இடுகைகள்

சாகசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனித்துவம் வாய்ந்த சாகச செயல்களை விரும்பும் பெண் காணாமல் போனால்... பேப்பர் டவுன்ஸ் 2015

படம்
        பேப்பர்டவுன்ஸ்        பேப்பர்டவுன்ஸ்  Directed by Jake Schreier , Based on Paper Towns by John Green, Music by Son Lux [a] Cinematography David Lanzenberg க்வென்டினுக்கு மார்கோ என்றால் ரொம்ப பிடிக்கும். மார்கோவுக்கு மனிதர்களை விட அட்வென்ச்சர் என்றால்  அவ்வளவு பிரியம். ஒருநாள் க்வென்டினை அழைத்துக்கொண்டு தன்னை ஏமாற்றிய ஆண்தோழனை அவமானப்படுத்தி, அவனது நண்பர்களுக்கும் பதிலடி கொடுக்கிறாள். அடுத்தநாள் பார்த்தால் மார்கோ அவள் வீட்டில் காணவில்லை. எங்கே போனாள் என்றே தெரியவில்லை. ஆனால் க்வென்டினுக்கு மட்டும் தெரியும் பல்வேறு க்ளூக்களை விட்டுச்செல்கிறாள். க்வென்டின் அதைத்தேடிக்கொண்டு நியூயார்க் வரை செல்கிறான். அங்கு அவனுக்கு  ஒரு அதிர்ச்சி காத்துக்கிடக்கிறது., என்ன அது என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி. படத்தில் மார்கோ என்ற டீனேஜ் பெண்ணின் கதாபாத்திரம்தான் மிகவும் முக்கியமானது. சுதந்திரம், காதல், நட்பு என அனைத்திலும் தெளிவாக இருக்கிறாள். பெற்றோரின் அடையாளத்தில் வாழாமல் சுயமாக வாழ விரும்பும் பாத்திரம். உண்மையில் இந்த பாத்திரம் யாருக்குமே அடிப்படையில் புரியாதது போல இருக்கும். ஆனால் யோசித்தா

முடிந்தால் தப்பித்துச் செல்லுங்கள்! - மனதை வலுவாக்கும் எஸ்கேப் ரூம்

படம்
முடிந்தால் தப்பித்துச் செல்லுங்கள்! கண்விழித்துப் பார்க்கிறீர்கள். ஓர் அறையில் மூன்று நபர்களோடு நீங்கள் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறீர்கள். அந்த இடத்திலிருந்து எப்படி தப்பிப்பீர்கள்? உங்களுக்கு உதவும் அனைத்து க்ளூக்களும் அதே அறையில்தான் உள்ளன என்பது முக்கியமான அம்சம். அவற்றை நீங்கள் அந்த அறையில் உள்ளவர்களின் உதவியுடன்தான் பெற்று வெளியேறமுடியும். இது முழுக்க உங்கள் மனத்துடன் நீங்கள் புரியும் போர் என்று சொல்லலாம். இந்த கான்செஃப்டை வைத்துத்தான் பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி உலகமெங்கும் களை கட்டுகிறது. அறையில் அடைக்கப்பட்டவர்களின் உளவியல் சாதாரண மனிதரை விட வேறுவகையாக சிந்திக்கிறது. உங்களுடன் அறையில் இருப்பவர்களை சில மணி நேரத்தில் அவர்கள் செய்யும் விஷயங்களை வைத்து நண்பர்களா, எதிரிகளா என தீர்மானித்து விட முடியும்.   உடலில் டோபமைன், அட்ரினலின் என இருவகை சுரப்புகளும் அதிகரிக்கும் உளவியல் போர் இது. உலகமெங்கும் இத்தகைய எஸ்கேப் அறைகள் நிறைய உள்ளன. அவற்றைப் பார்ப்போம். லாக்இன், மான்செஸ்டர் – இங்கிலாந்து நிஜம் கொஞ்சம், விர்ச்சுவல் ரியாலிட்டி கொஞ்சம் என கலந்து இந்த அறை உருவாக்கப்பட்டிருக்கும்.

சிறைக்கைதியை மீட்க அபாய போராட்டம் - வேய்ன் ஷெல்டன் அதிரடி!

