இடுகைகள்

இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!

படம்
    இசைக்கலைஞர் பார்வதி பால் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார். முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்? 1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணு...

சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல்

படம்
    சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல் சினா சங் இயக்குநர், காகாவோ தென்கொரியா தென்கொரியாவில் இயங்கி வரும் காகாவோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம், இசை, போக்குவரத்து, வெப் காமிக்ஸ், பணம் செலுத்தும் வசதி, குறுஞ்செய்தி என பலவற்றையும் ஒன்றாக இணைத்து காகாவோ டாக் என்ற ஆப் வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக சினா பதவியேற்றது நடப்பாண்டு மார்ச் மாதம்தான். ஆப்பிற்கு பயனர்களாக 44 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இவருக்கு முன்னிருந்த தலைவரால் ஏற்பட்ட பங்கு சந்தை முறைகேடு பிரச்னையை சமாளித்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். டாபனி டெகாஜாரேன்விகுல் தலைவர், இயக்குநர், பெர்லி ஜக்கர் தாய்லாந்து தினசரி பயன்பாட்டுப்பொருட்கள், உடல்நலம், பேக்கேஜிங் சார்ந்த துறைகளில் பெர்லி செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் டாபனி இயக்குநராக பொறுப்பேற்றார். டாபனியின் தந்தை சாரியோன் சிரிவதனபக்தி. பெரும் பணக்காரர். டாபனியின் கணவர் அஸ்வின், பெர்லியின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்தப்பதவி இப்போது அவரது மனைவிக்கு வந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பிக் சி எனும் பேரங்காடி கடைகளை பெர்...

உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்)

படம்
            உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்) 2013ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் ஷியாவோஹாங்சு என்ற ஆப்பை மிராண்டா க்யுவும் அவரது நண்பரும் சேர்ந்து தொடங்கினர். இந்த ஆப், இன்று முன்னூறு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டுள்ள சமூக வலைத்தள ஆப்பாக மாறியுள்ளது. மிராண்டா க்யூ, பார்ச்சூன் ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கூட இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஷியாவோஹாங்சூ என்ற வார்த்தைக்கு சிறிய சிவப்பு புத்தகம் என்று அர்த்தம். சீனாவை, மக்கள் சீன குடியரசாக போராடி உருவாக்கிய மாவோசேதுங்கின் மேற்கோளைத்தான் நிறுவனத்திற்கு பெயராக வைத்திருக்கிறார்கள். பெயர் மட்டும்தான் இப்படி. மற்ற விஷயங்கள் எல்லாமே நவீனமாக உள்ளது. குறிப்பாக, பொருட்களை வாங்குவது, சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன ஆப் இயங்குகிறது. சீனாவில் உள்ளவர்கள், ஷியாவோஹாங்சு ஆப் மூலமாக உள்நாடு, தெற்காசியா முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பயணித்து சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் கூட அங்குள்ள உணவகங்கள் இந்த சீன ஆப்பின் லோ...

மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!

படம்
            பெரியார் ஆயிரம் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை. மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது. காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது. நன்றி பெரியார் ஆயிரம் வினா விடை நூல் தொகுப்பாசிரியர் கி வீரமணி திராவிட கழக வெளியீடு    https://in.pinterest.com/pin/215891375886010962/ https://in.pinterest.com/pin/510806782749306029/

தாய்மொழி என்பது நமது போர்க்கருவி!

      பெரியார் ஆயிரம் பாட புத்தக கமிட்டியில் உள்ளவர்கள், தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரத கதைகளை சரித்திரத்தில் சேர்க்க சம்மதிப்பார்களா? நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பில் இருந்து தெரிந்துகொள்ள வழி செய்தால் ஒழிய எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும்போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக்கூடிய, முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றைக் கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. பள்ளியில் தமிழர் திராவிடர் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. அங்கு அய்யர், பிராமணன் போன்ற வார்த்தைகள் மட்டுமே காணப்படுகின்றன. மேல்வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே  தவிர திராவிடர் தமிழர் ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப்பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாக இருக்கும். தமிழ் ம...

ஆசியாவில் வலிமையான தொழிலதிபர் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

படம்
             powerful womens asia fortune asia 2024(not included india) siyun chen bristol myers squibb பிரிஸ்டல் நிறுவனத்தின் துணைத்தலைவர், பொது மேலாளராக இருக்கிறார் சென். இவர். 2011ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோவில் உள்ள மலைத்தொடரில் கணவருடன் மலையேற்றம் செய்ய முடிவெடுத்தார்.  அந்த செயல்பாடு இலக்கு, அதன் முக்கியத்துவம், கூட்டாளிகள் மீது வைக்கும் நம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை பற்றி புரியவைத்ததாக கூறுகிறார். அமெரிக்க நிறுவனமான பிரிஸ்டலின் ஆசிய வணிகம், சீனா ஆகியவற்றை சியுன் கவனித்து வருகிறார். இந்த பணிக்கு முன்னர் ஜிஎஸ்கே, நோவர்டிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். sung suk suh cosmax தலைவர், துணை நிறுவனர் சங்கின் கணவர் கியுங்தான் காஸ்மேக்ஸ் நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. காஸ்மேக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் உண்டு. கடந்த ஆண்டு நிறுவனம், 1.3 பில்லியன் டாலர்களை லாபம் பார்த்துள்ளது. கலீஜா...

சேரியோ, அக்கிரஹாரமோ மனதில் ஈரம் இருப்பது முக்கியம்! ஆண்டான் அடிமை - இயக்கம் மணிவண்ணன்

படம்
    ஆண்டான் அடிமை சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உண்ணி இயக்கம் மணிவண்ணன் அக்ரஹாரத்தில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரில் வளர்க்கப்படும் ஒருவர் தனது பெற்றோரைத் தேட முயல்கிறார். இதன் விளைவாக அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை. இயக்குநர் மணிவண்ணன் இடதுசாரி கருத்தியல் கொண்டவர். ஆண்டான் அடிமை வணிகப்படம் என்றாலும் படத்தில் பேசி இருக்கிற அரசியல் நிறையப்பேருக்கு பிடித்தமானது அல்ல. அவரின் ஆஸ்தான நடிகர் சத்யராஜ், படத்தின் கருத்தை சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் குத்துப்பாட்டு, ஆபாசம் எல்லாம் கிடையாது. எடுத்துக்கொண்ட மையப்பொருளை தீவிரமாக பேசியிருக்கிறார்கள். புத்தியிருப்பவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் நிறைய யோசிக்க வைக்கும். சத்யராஜ் படத்தில் இரு வேடங்கள் செய்கிறார். ஒன்று சேரியில் அடிமாடுகளை லாரியில் கொண்டு வந்து சேர்க்கும் லாரி டிரைவர் சிவராமன். இன்னொன்று, சுப்பிரமணிய ஐயரின் மகன், சங்கரன். இரு பாத்திரங்களுமே பல்வேறு உளவியல் சிக்கல்களை, சங்கடங்களை அந்தந்த சாதி அளவில் சந்திக்கிறது. சேரியில் வாழும்போது சத்யராஜ்...