இடுகைகள்

முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு!

படம்
      அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு? அமெரிக்கா. 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று டிரோஸ் 1 என்ற தட்பவெப்பநிலை செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கிடைத்த புகைப்படங்கள் அந்தளவு துல்லியமாக இல்லை. ஆனால், மேகங்கள், புயல்களைப் பற்றிய படங்கள் கிடைத்தன. மொத்தம் எழுபத்தேழு நாட்கள் மட்டுமே செயற்கைக்கோள் இயங்கியது. பிறகு, ஏற்பட்ட மின் விபத்தால் செயலிழந்துபோனது. தட்பவெப்பநிலை பற்றிய முதல் செய்தி லண்டனின் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது. ஆண்டு 1850. தட்பவெப்பநிலை பற்றிய ஒளிப்பரப்பு, விஸ்கான்சின் பல்கலைக்கழக நிலையத்தில் இருந்து 1921ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது. பாரோமீட்டரை கண்டுபிடித்தது யார்? கிரேக்க வார்த்தையிலிருந்து பாரோமீட்டர் வார்த்தை வந்தது. இதன் பொருள், எடை. ராபர்ட் பாயல் என்பவர், பாரோமீட்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாயல் பாரோமீட்டரின் வடிவத்தை மாற்றி அமைத்தார். ராபர்ட் ஹூக் என்பவர், எளிதாக அதன் டயலை பார்க்கும்படி அதை மேலும் மேம்படுத்தினார். 1644ஆம் ஆண்டு பாரோமீட்டரை இவாங்கெலிஸ்டா டோரிசெல்லி என்பவர் கண்டுபிடித்தார். இவர் கலில...

புத்தமதம் பற்றிய அடிப்படைக் கருத்துகளை உரை வடிவில் முன்வைக்கும் நூல்!

படம்
    ஃபண்டமென்டல் ஆஃப் புத்திசம் பீட்டர் சான்டினா இ நூல் இணையத்தில் புத்தமதம் தொடர்பான கோடிக்கணக்கான நூல்கள் இலவசமாக படிக்க கிடைக்கின்றன. அப்படி கிடைத்த நூல்களில் ஒன்று, இந்நூல். நூலில் மொத்தம் பதிமூன்று உரைகள் உள்ளன. அத்தனையும் புத்தமதம் சார்ந்து பீட்டர் சான்டினா ஆற்றியவை. இதில் புத்த மதம், அதன் அடிப்படை கோட்பாடுகள், கருத்துகள் பலவும் பேசப்படுகிறது. எழுத்து வழியாக நிறைய கருத்துகளை விளக்க முயலவில்லை. ஏனெனில் இக்கருத்துகள் அனைத்தும் பேசப்பட்டவை. எனவே, புரிந்துகொள்வதற்கு ஏற்ற உதாரணங்களுடன் சற்று எளிமையாக உள்ளது என்றே கூறவேண்டும். இந்த நூலை படித்தாலே புத்த மதத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியுமா என்றால் ஓரளவுக்கு என்றே பதில் கூறவேண்டும். எளிமையாக பேச்சு வழக்கில் மதம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளை கூறுகிறது. அந்த வகையில் இந்நூலை தொடக்க வாசிப்பிற்கான ஒன்றாக கருதலாம். 136 பக்கங்களைக் கொண்ட எளிய நூல், வேகமாக வாசித்துவிட எண்ணுவீர்கள். ஆனால் மத நூல் என்பதால், அந்தளவு வேகமாக வாசித்து கடக்கமுடியாது. அந்தளவுக்கு முக்கியமான யோசித்து கடக்கவேண்டிய நிறைய சொற்கள் உள்ளன. துன்பம், மகிழ்ச...

அரசுக்கு ஆதரவான ஊக்கமருந்து செலுத்திக்கொண்டு மண்டியிட்ட இந்திய ஊடகங்கள்!

படம்
      ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு மண்டியிட்ட ஊடகங்கள் இக்கட்டுரையின் தலைப்புக்கு இந்திய கேலிச்சித்திரக்கலைஞர் வரைந்த சித்திரம் ஒன்றுதான் காரணம். தொடக்க காலத்தில் இந்தியாவில் கேள்விகளை நேர்மையாக கேட்பதும், புலனாய்வு செய்திகளை வெளியிடுவதும் இயல்பாக நடந்து வந்தது. ஆனால், இப்போதோ ஊடகங்கள் முழுக்க அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்யும் கைப்பாவையாக, மடியில் அமர்ந்துகொள்ளும் நாய்க்குட்டிகள் போல மாறிவிட்டன. இந்தியாவில் ஒருகாலத்தில் பிரதமர் செய்த ஊழல்களை வெளிப்படையாக பத்திரிகைகளில் எழுதி, அதன் பொருட்டு ஆட்சி மாற்றம் நடந்ததெல்லாம் உண்டு. நடக்கவிருந்த தேர்தலின் முடிவு கூட மாறியது. இதையெல்லாம் அந்தக்காலம் என்று சொல்வதன் அர்த்தம், இன்று ஊடகங்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அதை யாரும் நம்புவதும் இல்லை. மரியாதையும்கூட முன்பைப்போல இல்லை. இன்று மதவாத பிரதமருக்கு நெருக்கமாக உள்ள வணிகர், அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்தார் என குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் அதைப்பற்றி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. அப்படியொரு அமைதி நிலவியது. இதையெல்லாம் கடந்த நாற்பது ஆண்டு...

