இடுகைகள்

மழைக்காலத்தின் ஒரு சிறு வெயில்பொழுது

படம்
மழைக்காலத்தின்  ஒரு சிறு வெயில்பொழுது மோகனசுந்தரம் தலைப்பு: மழைக்காலத்தின் ஒரு  சிறுவெயில்பொழுது வகை: புனைவு ஆசிரியர்: மோகனசுந்தரம் தொகுப்பாசிரியர்கள்: ரிச்சர்ட் மஹாதேவ், பியர்சன் கயே உருவாக்கக்குழு: லிஸா ஜோஸ், ஷைனி, நிகில் வாசுதேவ் பதிப்பாசிரியர்கள்: அம்பறா சுப்பிரமணி, லோக்கல் ப்ரூஸ்லீ, சுய்யா மின்னூல் பதிப்புரிமை மற்றும் வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ் & Komalimedai.blogspot.in மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com வெளியீடு: ஏப்ரல் 2015 அட்டை வடிவமைப்பு: Incrdible bug கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை யாவரும் வாசிக்கலாம், பகிரலாம். மூலத்தில் மாற்றம் ஏதும் இல்லாத முறையில் பயன்படுத்தவேண்டும். வணிக முறையில் பயன்படுத்தும்போது வலைப்பூ, மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும். பேஜ் 3 இனிய தோழமைகளுக்கு, வணக்கம். இந்த நூலைப்பற்றி கூற வேண்டுமெனில் இது காதல் காக்டெய்ல் எழுத்துக்கள் என்று கூறலாம். இதுவரை ஆரா பிரஸ் பதிப்பித்த நூல்கள் அனைத்தும் கட்டுரைகள் என்று மட்டும் இருந்தன;

நூல்வெளி

படம்
19                                                                      அபிதா                                                             லா.ச. ராமாமிர்தம்                                                                 வ.உ.சி பதிப்பகம் கரடிமலையிலிருந்து ஒரு பிணக்கினால் வேறு ஊருக்கு வந்து சேருபவனுக்கு கிடைக்கும் வேலை பின்னாளில் அவனுக்கு வசதியான வாழ்க்கை, இசைவான மனைவி அமைய காரணமாகிறது. ஆனால் அவன் விரும்பியது கரடிமலையில் உள்ள ஒரு பெண்ணின் மனதை மட்டுமே. முயற்சித்து தோல்வியுற்றது பெரும் பாரமாய் நெஞ்சையழுத்த அவன் கரடிமலைக்கு தன் மனைவியோடு சென்று தன் பழைய தோழியைத்தேடுகிறான். அவள் கிடைத்தாளா, அவள் வாழ்வின், குழந்தைகள் உள்ளார்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு மீபொருண்மைவாத பதில்தான் லா.ச.ராவின் 'அபிதா'. நாவல் என்பதைவிட கவிதை நூல் போல எனக்குறிப்பிடலாம். முழுக்க அக உணர்வுகளை, தீவிரமான உணர்வு உந்துதலான உணர்ச்சிகளை கவித்துவ மொழியில் வாசகனோடு பகிர்ந்துகொள்கிறார் லா.ச.ரா. தன

உணவுகளை ஆராய பெண் ஷெர்லாக் ஹோம்ஸ் வருகிறார்!

      உணவுகளை ஆராய பெண் ஷெர்லாக் ஹோம்ஸ் வருகிறார்! அனிஷா திமான்                            தமிழில்: ஜோ ஃபாக்ஸ் பார்ச்சூன் பட்டியலிட்ட 500 நிறுவனங்களில் வெற்றிகரமான மேலாண்மை ஆலோசகராக இருக்கும் வாணி ஹரி இணையத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற மனிதர்களில் பாரக் ஒபாமா, ஜே.கே. ரௌலிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 25 வயதான வாணி ஹரி உடல் எடை அதிகமாகி பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளுடன் மாற்றம் தேவைப்படும் நிலையில் இதற்கான மூலகாரணத்தை அறியாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ''மற்ற அனைத்து மக்களைப்போலவே நானும் அமெரிக்க உணவுமுறைப்பழக்கத்தை பின்பற்றி வந்தேன். அலுவலகத்தில் கிடைக்கும் உணவுகள் (அ) சாலையோரத்தில் கிடைக்கும் உணவுகளையும் நான் வேலை செய்யும் பரபரப்பான வேலைநேரங்களுக்கிடையில் சாப்பிட்டுவிட்டு மேலாண்மை ஆலோசகராக பணிபுரிந்துவந்தேன். அதுவே பின் என் உடலை கடுமையான நோய்க்கு ஆளாக்கியது'' என்று கூறும் வாணிஹரியின் பெற்றோர் இவர் பிறப்பதற்கு முன்பே பஞ்சாபிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து வந்தவர்களாவ

டாரன்டினோ ஹிந்திப்படத்தினை இங்கு உருவாக்க முடியுமா?

நேர்காணல் டாரன்டினோ ஹிந்திப்படத்தினை இங்கு உருவாக்க முடியுமா? மெஹூல் எஸ். தாக்கர் தமிழில்: லாய்ட்டர் லூன் இன்றைய பாலிவுட்டில் மிகப்பெரும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராதான் என்றாலும், ஹாலிவுட்டில் அவர் இயக்கி, தயாரிக்கும் ப்ரோக்கன் ஹார்ஸ் ஆங்கிலத் திரைப்படத்திற்கு இந்த நாற்பது ஆண்டு அனுபவங்கள் உதவப் போவதில்லை. யதார்த்தமான இந்த நேர்காணலில் எதையும் தான் கற்கவில்லை என்று கூறுகிறார்.  ஆங்கிலப்படத்தினை எழுதி, தயாரித்து, இயக்கும் முதல் இந்தியர் நீங்கள் என்பதில் பெருமைப்படுகிறீர்களா? படத்தினை உருவாக்கும்போது, நான்தான் முதல் நபர் என்று அறியவில்லை. என் மனதில் அப்போது இருந்தது ஆர்வமும், கனவும், ஹாலிவுட் உலகம் நம்மை எப்போதும் மேலிருந்து கீழாகப் பார்க்கிறதே என்கிற சிறிது கோபமும்தான். ஏன் அப்படிக்கூறுகிறீர்கள்? சிறந்த திரைப்படங்களை எடுத்தாலும், பாடல்களை பாடுவதன் மூலம் நாம் அதனை மாற்றிவிடுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஏன் நமது இயக்குநர்களும் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். நான் பள்ளியில் படித்து