திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள்
திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள் தமிழில்: லாய்ட்டர் லூன், சார்லி ட்ராம்ப் 1.பல வகையான நிலைகள் Author இயக்குநர்/ எழுத்தாளர் ப்ரெஞ்ச்சிலிருந்து உருவான வார்த்தை ஆதர் என்பதாகும். ஆதர் எனும் கருத்து புதிய அலை ப்ரெஞ்ச் விமர்சகர்களால் 1940 1960 வரை மிகப்புகழ்பெற்றதாக இருந்தது. மேலும் இயக்குநர் திரைப்படக்கலையில் முக்கியமான தலைமை கர்த்தா என்பதை உறுதியாக கூறியது இந்த காலகட்ட வரலாறு. சிறந்த உறுதியான மனநிலை கொண்ட இயக்குநர், எழுத்தாளர்/ ஆசிரியர் திரைப்படத்தில் தனது பார்வையை அழுத்தமாக பதிய வைப்பதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ ஆகியவற்றின் மீதான அழுத்தங்களையும் சுமக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. Exterior காட்சியானது கதவுக்கு வெளிப்புற வெளியில் படமாக்கப்படுவது எக்ஸ்டீரியர் எனப்படும். வெளிப்புறம் போல ஸ்டூடியோவில் அல்லது அதற்கான இடம் தேடி அதிலும் படமாக்கப்படுவது உண்டு. Eyeline ஒரு கதாபாத்திரத்தின் விருப்பம், நோக்கம் எதனை விரும்புகிறார் என்று குறிப்பிடப்படுவது ஆகும். Genre திரைப்படத்தின் வகை எதுவென புரிந்துகொள்ளும்படியான மரபான காட்