இடுகைகள்

குங்குமம் - உலக அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணுஆயுதப்போர் 3.0!-

படம்
அணுஆயுதப்போர் 3.0!- ச . அன்பரசு போர் வரட்டும் என ரஜினி எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியாது . உண்மையிலே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போவதற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன . 1992 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ் , நெவடாவில் பனிப்போர்காலத்தில் ஆயிரக்கணக்கில் நடைபெற்று வந்த அணு ஆயுத சோதனைகளுக்கு தற்காலிக தடைவிதித்தார் . அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும் அங்கிருந்து வெளியேறினார்கள் . நிலவின் குழிகளாக நிறைந்து பாலைவனமாக நீளும் தெற்கு நெவடா , இனியும் ஆளரவமற்று கிடக்காது . காரணம் , அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள்தான் . கடந்தாண்டு ட்ரம்ப் அரசு , அணுவாற்றல் துறையை தயார்படுத்த சிக்னல் தந்துவிட்டார் .   அரசியல் காரணங்கள் என்றாலும் ஆயுதங்களுக்கான பட்ஜெட் போர் பற்றிய பதட்டத்தை அரசின் பல இடங்களிலும் ஏற்படுத்தியுள்ளது .   அமெரிக்காவும் அதிரடி எதிரிகளும் ! அமெரிக்கா ஏவுகணைகளை தயாரித்தால் அதன் பிறவி எதிரியான ரஷ்யாவின் புதின் , வடகொரியாவின் கிம் ஜாங் உன் , இரானின் அயதுல்லா அலி கமினேனி ஆகியோர் தேமேயென்று வேடிக்கை பார்ப்பார்களா ? பனிப்போரின்போது , ரஷ்யாவின் மீது பல்வேறு குற்ற