய உள்ளன. அந்த பக்கங்களில் எல்லாம் ஓவியங்கள் இடம்பெற வேண்டும். படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதம். ஆணை விட பெண்ணை இழிந்தவர்களாக கருதுகிறது. அந்த கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள காம சூத்திரம். அதனால், இதில் குடும்ப வாழ்க்கை, அதை நடத்திச் செல்வது பற்றியெல்லாம் எந்த சிந்தனைகளும் கிடையாது. நீளமான பருமனான ஆண் குறி, விந்து வெளியேறாமல் அதிக நேரம் இயங்குவது ஆகியவற்றை மட்டுமே அராபிய காம சூத்திரம் தன் முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக