இடுகைகள்

நம் புத்தியை என்ன செய்வது?

படம்
                                                     நம் புத்தியை என்ன செய்வது? உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகேந்திர சிங். அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அதாவது சட்டவிரோத சுரங்கம்,  நிலம் அபகரிப்பு ஆகியவற்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னர் எப்போதும் போல காவல்துறையை ஏவிவிட்டு அந்த பத்திரிகையாளரின் வீட்டில் சோதனை என்னும் முறையில் பயமுறுத்தல் தொடங்கியிருக்கிறது. அதிலும அவர் மசியாமல் இருக்க, அவரை உயிருடன் கொளுத்தவும் முயன்றிருக்கிறார்கள் அமைச்சரின் ரத்தத்தின் ரத்தங்கள். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஜாகேந்திர சிங் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து தொடரப்பட்ட வழக்கையும் அமைச்சரின் ஆட்கள் திரும்பப் பெறுமாறு  பத்திரிகையாளரின் மகனை மிரட்டியிருக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலை அமைச்சர் பரஸ்நாத் யாதவ் ' விதியை யாரால் தடுக்க முடியு...

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
                                                        நூல்வெளி2                                             ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்                                                 கலைவாணன் இ.எம்.எஸ்                                                  கீற்று வெளியீட்டகம் இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் ப...

கண்டேன் நினதருள்

படம்
                                                         கண்டேன் நினதருள்     பலரும் இன்று இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுவது குறித்து சட்டச்சிக்கல்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு மதத்திலிருந்து  இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அவரவர் விருப்பம். சுதந்திரம் என்று கூட கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் உங்களது விருப்பம் என்பது என்றுமே நமது விருப்பமாக, தேர்வாக இருந்ததில்லை. வலுக்கட்டாயமாக ஒன்றை நம்மீது திணிப்பார்கள். அதை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். தலித்தாக இருக்கும் ஒருவர் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறும் போது அவரின் மீது இருந்த ஒடுக்குமுறைகள் கைவிடப்படுகின்றன. மரியாதையாக நடத்தப்படுகிறார் எனும்போது அப்படி மதம் மாறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்? திருநெல்வேலி அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அப்படி தலித்துகள் பலரும் ஏறத்தாழ 200 பேர் இஸ்லாமிய மார...

இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்

படம்
                                               இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்         நான் ஐஸ்ஹவுஸில் இரு கடைகளில் முதலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சுவைநயா மெஸ் என்பதில் முதலில் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அங்கும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நாட்களிலேயே இட்லியை வாங்கிச் சாப்பிட முயன்றால் வாயில் உமிழ்நீர் கூட சுரப்பதில்லை. அதற்கு காரணம் இட்லி, சட்னி இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் ஒரு உறைவு நிலை போலாகி தெலுங்கு படங்களின் என்.ஆர். ஐ கதாநாயகன் போல கடுப்படிக்கிறது. அதுவும் சில நாட்களிலேயே எனது மூக்கு இட்லியிலிருந்து வரும் இயந்திர வாசனையை கண்டறிந்தது. உணவுக்கு வாசனை எவ்வளவு முக்கியம். அந்த வாசனைதான் பெரும்பாலும் அந்த உணவை சாப்பிடுவதற்கான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது. ஆனால் மெஸ், ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே அவற்றில் கலக்கப்படும் ஈஸ்ட், மற்றும் சில ...

சாவுக்கே சவால்:நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

                                                        நூல்வெளி2                                             சாவுக்கே சவால்                                                                                       விளாதிஸ் லாவ் தித்தோவ்                                                                              தமிழில்: பூ. சோம சுந்தரம் ...

இரவில் நான் உன் குதிரை

படம்
                                                  இரவில் நான் உன் குதிரை                    தினமும் முன்பு நேரமே கிளம்பும்போது சிலமுறை குதிரையை நான் காணத்தவறுவதுண்டு. அது குறித்து அப்போது எந்த கவலையுமில்லை. ஆனால் இப்போது எல்லாம் அது சிறந்த பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. அந்தக்குதிரை நல்ல வாளிப்பான பளபளக்கும் கொழுப்பு மினுமினுக்கு உடலைப் பெற்றிருந்தது. அதன் முடி பளபளவென இரு பின்களால் முன் தலை வரை இறுக்கமாக கட்டப்பட்டு பின் தலையில் அன்று என்ன உடையோ அதற்கேற்ப நிறம் கொண்ட ரப்பர்பேன்ட் இறுக்கமாக பிசிறின்றி சுற்றப்பட்டிருக்கும்.  உடை நேர்த்தியோ கூறவேவேண்டாம். கால்சட்டை இறுக்கமாக இருக்கும். நல்ல கடும் நிறத்துடன் அணியப்பட்டிருக்கும். குதிரையின் மேலுடல் வாளிப்பிற்கு ஏற்ப எதை அணிந்தாலும் அதன் எலும்புகள், உடல் சுழிவுகள் எதுவும் வெளியே அதிகமும் தெரியாது. கச்சிதமான உடல் அமைந்து உடை அணிந்து வந்தாலும் காலில்தான் ச...

நூல்வெளி2- ப்ராட்லி ஜேம்ஸ் சுவரொட்டி

படம்
போஸ்டர் பையன் ஃபிடோ வழங்கும் இனி நூல்வெளி பகுதியை ப்ராட்லி ஜேம்ஸ் தொடர்ந்து எழுதுவார். இதில் எழுதப்படும் விமர்சனக் கருத்துகள் ஆரா பிரஸ் நிறுவனத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதல்ல. உண்மையில் அப்படி இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லைதான்.