இடுகைகள்

அம்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்புள்ள அப்பாவுக்கு.... மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு!

படம்
நாம் எப்போதும் அம்மாவிற்கு நன்றி கூறுகிறோம். அவளை நினைவுகூர்ந்து நெகிழ்கிறோம். அவள் அடையாளம் காட்டித்தான் அப்பா என்பவரை அறிகிறோம். வீட்டிற்கு, உறவுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அம்மா வழிகாட்டுகிறார். புரிந்துகொள்ள உதவுகிறார்.  சமூகத்திற்கு, வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு அப்பா வழிகாட்டுகிறார். அவர் பெரியளவில் பாராட்டுகளில் பங்குகொள்வதில்லை. வெற்றியிலும் கூட ஒதுங்கியே நிற்கிறார். அப்பாவையே மகன் தன் முன்மாதிரியாக கருதுவது வரம்தான். அப்படி ஒரு அப்பா அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள நாம் உரையாடித்தானே ஆகவேண்டியதிருக்கிறது. அப்படி அதிகம் பேசாத தந்தைக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த மின்னூல். உங்களுக்கு இந்த நூல் விரைவில் இலவசமாக கிடைக்கும். தரவிறக்கிக்கொள்ளலாம். இப்போது அதன் அட்டைப்படம் மட்டும். படம்:Pixabay

தந்தை தாயை நேசிக்கவேண்டியது முக்கியம்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
  6 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடைய ராசி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கன்னி ராசி என்று கேள்விப்பட்ட வரையில் அதற்கு உருப்படியான நற்பலன்களை நான் நாளிதழ்களில் கூட படித்தது இல்லை. கடுமையான வறுமை, போராட்டங்கள், தரித்திரத்தை அனுபவித்து கடந்து வரவேண்டியிருக்கும் என்பதுதான் நான் படித்த ஜோதிட நூலில் எழுதியிருந்தது. ஜோதிடருக்கு கூட கன்னி ராசிக்காரர்கள் ஏதோ கெடுவினை செய்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டேன். உங்களுடைய கஷ்டங்கள், சிரமங்கள் இதெல்லாம் ராசி காரணமாகத்தான் நடந்தது என்று கூறவில்லை. படிக்காமல், கற்ற தொழில்திறனை வைத்து முன்னேற நினைக்கும் ஒருவருக்கு வாழ்க்கை வேறு எப்படி அமைய முடியும்? நான் உங்களிடம் கற்றுக்கொண்ட விஷயமாக நேர்மையையும், ஏற்றுக்கொண்ட பொறுப்பை கவனமாக நிறைவேற்றுவதையும் முக்கியமானதாக நினைக்கிறேன்.   இன்று எனக்கு அலுவலகத்தில் கிடைக்கும் வேலைகள் பலவும் பிறரால் ஏற்கப்படாதவை. நான் முடிந்தளவு கவனமாக செய்ய முயன்று வருகிறேன். வாழ்க்கை முழுக்க தொடரும் சில பிரச்னைகள் கடந்து கடன் கொடுக்காமல

மாற்றுப்பாலினத்தவரின் அம்மா இவர் - பிரெண்டா ஹோவர்டு

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! பிரெண்டா ஹோவார்டு அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள பிரான்க்ஸ் பகுதியில் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு யூதக்குடும்பத்தில் பிறந்தார். இவரை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், நவீன மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்ததில் பிரெண்டா முக்கியமானவர். பல்வேறு பேரணிகளை அம்மக்களின் உரிமைகளுக்கான நடத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு காலமானார். சியோஸெட் பள்ளியிலும் மன்ஹாட்டன் கம்யூனிட்டி கல்லூரியிலும் படித்தார். நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றது. அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தவர், பெண்ணிய இயக்கங்களிலும் பங்கு பெற்றார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளிலும், சங்கத்திலும் இடம்பிடித்தார். 1970 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கான முதல் பேரணியை நடத்தி அவர்களுக்கு அமெரிக்க அம்மா வானார். ஆம் மதர் ஆஃப் பிரைடு என்று இவரை அன்றும் இன்றும் நாளையும் உலகம் அழைக்கும். மேடமின் அர்ப்பணிப்பான உழைப்பு அப்படி. பாலின உறவுகள் பற்றி மிக வெளிப்படையாக பேசி இயங்கியவர் புற்றுநோயால் காலமானார். மாற்றுப்பாலினத்தவருக்கான சட்டங்க