இடுகைகள்

ஆண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலின பேதமற்ற விருது- பெர்லின் திரைப்பட விருதுவிழாவில் ஆச்சரியம்!

படம்
  பெர்லின் திரைப்படவிழாவில் வரலாற்றில் முதன்முறையாக பாலின பேதமற்ற விருது நடிகை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஐம் யுவர் மேன் என்ற படத்தில் நடித்த நடிகை மாரன் எகெர்ட் இந்த விருதை வென்றுள்ளார்.  இந்த  பாலின பேதமற்ற பிரிவில் விருது வழங்குவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டது. தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஆண்கள், பெண்கள் அனைவரும் போட்டியிடலாம் என்பது இதன் சிறப்பு. ஆனால் எப்போதும் போல இதற்கும் சரியா, தவறா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கேட்பிளான்கேட், டில்டா ஸ்விண்டன் ஆகியோர் இந்த விருது வழங்கும் முயற்சியை வரவேற்றுள்ளனர். சிலர் இது பாலின பேத பிரச்னையை பெரிதாக்கும் என்று கூறியுள்ளனர்.  பாலினம் சார்ந்த நடைபெறும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தை  இந்த விருது ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம் என மேரியட் ரைசன்பர்க் கூறியுள்ளார். இவர் பெர்லின் விருதுப்போட்டியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.  ஆஸ்கர், பாஃப்டா, எம்மி என உலகம் முழுக்க நிறைய விருது வழங்கும் போட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே ஆண்கள், பெண்கள் என பிரித்துதான் விருதுகளை வழங்குகின்றன. இவை அனைத்துமே ஒ

வாசனை திரவியங்களில் ஆண், பெண் வேறுபாடு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கான, பெண்களுக்கான வாசனை திரவியங்களில் வேறுபாடு என்ன? அனைத்திற்கும் ஆல்கஹால்தான் மையம். ஆனால் வேறுபடுவது, பெண்களுக்கான வாசனைகள்தான். ஆண்களுக்கு சற்று மூக்கை நெருடும் வாசனைகளையும் பெண்களுக்கு இதமான, ஆழ்ந்து சுவாசித்தால் தெரியும்படியான பூக்கள் வாசனைகளை அமைக்கிறார்கள். இதற்கான காரணம், பெண்களின் உடல் வியர்வை மற்றும் ஆண்களின் உடல் வியர்வை மணம்தான். இதனை அடிப்படையாக வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை பர்ப்யூம்கள், டியோடிரண்ட், சென்ட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இவன் வேற மாதிரி விக்ரம் பிரபு போல பாடி ஸ்ப்ரேயில் என்ன வித்தியாசம்? என அக்கா பெண்ணின் பாடி ஸ்ப்ரேயை களவாடி களிப்புறுவதும் நம் தேசத்தில் நடக்கும் காட்சிதான். நன்றி:பிபிசி

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி டியோட்ரண்ட்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக டியோட்ரண்ட் விற்கப்படுகிறது? இதில் என்ன வித்தியாசம் உள்ளது? பொதுவாக டியோட்ரண்டுகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் வேதிப்பொருட்களும் கூட மாறாது. மாறுவது அதன் வாசனைகள் மட்டுமே.  டியோட்ரண்டுகளை எதற்கு பயன்படுத்துகிறோம்? பெண்களைக் கவர என காமெடி பண்ணாதீர்கள். அக்குள் பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்களின் ரகளையை காலிசெய்யத்தான். இதற்காக அலுமினியம் மற்றும் ஸிர்கோனியம் அடிப்படையிலான வேதிப்பொருட்களை சேர்க்கிறோம்.  இந்த வேதிப்பொருட்கள் உடலின் வியர்வை சுரப்பிகளின் பணியை மட்டுப்படுத்துகிறது. பாக்டீரியா ஆண்களுக்கு 3 ஹைட்ராக்ஸி 3 மெத்தில் ஹெக்சானிக் அமிலம், பெண்களுக்கு சல்பர் ரிச் 3 மெத்தில் 3 சல்ஃபானிஹெக்ஸன் 1 ஆல் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் பிபிசி