படம்
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் வேய்ன் ஷெல்டன் தோன்றும் ஒரு பயணத்தின் கதை! துரோகத்தின் கதை ! லயன் காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் கலாக்ஜிஸ்தானில் நடைபெறும் விபத்து எப்படி முக்கியமான தொழிலதிபரின்(க்வெய்ல்) வணிக ஒப்பந்தத்திற்கு தடையாகிறது. இதற்கு காரணமான ஓட்டுநரை சிறையிலிருந்து மீட்க தொழிலதிபர் நினைக்கிறார். அதற்கு புகழ்பெற்ற ஷெல்டனை அழைக்கிறார்கள். ஷெல்டன் தன் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் செய்யநினைக்கிறார். ஆனால் தொழிலதிபரின் பி.ஏ. (கரினி) ஷெல்டனை ஏமாற்றி டபுள் கிராஸ் ஏஜெண்டாக மாறுகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள், வன்முறைகள், துரோகங்களை ஷெல்டன் எப்படி சமாளித்து சிறையிலிருந்து ஓட்டுநரை மீட்கிறார் என்பதுதான் கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை தனி புத்தகமாக போட்டு எழுதலாம். திருடர்களுக்கும் ஷெல்டனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஷெல்டன் குழுவைத் தீர்த்துக்கட்ட நடக்கும் குறுக்கும் மறுக்குமான துரோக சம்பவங்களை கதையை சுவாரசியப்படுத்துகின்றன. கதையில் ஷெல்டன் தன் வயதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டுதான் சண்டையிடுகிறார். இதனால் நேரட

எரிமலை அருகே மக்கள் வாழ்வது ஏன்?

படம்
குவாத்திமாலா, அகுவா எரிமலை ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலையின் அருகே மக்கள் வாழ்வது எதற்காக? செல்ஃபீ எடுப்பதற்காக அல்ல மக்களே. அங்குதான் விவசாயம், சுற்றுலா என அனைத்து விஷயங்களும் எளிமையாக கிடைக்கிறது. ஜப்பான், இந்தோனேஷியா, ஃபிஜி ஆகிய தீவுகளில் எரிமலையின் பெருமையை நீங்கள் காணலாம். ம எரிமலைக்குழம்பு என்பதை காரம் அதிகமாக வைத்த காரக்குழம்புடன் ஒப்பிட்டு நாம் திகிலாகிறோம். ஆனால் ஐஸ்லாந்து காரர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஹெக்லா எரிமலையை தங்களது பாரம்பரிய பெருமையாக நினைக்கிறார்கள். இன்றும் உலகில் இயங்கி வரும் எரிமலைகள்    Fuji, Vesuvius, Mt. St. Helens, or even Iceland's infamous Eyjafjallajökull   இவைதான். இவை அனைத்தின் அருகிலும் கணிசமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எரிமலைகள்தான் உலகின் நிறைய இடங்களில் புது குடியேற்றங்களை உருவாக்கின என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாகச வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் இதுபோன்ற வாழ்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.  நன்றி: க்யூரியாசிட்டி

அமெரிக்காவின் சாகசவீரன்!

படம்
அமெரிக்காவின் நாடோடி ! புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளினின் லிட்டில் ட்ராம்ப் படத்தை பலரும் மறக்க முடியாது . வேலை தேடி நாடோடியாக அலையும் மக்களை உலகிற்கு சொன்ன படம் அது . 1872 ஆம் ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோவில் பிறந்த லிவிங்ஸ்டனை நாடோடிகளின் ராஜா எனலாம் . தன் பதினோராவது பிறந்தநாளில் டீச்சரிடம் திட்டுவாங்கியவர் , அப்பாவுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடினார் . ரைபிள் , சிறிது பணம் , பிறந்தநாள் பரிசுகள் என பயணித்த லிவிங்ஸ்டன் , சில ஆண்டுகளுக்கு பிறகு 5 லட்சம் மைல்களை ஏழு டாலர்கள் செலவில் சுற்றி வந்திருந்தார் . வீட்டை விட்டு வந்து 30 ஆண்டுகள் ஆன பின்பு 1910 ஆம் ஆண்டு தன் அனுபவங்களை மெல்ல நூலாக எழுத தொடங்கியதோடு , தன் பெயரையும் A-No.1 என செல்லுமிடங்களெல்லாம் குறிப்பிடத் தொடங்கினார் . " நாடோடியாக அலைவது குணப்படுத்த முடியாதது . எனவே வீட்டில் பத்திரமாக இருங்கள் " என வார்னிங் கொடுத்த எழுதிய Hobo-Camp-Fire-Tales நூல் செம சேல்ஸ் . செலிபிரிட்டியானவர் பின்னர் மேரி ட்ரோகோஸ்கி என்ற பெண்ணை மனைவியாக்கினார் . சிறுவேலைகள் பார்த்துக்கொண்டே பல்வேறு இடங்களில் தனது அனுபங்கள