இடுகைகள்

அறிவியல்- விண்வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியில் இந்தியர்கள் முன்னேறி வருகிறார்களா?

படம்
விண்வெளி பிரைவேட் லிட் . நாசா , இஸ் ‌ ரோ என கோலாச்சி வந்த விண்வெளி பந்தயத்தில் இனி தனியார் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன . ஸ்பேஸ் எக்ஸ் எலன் மஸ்க் , வர்ஜின் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் உலகளவில் விண்வெளி டூர் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்துகின்றனர் . தற்போது இந்தியாவிலும் இதற்கென தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன . கடந்த மாதம் பிப் .6 அன்று எலன்மஸ்க் விண்வெளிக்கு தன் டெஸ்லா காரையே அனுப்பி சுற்றிவரச்செய்தார் . எலன்மஸ்கின் முயற்சிகள்தான் மைசூரிலுள்ள பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரோகன் கணபதிக்கு இன்ஸ்பிரேஷன் . தன் 22 வயதில் இந்நிறுவனத்தைத் தொடங்கிய ரோகன் , 2016 ஆம் ஆண்டு இஸ் ‌ ரோவுடன் ஒப்பந்தம் செய்யுமளவு முன்னேறியுள்ளார் . மேலும் வணிகரீதியிலான ராக்கெட் தொழிற்நுட்பத்திற்கான குடியரசுத்தலைவர் விருதையும் பெற்றுள்ளனர் . " ராக்கெட்டுகள் தற்போது 40 ட்ரான்ஸ்பான்டர்களை தூக்கிச்செல்கிறது என்றால் , எரிபொருள் பயன்பாட்டை குறைத்தால் நூற்றியெட்டு ட்ரான்ஸ்பான்டர்களை சுமந்து செல்ல முடியும் " என ஆர்வமாக பேசுகிறார் ரோகன் கணபதி . உந்துவிசைக்கு மரபாக வே