நேர்காணல்: வாராக்கடன் பிரச்னைக்கு காங்கிரஸ் அரசே காரணம் -மோடி










"வாராக்கடன் பிரச்னைக்கு தேசிய முற்போக்கு கூட்டணி அரசே முக்கியக்காரணம்" - பிரதமர் மோடி





பொருளாதாரத்தை பொறுத்தவரை நீங்கள் அதிக கவனம் கொள்வது எதில்?
தேர்தல்களுக்காக வாக்குறுதிகள், சட்டங்களை இயற்றுவது எங்கள் கட்சி வழக்கமல்ல. 2022 ஆம் ஆண்டு இந்தியாவை நோக்கியே திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம்.

உங்களது ஆட்சியில் நீங்கள் திருப்தியடைந்த மூன்று திட்டங்கள் எவை, சரியாக வந்திருக்கலாம் என நினைக்கும் திட்டங்கள் பற்றி கூறுங்கள்.

தீவிரமான உறுதியுடனும் பொறுப்புணர்வுடனும் ஆட்சியில் எங்களது கடமையை செய்துவருகிறோம். குறிப்பிட்ட திட்டத்தில் திருப்தி என நீங்கள் குறிப்பிட்டதுபோல எங்கள் அரசின் கொள்கைகள் கிடையாது. தற்போது புதிய இந்தியாவிற்கான விதிகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.


இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதா?

செப்.7-ஏப். 8 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில்  45 லட்சம் வேலைவாய்ப்புகளும், கடந்தாண்டு 70 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. மொபைல் உருவாக்கத்துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 4.5 லட்சம்.

கிராமங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உருவாகியுள்ளனர். மேலும் 15 ஆயிரம் ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு அரசின் உதவிகளும் வழிகாட்டுதல்களும் கிடைத்துள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் பனிரெண்டு கோடி ரூபாயுக்கும் அதிகமான கடன்தொகை வழங்கப்பட்டுள்ளது.


வங்கி மோசடி மற்றும் வருவாய் வரி, ஜிஎஸ்டி ஆகியவை பற்றி பன்னாட்டு நிறுவனங்கள் குறை கூறி வருகின்றன. இந்தியாவை கட்டியமைக்க இவ்விதிகள் அவசியமா?

உலகவங்கி வெளியிடும் எளிதாக தொழில்செய்ய முடியும் நாடுகளின் பட்டியலில் நூறாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதுவே தொழில்தொடங்குவதற்கு இந்தியா ஏற்ற இடம் என்பதற்கு உதாரணம். கறுப்புபணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த 2.6 லட்சம் நிறுவனங்களும், 3.09 லட்சம் இயக்குநர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது.  சாதாரண மக்களுக்கு ஐந்து லட்சரூபாயாக இருந்த வருவாய் வரி பத்து சதவிகிதத்திலிருந்து ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜிஎஸ்டி நடவடிக்கை  நேர்மையாக வரிகட்டும் மக்களை பாதுகாக்கவே ஏற்படுத்தப்பட்டது.  கறைபடிந்த ஊழல்வாதிகளுக்கு இவ்விதிகள் சிரமமானதாக இருக்கும். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

பொதுத்துறை வங்கிகள் தொடர்ச்சியாக வாராக்கடன்களால் சரிவைச் சந்தித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் குறைவான உதவிகளோடு அரசு வங்கிகளின் பிரச்னைகளை தீர்த்து அதனை உயிர்ப்பிக்க முடியுமா?

டெலிபோன் மூலம் கடன் வாங்கும் முறையை கொண்டு வந்த காங்கிரஸ் அரசின் நிலைமையால்தான் பொதுத்துறை வங்கிகள் இன்று வாராக்கடன் சுமையை சுமந்து வருகின்றன. 2008-2014 வரையிலான காலகட்டத்தை வழங்கப்பட்ட கடன்தொகைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இதனை என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் எங்களது அரசு இப்பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் உள்ளது.  ஏக்யூஆர் 2015 அறிக்கை இதனை தெளிவாக கூறுகிறது.

இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் கோடி, அக். 2017 வரையில் 2.11 லட்சம் கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வராக்கடன்களின் அளவு வணிக வங்கிகளில் 12.4% என வளர்ந்தபோதும் அவ்வங்கிகளின் இருப்பு 114.38 கோடி ரூபாய் இருந்தது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

பொருளாதார பிரச்னைகளோடு போலிச்செய்திகள், அதுதொடர்பான வன்முறைகள் அரசுக்கு புதிய தலைவலியாக உள்ளதா?

போலிச்செய்திகளைக் குறித்து மக்கள் விழிப்புணர்வோடு  இருப்பது மட்டுமே ஒரே தீர்வு. ஒரு செய்தியை தவறானது. இதனை பிறருக்கு கூறக்கூடாது என்பதை மனிதர்கள் தீர்மானித்தால் பிரச்னையில்லை. சமூகவலைதளங்களில் பரப்பும் செய்திகளின் வலிமை மரபு ஊடகங்களையும் மிஞ்சக்கூடியதாக உள்ளது. சமூகவலைதளங்களை பத்தாண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். இதில் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் எனக்கு தோழர்களாக கருத்துக்களை விவாதித்து ஆலோசித்து வருகிறோம்.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: ;நிருபர்கள்குழு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆக.12, 2018











இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!