இடுகைகள்

டிஜிட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தாண்டில் மாறுவது என்னென்ன விஷயங்கள்?

படம்
giphy புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் சொல்லி காஜூ கத்திலி கொடுத்தால் போதுமா? இந்த ஆண்டில் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. ரயில் கட்டண உயர்வு புத்தாண்டு பரிசாக மத்திய அரசு நமக்கு அளித்துள்ளது. வேறு என்னென்ன விஷயங்கள் மாறுகின்றன என்று பார்ப்போம். சேமிப்புக்கணக்குக்கு காசு கிடையாது. சேமிப்பு கணக்கிலிருந்து நெப்ட் முறையில் யாருக்கு பணம் அனுப்பினாலும் சேவைக்கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை இணையம் அல்லது மொபைல் மூலம் செய்து சோதித்துப் பாருங்கள். பாதுகாப்பு முக்கியம் தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்துவிட்டு வாராக்கடன் கணக்கு எழுதியதில் பெரிய வங்கி எஸ்பிஐ. தற்போது வாடிக்கையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தால் கூட ஓடிபி கேட்கிறார்கள் இது இரவு 8மணியிலிருந்து காலை 8 மணி வரை அமலாகுமாம். உடையும் விண்டோஸ் விண்டோஸ் போன்களை உலகில் அரிதான மனிதர்களே தில்லாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் இதில் வாட்ஸ் அப் இயங்காது. பார்த்துக்கொள்ளுங்கள். உருப்படியான ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் வாங்குவது உங்களது சாமர்த்தியம். வலுக்கட்டாயமாக டிஜிட்டல்

இருண்டு போன இந்தியா - இணையத்தை முடக்கும் சர்வாதிகாரம்!

படம்
உலகம் முழுக்கவே இணையம் சார்ந்த தாக தொழில்கள் மாறி வருகின்றன. இந்த நேரத்தில் மின்சாரமும், இணையமும் தடைபட்டால் மொத்த நாடுமே ஸ்தம்பித்து விடும். இந்த கவனம் யாருக்கு இருக்க வேண்டும்? அரசுக்குத்தானே, ஆனால் அரசு தன் பொருளாதார, நிர்வாக முடிவுகளில் உள்ள சிக்கல்களை மக்களிடம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் 95 முறை இணைய சேவையை தடை செய்துள்ளது. காஷ்மீரில் செயல்படுத்தி வெற்றி கண்ட முறையை உள்துறை அமைச்சகம், தற்போது எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அமல் செய்து வருகிறது. இதன்விளைவாக இணையம் சார்ந்த அனைத்து தொழில்களும் பலத்த அடி வாங்கி வருகின்றன. குறிப்பாக ஊபர், ஓலா ஆகிய ஆப் சார்ந்த தொழில்கள் நிலைமை என்னாகும்? காஷ்மீரில் உலக நாடுகளிலேயே 137 நாட்கள் இணையத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டில்லி, மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத்தடுக்க இந்த மாநிலங்களில் இணையத்தை முடக்கும் முடிவை உள்துறை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதனால் எல்லாம் போராட்டம் நிற்பதா

டிரெண்ட் செட்டர்கள் 2019 - டிஜிட்டல் தொழிலதிபர்கள்

படம்
டிரெண்ட் செட்டர்கள் புவன் பாம் யூடியூப் - பிபி கி வைன்ஸ் 15.4 மில்லியன் பார்வையாளர்கள் 2015 ஆம் ஆண்டு தொடங்கிய யூடியூப் சேனல் பல்வேறு காமெடி வீடியோக்களால் நிரம்பி வழிகிறது. ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பாதிப்பு நிகழ, அதனை டிவி நிருபர் காட்சிபடுத்துகிறார். மகனை இழந்த தாயிடம், உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதனைப் பார்த்த புவன், அதனை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை தயார் செய்து பதிவிட்டார். அப்போது அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பின்னர் 2015ஆம்ஆண்டு யூடியூப் சேனலைத் தொடங்கி, டீனேஜ் பிரச்னைகள் முதற்கொண்டு ஆன்டி பிரச்னை வரை அனைத்தையும் பகடியாக பதிவுசெய்யத் தொடங்கினார் புவன். டிட்டு மாமா, ஜான்கி ஜி என்ற இவரின் பல்வேறு வேடங்கள் இணையத்தில் செம ஹிட் அடித்தன. “நான் நல்ல கருத்தை வீடியோக்கள் வழியே சொல்ல நினைக்கிறேன். அதில்  சிலசமயங்களில் கடும் சவாலை சந்திக்கிறேன்.’ என்கிறார். ஜோனிதா காந்தி பாடகி ஜோனிதா மியூசிக் - யூடியூப் சேனல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜோனிதா கனடாவில் படித்து வளர்ந்தவர். இன்று இந்திய மொழிகளில் பத்துக்கும் மேற