இடுகைகள்

பாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலில் வாங்கிய காரை என்னால் மறக்கவே முடியாது! - அனு மாலிக், இசையமைப்பாளர்

படம்
              இசையமைப்பாளர் அனுமாலிக் இந்துஸ்தான் டைம்ஸ் தினேஷ் ரஹேஜா இருபத்திரெண்டு வயதில் உங்கள் தொழில் எப்படி இருந்தது ? டீனேஜ் வயது அல்லவா ? எனது முதல் பாடலை அன்றைய சூப்பர்ஸ்டார் ஆஷா போன்ஸ்லேவுடன் தொ்டங்கினேன் . ஹண்டர்வாலி 77 என்ற படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மோகன் சோடி தொடங்கினார் . அதற்கு இசையமைக்க எனது தந்தை சர்தார் அலி ஒப்பந்தமானார் . அப்போது ஏதோ ஒரு பாடலை நான் ஹம்மிங் செய்துகொண்டிருக்க இயக்குநர் உடனே என்னைப் பிடித்து பாடல் ஒன்றைப் பாட வைத்துவிட்டார் . அப்போது நான் வாய்ப்புக்காக பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன் . காற்றில் காதல் இருப்பதாக தெரிகிறதே ? நான் எனது மனைவி அஞ்சுவை அவளுடைய இருபத்தியொரு வயதில் திருமணம் செய்துகொண்டேன் . அப்போது எனக்கு வயது இருபத்திரெண்டு . மிதிபாய் கல்லூரியில் நாங்கள் படித்தபோது காதல் மலர்ந்து உறவு உருவானது . முதல் பாடலை எப்போது எழுதினீர்கள் ? நான் அஞ்சுவை காதலித்துக்கொண்டிருந்தேன் . அவளை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன் . அவள் திடீரென என்னைப் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடு

ஒலியின் பயணம்!- அன்றிலிருந்து இன்றுவரை

படம்
3400 ஆண்டுகள் ஆகின்றன. நாம் தகவல் தொடர்பு விஷயங்களை கண்டறியத் தொடங்கி. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்களை விட ஒலி மக்களை கவனிக்க வைக்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஒளி பாதிவேலையை செய்தால், ஒலி மீதி வேலையைச் செய்கிறது. மெசபடோமியர்கள் செய்திகளை எழுதி அதனை சத்தமாக பேசி பிறருக்கு செய்தியை கடத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட மிகத்தரமான ஒலியை நம்மால் கேட்கமுடியவில்லை என்றே சொல்லவேண்டும். இன்று நாம் ஸ்மார்ட்போன் அல்லது யூடிபில் 8டி ஒலியை கேட்டு மகிழ்ந்து வருகிறோம். அந்த ஒலியின் பயணத்தை நாம் பார்ப்போம். 1860 போன் ஆட்டோகிராப் 1853 ஆம் ஆண்டு எட்வர்ட் மரியன்வில்லே என்ற கண்டுபிடிப்பாளர் மனிதர்களின் குரலை பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதில் பல்வேறு விஷயங்களை மேம்பாடு செய்ய முடியவில்லை. குறிப்பாக திரும்ப போட்டு பார்த்தால்தானே அதில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும். 1886 வேக்ஸ் சிலிண்டர் - போனோகிராப் இதனை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கினார். பின்னர், அலெக்சாண்டர் கிரகாம் பெல், மேம்படுத்தி கிராம போன் கருவியைக் கண்டுபிடித்தார். இதில்தான் பதிவு செய்த குரல்களை தி

சோகப்பாடல்களை கேட்கப் பிடிக்கிறதா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சோகமாக இருக்கும்போது சோக பாடல்களை ஏன் கேட்கிறோம்? சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது பாடலை கேட்டுவிட்டு இந்த பதிலை எழுதுகிறேன். இயல்பாகவே யேசுதாஸின் குரலில் டன் கணக்கில் சோகம் இருக்கும். பாடல் வரிகளும் அதில் சோகத்தை பிழிய, பாடல் ப ப்பரப்பா ஹிட். பொதுவாக நாம் தனியாக இருக்கிறோம், சதியால் வீழ்த்தப்பட்டோம் என்றெல்லாம் மனதில் புலம்பல் நம் காதுக்குள் கேட்க இரவு தேவை. அதில்தான் பகலின் போலித்தனங்கள் எல்லாம் உடையும். எனவே சோகப்பாட்டுகள் அலையலையாக கிளம்புவது இரவில்தான். அந்த நேரத்தில் நாம் பொன்மகள் வந்தாள் ரீமிக்ஸ் கேட்ட முடியாது. நம் மனமே குழம்பிவிடும். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, அல்லது சோகமாகவா என திகைப்பாகும். லிம்மெரிக் பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் இப்படி சோகத்திற்கு சோகப்பாட்டு போட்டு அதிலிருந்து வெளியே வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சர்வே ஒன்றை எடுத்து வெளியிட்டார்கள். எனவே அந்தந்த நேரத்தில் அந்தந்த உணர்ச்சியோடு இருப்பது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. நன்றி - பிபிசி

பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் வரலாறு! - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! ஹேப்பி பர்த்டே டூ யூ! பீட்டில்ஸ் பிரிட்டிஷ் பேண்ட்டின் பாடல்களை விட பிரபலமான பாடல்கள் உலகில் உண்டு. அதில் ஒன்றுதான், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். இப்பாடலை 1889 ஆம் ஆண்டு பார்ட்டி ஹில் மற்றும் அவரது சகோதரியான மில்ட்ரெட் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகம் முழுவதும் இப்பாடல் பாடப்பெற்று வருகிறது. கேக்கைத் தின்னும் வெறியில் பாடலைக் கூட பாடாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் பாடலின் வரிகள் மனதில் வராமல் இருக்காது. அதுபற்றிய  தகவல்கள்: 1893 ஆம் ஆண்டு இப்பாடல் ஹில் சகோதரிகளால் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்பது மாற்று வார்த்தையாக சேர்க்கப்பட்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு குட்மார்னிங் டு ஆல் எனத் தொடங்கும் பாடலில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்ற வார்த்தையும் முதன்முதலாக இடம்பெற்றது. 1933 ஆம் ஆண்டில் தந்தியில் செய்தியாக அனுப்ப ப்பட்ட முதல் பாடல், இதுதான். 1935 ஆம் ஆண்டு இப்பாடலுக்கான காப்புரிமை ஹில் சகோதரிகளுக்கு கிடைத்தது. 1955 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பியர் மான்ட்யூக்ஸ் என்பவரின் 80 வது பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுக்கு ட