உறக்கமின்மையைப் போக்கும் சாமோமில்லா

படம்
        மருந்து = நஞ்சு ஓமியோபதி ஆர்னிகா மன்டனா இந்த தாய் திராவகத்தை ஒருவர் உடல் அளவில் சிராய்ப்பு, காயம், பிள்ளை பெற்ற பெண்மணிகள், காய்ச்சலால் உடல் நலிவுற்றவர்கள் பயன்படுத்தலாம். இதுவும் தாவரத்தை முழுமையாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்து. ஆர்னிகா, டெய்சி எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக உழைப்பு காரணமாக திசுக்கள் சேதமடைந்தால் அதை ஆர்னிகா சீர்ப்படுத்தும். அதிர்ச்சி, உடல் ரீதியான காயங்களை உள்ளும் புறமும் சரிசெய்யும். இதோடு கூடுதலாக ருஷ் டாக்ஸ், ஹைபெரிகம் ஆகிய மருந்துகளை உடல் சேதத்தைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம். குழிப்புண்கள் போல காயம் இருந்தால் அதற்கு லேடம் என்ற மருந்து பயன்படும். நோயாளியின் நோய் அறிகுறிகளை நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். ஆர்செனிகம் ஆல்பம் இதை வெள்ளை ஆர்செனிக் என்று அழைக்கிறார்கள். அடிப்படையில் ஆர்செனிக் என்பது உயிர்கொல்லும் விஷம். ஆனால் அர்ஸ் ஆல்ப் என்பது ஓமியோபதியில் மருந்து. மனப்பதற்றம் கொண்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்படுபவர்கள், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைந்து பதற்றமாகவே இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, எரிச்சல் மனநிலை ஆகியவை அற...

டாப்ளர் ரேடாரின் பயன் என்ன? - மிஸ்டர் ரோனி

படம்
      அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தேசிய தட்பவெப்பநிலை சேவை  தொடங்கப்பட்டது? 1870ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 அன்று தொடங்கப்பட்டது. உலிசஸ் எஸ் கிராண்ட் அதிபராக இருந்தார். தேசிய தட்பவெப்பநிலை பிரியூ என்று பெயர் சூட்டப்பட்டது. 1891ஆம்ஆண்டு அதன் பெயர் மாற்றியமைக்கப்பட்டது. அமெரிக்க தட்பவெப்பநிலை அமைப்பு என்று சூட்டப்பட்ட பெயர், 1967ஆம் ஆண்டு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. க்ளீவ்லேண்ட் அப்பே என்பவர் யார்? இவரைத்தான் தட்பவெப்பநிலை அமைப்பை நிறுவிய தந்தை என்று பெருமையோடு கூறுகிறார்கள். 1868ஆம்ஆண்டு சின்சினாட்டி கோளரங்கத்தில் இயக்குநராக இருந்தார். அதில் இருந்தபடியே தட்பவெப்பநிலை பற்றிய தகவல்களை திரட்டி எழுதினார். 1871ஆம் ஆண்டு, தேசிய தட்பவெப்பநிலை பிரியூவுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். தட்பவெப்பநிலை துறையில் பெஞ்சமின் பிராங்களின் பங்களிப்பு என்ன? புயலில் பட்டம் விடும்போது அதன் வழியாக மின்சாரம் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தார். புயல்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடிகார சுற்று முறையில் செல்வதை ஆய்வு செய்து கண்டறிந்தார். அவர் ஆய்வு செய்தபோது, பிலடெல்பியாவிலிருந்த...

தேனீயின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் எரிச்சல், வீக்கத்திற்கான ஓமியோபதி மருந்து!

படம்
       4 மருந்து = நஞ்சு ஓமியோபதி அல்லியம் செபா என்ற மருந்தைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்னர், ஓமியோபதி மருந்துகளை முறையாக மருத்துவரின் பரிந்துரைகளின்படி சாப்பிடவேண்டும். அல்லாதபோது, அதன் பக்கவிளைவுகளை ஒருவர் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஓமியோபதி மருத்துவரிடம் மருந்துகளை வாங்கினாலும் கூட, மருந்தின் ஆபத்தான பக்க விளைவுகளைப் பொறுத்து, அதை கூறும்படி தொலைபேசி எண்களை கொடுப்பதுண்டு. மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளுக்கு ஏற்ப மருத்துவர், மாற்று மருந்துகளை அல்லது அதை சமாளிக்கக்கூடிய பரிந்துரைகளை வழங்குவார். ஓமியோபதி மருந்துகள் சர்க்கரை, மதுவை சாரமாக கொண்டு பக்குவப்படுத்துதல் முறையைக் கொண்டவை. ஆனால் மருந்து என்பது என்பது மருந்துதான். அதை மறந்துவிடாதீர்கள். சிவப்பு வெங்காயத்தில் இருந்து எடுக்கப்படும் தாய் திராவகமே அல்லியம் செபா. பொதுவாக வெங்காயத்தை சளிக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு. பருவகாலங்களில் கடுமையான பூக்களின் நறுமணம் வீசும்போது, மகரந்தம் மூலம் ஒவ்வாமை உருவாகி தும்மல் கடுமையாக தொடரலாம். கூடவே கண், மூக்கில் நீர் வடியும். காய்ச்சலும் கூட லேசாக வரக்கூடும். தும்மல், ...

மொழிபெயர்ப்பு கட்டுரை - நன்றி அறிவியல் பலகை இதழ்

படம்