முடிந்தால் தப்பித்துச் செல்லுங்கள்! - மனதை வலுவாக்கும் எஸ்கேப் ரூம்
முடிந்தால் தப்பித்துச்
செல்லுங்கள்!
கண்விழித்துப் பார்க்கிறீர்கள்.
ஓர் அறையில் மூன்று நபர்களோடு நீங்கள் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறீர்கள். அந்த இடத்திலிருந்து
எப்படி தப்பிப்பீர்கள்? உங்களுக்கு உதவும் அனைத்து க்ளூக்களும் அதே அறையில்தான் உள்ளன
என்பது முக்கியமான அம்சம். அவற்றை நீங்கள் அந்த அறையில் உள்ளவர்களின் உதவியுடன்தான்
பெற்று வெளியேறமுடியும். இது முழுக்க உங்கள் மனத்துடன் நீங்கள் புரியும் போர் என்று
சொல்லலாம். இந்த கான்செஃப்டை வைத்துத்தான் பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி உலகமெங்கும் களை
கட்டுகிறது. அறையில் அடைக்கப்பட்டவர்களின் உளவியல் சாதாரண மனிதரை விட வேறுவகையாக சிந்திக்கிறது.
உங்களுடன் அறையில் இருப்பவர்களை சில மணி நேரத்தில் அவர்கள் செய்யும் விஷயங்களை வைத்து
நண்பர்களா, எதிரிகளா என தீர்மானித்து விட முடியும்.
உடலில் டோபமைன், அட்ரினலின்
என இருவகை சுரப்புகளும் அதிகரிக்கும் உளவியல் போர் இது.
உலகமெங்கும் இத்தகைய எஸ்கேப்
அறைகள் நிறைய உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
லாக்இன், மான்செஸ்டர் – இங்கிலாந்து
நிஜம் கொஞ்சம், விர்ச்சுவல்
ரியாலிட்டி கொஞ்சம் என கலந்து இந்த அறை உருவாக்கப்பட்டிருக்கும். இதில் நீங்கள் அங்கிருந்து
தப்பிப்பதோடு, அதிபரின் மகனையும் கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டும். கூடவே அறையில்
உள்ளே உள்ள அறையில் உங்கள் நண்பர்கள் கைவிலங்குகளிட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள்.
ஷெர்லாக்டு ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
இங்கு இரண்டு வாய்ப்புகள்
தரப்படுகின்றன. ஒரு மணி நேரத்தில் நீங்கள் அங்கிருந்து தப்பிக்கவேண்டும் அல்லது அதனை
அடித்து நொறுக்கிவிட்டு செல்ல வேண்டும். உலகின் முக்கியமான ரகசியங்களைக் கண்டுபிடிப்பதோடு,
அவற்றை ரகசியமாக ஓரிடத்தில் வைத்து பாதுகாக்கவும் வேண்டும்.
தி எஸ்கேப் கேம், அமெரிக்க நகரங்கள் 17
அழுக்கான சிறைச்சாலை அறைகளிலிருந்து
தப்பித்து விண்வெளிக்கலனுக்கு செல்லுவதுதான் உங்களுக்கான மிஷன். பார்க்க உண்மையாக இருப்பதுபோன்ற
தோற்றத்தில் தீம்கள் அமைக்கப்படிருப்பதுதான் இங்கு பெரும் சவால். க்ளூக்கள் அங்கேயே
இருக்கும். அதனைக் கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.
பேலஸ் கேம்ஸ், கலிபோர்னியா,
அமெரிக்கா
எஸ்கேப் ரூம் உருவாக்க கலைஞரான
ஹூடினி கண்டுபிடித்த நிறைய புதிர்கள் இருக்கும். நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்து வெல்ல
வேண்டும். முயன்று பாருங்கள்.
எஸ்கேபாலஜி
உலகம் முழுவதும்
இந்த வகை எஸ்கேப் அறைகள்,
ஸ்கூபி டூ கார்ட்டூனில் வரும் பேய்களை கண்டுபிடிக்க செல்வார்களே? அதுபோன்ற பல்வேறு
வித்தியாசமான தீம்களைக் கொண்டிருக்கும். நீர்மூழ்கி கப்பல், கைவிடப்பட்ட நகரம் என பல்வேறு
ரகங்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்.
கருத்துகள்
கருத்துரையிடுக