இடுகைகள்

குங்குமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையில் வேலை கிடைச்சிருச்சேய்! - பதிப்பக பணி

படம்
மனமறிய ஆவல் - கடிதங்கள் பத்திரிகையில் வேலை என்பது கடைசி புகலிடமாக இருக்கும் என நினைத்தேன். காரணம், நாவல்கள் படித்தாலும் அது பற்றி எழுதினாலும் சரி அது மற்றவர்களுக்கு தெரிய பத்திரிகைதான் ஒரே வழி. இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று வந்தாலும் அன்று எனக்கு அதில் ரெஸ்யூம் அனுப்பி வேலை வாங்கும் யுக்தி தெரியவில்லை. சிறுபான்மை இதழ் ஒன்றில் தட்டச்சு செய்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எழுதுபவனுக்கு தட்டச்சில் என்ன வேலை? மூத்த பெண் இதழியலாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அதுவும் சென்னையில் கோட்டூர்புரத்தில் நேர்காணலுக்கு சென்றபோதுதான். எப்போதும் போல நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு முன்னும் பின்னுமான நான்லீனியரில் பதில் சொல்லியதில் அவர்களே ஒரு காஃபி எனக்கும் மட்டும் என ஆர்டர் செய்து குடித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என அனுப்பி விட்டார்கள். பிறகு இரு மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்து இப்படி இதழ் ஒன்றில் வேலை செய்கிறீர்களாக என்று கேட்டார். சரி என்றேன். அப்புறம் கிடைத்ததுதான் தட்டச்சுப்பணி. வேலை, ஆசிரியர் என இரண்டுமே சரியில்லைதான். ஆனால் அலுவலகத்தில் இருந்த நூல்கள

இதோ இதோ அறிவியல் !

படம்
நிஜமா ? பொய்யா ? யானைகள் எதையும் மறப்பதில்லை . பொய்யல்ல ; உண்மை . விலங்குகளில் பெரிய மூளை கொண்டதோடு அதை சீரியஸாக பயன்படுத்தும் விலங்கும் யானைதான் . யானை தன் குட்டியை பிரிந்து 23 ஆண்டுகள் பிறகும் அடையாளம் கண்டுகொள்ளும் புத்திசாலித்தனம் யானைக்குண்டு . உணவுக்கு செல்லும் பாதையையும் காம்பேக்டாக அமைத்து கூட்டமாக வாழும் பேருயிர் யானை மட்டுமே . லெமிங்க்ஸ் தற்கொலை செய்துகொள்ளுமா ? நிச்சயம் இல்லை . 1530 களில் ஆய்வாளர் புயலில் வானிலிருந்து லெமிங்க்ஸ் ( ஆர்க்டிக் பகுதி உயிரி ) விழுகின்றன என வதந்தி பரப்பினார் . இடம்பெயர்வின்போது லெமிங்க்ஸ் நீரில் குதித்து வேறிடம் செல்லும் பயணத்தில் அவை சில இறக்கின்றன . 1958 ஆம் ஆண்டு ரிலீசான டாகுமெண்டரியில் இடம்பெற்ற தவறான செய்தி இது . கோழிகளுக்கு பற்களுண்டா ? கிடையாது . கற்காலத்தில் வாழ்ந்த பாட்டன் பூட்டன் கோழிகளின் முன்னோர்களுக்கு பற்கள் இருந்திருக்க சான்ஸ் உண்டு . இன்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ள கோழிகளுக்கு பற்கள் கிடையாது . அப்படி பற்கள் இருந்தால் அவை அசைபோட்டு சாவகாசமாக சாப்பிட முடியுமே !  2 மோடி விமானம் ரெடி !

குற்ற கிராமத்தை திருத்திய வினோபா பாவே ஆசிரம தம்பதி!

படம்
குற்ற கிராமத்தை திருத்திய வினோபா பாவே ஆசிரம தம்பதி ! - ச . அன்பரசு உத்தரப்பிரதேசத்தின் பன்காதாரா கிராமம் . வினோபாவே ஆஸ்ரமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் கற்கும் 1400 மாணவர்கள் கோரஸாக வாசிக்கும் ஒலி மனதை மயக்குகிறது . கிராமத்திலுள்ள பெண்களும் சும்மாயில்லை , வீடுகளில் துணிகளை டெட்லைன் குறித்து வைத்து பரபரவென தைத்துக்கொண்டிருக்கிறார்கள் . இந்த மாற்றங்கள் சாத்தியமானதற்கு ஒரே காரணம் , 1980 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வினோபாவே ஆசிரமத்தை தொடங்கிய ரமேஷ் , விம்லா தம்பதியினர்தான் . காந்தியை முன்னோடியாக கொண்டு சர்வோதயா , பூதான திட்டங்களை நாடு முழுக்க பரப்பிய வினோபாபாவேயின் சமூக சீர்திருத்த கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் சாஜஹன்பூரைச்சேர்ந்த இளைஞரான ரமேஷ் . பாதயாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் ஆச்சார்ய வினோபாவைச் சந்தித்ததுதான் ரமேஷின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை . " நான் மக்களின் யதார்த்த வாழ்வில் பங்கேற்று அவர்களின் பிரச்னைகளை தீர்க்க விரும்பினேன் . அப்போதுதான் சாராயம் காய்ச்சுவது தொடர்பான க்ரைம் ரெகார்டுகளில் எப்போதும் இடம்பெற்று வந்த பன்க

ஃபிபா உலக கோப்பை ஜூனியர்! 2017

படம்
இந்தியாவின் முதல் ஃபிபா U-17 உலக கோப்பை ! - ச . அன்பரசு   கிரிக்கெட்டின் முக்கியத்துவம் மற்ற கேம்ஸ்களுக்கு மக்கள் தருவதில்லை என்ற அங்கலாய்ப்பு இனி அவசியமேயில்லை . அக் .6 லிருந்து இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பை உற்சாகமாக தொடங்கவிருக்கிறது . இந்திய அணி இதில் பங்கேற்பது மட்டுமல்ல , அஸெர்பைஜான் , அயர்லாந்து , உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை தோற்கடித்து போட்டியை ஏற்று நடத்தும் கோல்டன் சான்ஸையும் பெற்றுள்ளது சூப்பர் ஸ்பெஷல் தருணம் . அணிகள் எத்தனை ? இந்தியா (A1) முதல் பிரிவில் அமெரிக்கா , கானா , கொலம்பியா ஆகிய அணிகளோடு இடம்பிடித்துள்ளது . பெரிய அனுபவமில்லாத இந்திய இளைஞர் படை துணிச்சலோடு களமிறங்கும் இந்த கால்பந்து போரில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன . முதல் போட்டி ஆக .6 ஆம் தேதி அமெரிக்க அணியோடு டெல்லியில் தொடங்குகிறது . ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 6 பிரிவுகளில் 24 டீம்கள் அணிவகுத்துள்ளன . ரேஸில் இந்தியா ! இந்தியா பதினேழாவது உலககோப்பை கால்பந்து போட்டிய