புத்தகம் புதுசு! - மே 2019
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

புத்தகம் புதுசு!
Tell Me Who You Are: Sharing Our Stories of Race, Culture, & Identity
அமெரிக்காவில் நிலவும் இனவேறுபாட்டை பல்வேறு களப்பணி சார்ந்து விளக்கி கூறுகிறார் வினோனா குவோ, பிரியா வல்சி. இன்றைய அமெரிக்கா குறித்து அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் இது.
You Are Never Alone
by
Soyeon Kim (Illustrations)
உலகில் நாம் மட்டும் வாழவில்லை. தாவரங்கள் முதல் நுண்ணுயிரிகள் வரை வாழ்வதைக் கூறுகிற நூல் இது. புவியீர்ப்பு முதல் காஸ்மோ கதிர்கள் வரை பேசி, நாம் எப்படி தாவரங்கள் தரும் பிராணவாயுவை சுவாசித்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதையும் இந்த நூல் நினைவுபடுத்துகிறது.
புத்தகம் முழுக்க 200 க்கும் மேற்பட்ட உணவுவகைகளைச் சொல்லிக்கொடுத்து நோய்களை விரட்டும் ஐடியாக்களை கூறுகிறார் ஆசிரியர் வில்லியம் டபிள்யூ லீ. உணவுகளை எப்படி மருந்தாக்குவது என்று விளக்குகிறார் ஆசிரியரும் மருத்துவருமான லீ.
Digital Minimalism: Choosing a Focused Life in a Noisy World
by
காலையில் எழுந்ததும் ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் சூரியன் மறைந்தபிறகு உலகத்துக்கு என்னாச்சுன்னு கவலைப்படுகிறீர்களா? நிச்சயம் நீங்களும் டிஜிட்டல் மினிமலிசத்திற்குள் வரவேண்டும். காலையில் ஜாகிங், தரமான தான் நம்புகிற ஒரே ஒரு நாளிதழ், சாப்பாடு, டாகுமெண்ட் செய்யாத நண்பர்களின் சந்திப்பு, வேலையை ரசித்து செய்வதோடு சாப்பாடு சாப்பிடும்போது அதனை மட்டுமே கவனித்து சாப்பிடுவது என நீங்கள் பார்ப்பவர்களில் யாரேனும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைப் பற்றியதுதான் இந்த நூல். இதனை நீங்கள் வாசிப்பது அவசியமான ஒன்று.
நன்றி: குட்ரீட்ஸ்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்