இடுகைகள்

ஏழைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - மல்லிகா சாராபாய், கேரள கலாமண்டல வேந்தர்

படம்
  தனது தாய் இறப்பின்போது.. மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய், கேரளா கலாமண்டலத்தின் தலைவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான மல்லிகா, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள தர்ப்பணா அகாடமியை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அகாடமியை மல்லிகாவின் பெற்றோரான விண்வெளி அறிவியலாளருமான விக்ரம் சாராபாயும், கேரளத்தின் அனக்கார வடக்கத் குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் மிர்ணாளினி ஆகியோர் இணைந்து தொடங்கினர். கேரளத்தின் இடதுசாரி அரசு, கேரள கலாமண்டலத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிஃப் முகமதுவை நீக்கிவிட்டு, மல்லிகா சாராபாயை நியமித்துள்ளது. மல்லிகா சாராபாய் பரதநாட்டிய கலைஞர், சமூகசேவகர், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபலம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டியது. கலாமண்டலத்தின் வேந்தராக ஆனது எப்படிஇருக்கிறது? நாளிதழ்களில் படித்துத்தான் கலாமண்டலத்தில் வேந்தர், துணைவேந்தர் சார்ந்த விஷயங்களை அறிந்துகொண்டிருந்தேன். ஒருமுறை அகாடமியில் நாட்டிய நாடகத்திற்கான ஒத்தி...

யாவரும் ஏமாளி புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  நூல் விரைவில் அமேஸானில் வெளியாகும்..... நன்றி!

சர்க்கரையால் குழந்தைகளை அடிமையாக்கி லாபம் பார்க்கும் ஊட்டச்சத்து நிறுவனங்கள்!

படம்
  குழந்தைகளுக்கான உணவுகளை கெலாக்ஸ், குவாக்கர், சஃபோலா ஆகிய   பிராண்டுகள் தயாரித்து வருகின்றன. மேற்சொன்னவை, இந்தியாவில் ஓரளவு விளம்பரம் மூலம் அறியப்பட்டவை. இவையன்றி, உள்நாட்டில் ஏராளமான சிறு நிறுவனங்கள் குழ்ந்தைகளுக்கான உணவைத் தயாரித்து வருகின்றன. மேற்சொன்ன நிறுவனங்களின் உணவுகளில் சர்க்கரை, உப்பு என இரண்டு விஷயங்கள்தான் அதிகமாக உள்ளன. ஆனால், அதை மறைத்து இயற்கையான கோதுமை, நார்ச்சத்து, உண்மையான பழத்துண்டுகள் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். விளம்பரங்களை அழகாக வடிவமைத்து உடனே வாங்கிச் சாப்பிடும் ஆசையை உருவாக்குகிறார்கள். இதெல்லாம் உண்மைதான். நான் மறுக்கவில்லை. குழந்தை சாப்பிடவில்லை. எனவே, ஊட்டச்சத்து பானத்திற்கு நகர்ந்தேன் என தாய்மார்கள் கூறலாம். ஆனால் அப்படி ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே நம்புவது ஆபத்தானது. உணவுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் துணை உணவு பிரிவில் ஊட்டச்சத்து பானங்களை சேர்க்கலாம். அது உணவுக்கு மாற்று அல்ல. பல்வேறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் பதப்படுத்தப்பட்ட பழத்துண்டுகளை போட்டு சூடான பால் ஊற்றி சாப்பிட்டால் குழந்தைக்கு அற்புதமான காலை உணவு என ரீல் ஓட்டுவார்கள். பள்...

பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்

படம்
  மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன. இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில் அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பான உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை செய்ய வற்புறுத்துகிறார்கள்.   இதன்மூலம் காபி அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மற...

இறவாசக்தி பெற்ற முனிவர்களிடம் பெற்ற அதீத சக்தியால் கொலைவேட்கை கொள்ளும் நாயகன் - பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர்

படம்
  தி   பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர் (மங்கா காமிக்ஸ்) தொடர்கிறது… மங்கா ஃபாக்ஸ்   வலைத்தளம் முயி ஒரு அனாதை. அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறான். ஊரிலுள்ளோர் அவனை அடித்து உதைப்பது, தூங்கும் இடத்தை தீ வைத்து எரிப்பது என அவமானப்படுத்துகிறார்கள். கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். ஆதரவற்றவன் என்பதால் அவமானத்திற்கு பஞ்சமில்லை.   காட்டில் வேட்டையாடச் செல்பவர்களுக்கு தூண்டில் மீன் போல இரையை பொறியில் சிக்க வைக்கும் வேலையை செய்து வருகிறான். அதில் கிடைக்கும் காசுதான் அவன் சோற்றுக்கு உதவுகிறது. அப்படி ஒரு நாள் புலியை பிடிக்கப் போகும்போது ஏற்படும் விபத்தில் புலியின் தாக்குதலில் வேட்டைக்காரர்கள் அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இறுதியில் முயியின் தாக்குதலில் புலி இறந்துவிடுகிறது. ஆனால், தாக்குதலின் போது, புலியால் படுகாயமடையும் முயி சாவின் விளிம்பில் இருக்கிறான். அவனைப் பார்த்து இரக்கப்படும் இறவாசக்தி பெற்ற முனிவர்கள் தங்களின் முன்னூறு ஆண்டு தற்காப்பு கலையை சக்தியை அவனுக்கு கொடுத்துவிட்டு உடல் நலிவுற்று இறக்கிறார்கள். உடல் பலவீனமாக இருக்கும் நிலையில...

தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

படம்
  மார்ஷியல் ரெய்ன்ஸ் மங்கா காமிக்ஸ் 550 (ஆன் கோயிங்) ரீட்எம்.ஆர்க் யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார். தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர். பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு   உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில...

ஜாம், ஊறுகாய், கெட்ச்அப் தயாரிப்புகள் தூய்மையானவைதானா? - தூயவை போன்ற வேடமே விற்பனையை அதிகரிக்கும்

படம்
  ஒரு பொருள் சுத்தமாக கைபடாமல் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? அந்த பொருளின் மேல் அலுமினிய பாயில், ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, தயாரிக்கும் இடத்தில் கூட கைபடவில்லை. இலையின் மீதுள்ள பனித்துளி போல பரிசுத்தமானது. அம்மாவின் அன்பைப் போன்றது என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இப்படித்தான் ஊறுகாய், பீநட் பட்டர், ஜாம் ஏன் இப்போது டீத்தூளுக்குக் கூட மணம் வெளியே கசியாமல் இருக்க அலுமினிய பாயில் சீல் ஒன்றை ஒட்டுகிறார்கள். இப்படி சீல் செய்யப்பட்டிருந்தால் வாங்குங்கள். சீல் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள் என்றெல்லாம் பொருளின் மீது எழுதியிருப்பார்கள். ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதான சங்கதி கிடையாது. எதற்கு இந்த முயற்சி? இதெல்லாம் ஓசிடி வந்தவர்களாக சுத்தம் பற்றி கவலைப்படும் ஒரு பிரிவினரகளுக்காகத்தான். இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். நறுவிசமாக உடுத்துவார்கள்.   இவர்களிடம் நிறைந்து வழியும் பணத்தை பிடுங்கவே இத்தனை மெனக்கெட்டு பொருட்களுக்கு சீல் குத்துகிறார்கள். இதெல்லாம் மனதளவில் ஒரு பொருள் சுத்தமாக இருக்கிறது. கைபடாதபொருள் என நிரூபித்துக் காட்டுவதற்குத்தான். மற்றபடி, அந்த...