இடுகைகள்

சாதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு உண்டு என்பதை நிரூபித்தவர்! - தி பாடி ஷாப் - அனிதா ரோடிக்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அனிதா ரோடிக்     அனிதா , தனது வணிக வெற்றியை விட அதனைப் பெற எந்த வழியில் சென்றார் , எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தினார் என்பதற்காக அவரை பலரும் வியந்து போற்றுகின்றனர் . 2007 ஆம் ஆண்டு அனிதா காலமானார் . வணிகம் சார்ந்து சூழலை பாதிக்காமல் வணிகம் செய்வது பேச்சாக இருந்த காலகட்டத்தில் அதனை செயலாக மாற்றியவர் அனிதா . இவர் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார் . இத்தாலியைச் சேர்ந்த அகதிகளாக இவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறியவர்கள் . இவர்கள் இங்கிலாந்தில் கஃபே நடத்திக் கொண்டிருந்தார்கள் . அனிதாவின் அம்மா , அவரது அப்பாவின் தம்பி ஒருவரையே பின்னாளில் திருமணம் செய்துகொண்டார் . ஹென்றி என்ற இவர் , சில ஆண்டுகளிலேயே காலமானார் . கல்வி கற்று இஸ்ரேலில் பணிபுரிந்தார் அனிதா . பிறகு , இவரது அம்மா மூலம் கோடன் ரோடிக் என்பவர் அறிமுகமானார் . அனிதாவுக்கும் ரோடிக்கும் பழக்க வழக்கங்கள் ஒன்றாக இருக்க சில நாட்களிலேயே அவரது வீட்டில் தங்கி ஒன்றாக வாழத் தொடங்கினார் இவர்களது வாழ்க்கை அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் ஒன்றாகவே கழிந

அறிவியல், கணிதம், கணினி சாதனைகளை போராடி சாதித்த பெண்கள்!

படம்
        எமிலி டு சடலெட் கணிதவியலாளர் , இயற்பியலாளர் , எழுத்தாளர் எமிலி பிரான்சைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்தார் . 1706 இல் பிறந்தவர் , தனது மகளை பல்வேறு சிந்தனையாளர்கள் , எழுத்தாளர்கள் விவாதிக்கும் இடங்களுக்கு செல்ல அனுமதித்தார் இவருக்கு லத்தீன் கிரேக்கம் , ஜெர்மன் , ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் புகழ்பெற்றார் . எமிலியின் துணைவராக த த்துவ வியலாளர் வால்டேர் இருந்தார் . இருவரும் சேர்ந்து ஒன்றாக நூலை எழுதினர் அறிவியல் ஆய்வகத்தை வீட்டிலேயே உருவாக்கி வைத்திருந்தார் . நியூட்டனின் பல்வேறு கோட்பாடுகளை மொழிபெயர்ப்பு செய்தார் . வானியல் , ஈர்ப்புவிசை இயற்கை ஒளி , நிறம் ஆகியவற்றைப் பற்றிய புது கண்டுபிடிப்புகளை பலரும் படிக்க எமிலியின் மொழிபெயர்ப்பு உதவியது . வால்டேர் , எமிலியைப் பற்றி பெண்களி்ல யாரும் இந்தளவு கற்க முடியாது என பெருமையாக கூறினார் . பாரிசில் உள்ள அறிவியல் கழகத்தில் நெருப்பின் தன்மை பற்றிய தனது அறிவியல் அறிக்கையை தாக்கல் செய்தார் . அடா லவ்லேஸ் கணினி கோடிங்கை முதலில் எழுதிய பெண்மணி அமெரிக்க ராணுவத்தில் உருவாக்கப்பட்ட அடா என

நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

படம்
              சாதனைப் பெண்கள் கீது வர்மா ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர் , இந்துஸ்தான் யுனிலீவர் கீது வர்மா , நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார் . உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள் , உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது . நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம் , நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி , ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார் . 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா . வெஜிடேரியன் பட்சர் , கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார் . கீதா கோபிநாத் உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா . தனது ப

தடைகளை சமாளித்து வென்ற கார்ப்பரேட் நிறுவன பெண்கள்! - நந்தினி பிரமள், நுவ்ருதி ராய், ரிச்சா அரோரா, சமீனா ஹமீத்

படம்
                    நந்தினி பிரமள் எக்சிகியூட்டிவ் டைரக்டர் , பிரமள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டு்ம் ஆறு பிராண்டுகள் மூலம் 418 கோடி ரூபாய் வருமானத்தை பிரமள் நிறுவனம் சாதித்துள்ளது . இதற்கு ந ந்தினியின் ஐடியாக்களே முக்கியமான காரணம் . இந்த நிறுவனத்தில் தற்போது பத்தாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் . மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் பிரமள் நிறுவனம் சாதித்து வருகிறது . சாரிடான் , ஐபில் ஆகிய மருந்து பிராண்டுகள் இந்த நிறுவனத்துடையதுதான் . அபோட் , கார்லைட் எனும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நந்தினி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார் . பிரமள் நிறுவனததின் மனிதவளத்துறை மற்றும் ஐடி செயல்பாடுகளை நந்தினி கவனிக்கிறார் . இவரை அஜய் பிரமள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார் . இவர் வந்தபிறகு நிறுவனம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறது . தற்போது குழந்தைகளுக்கான பிராண்டு ஒன்றைத் தொடங்கியுள்ளனர் . அடுத்து மாஸ்க் , சானிடைசர் ஆகியவற்றையும் தயாரித்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர் . நுவ்ருதி ராய் இந்தியத் தலைவர் , இன்டெல் நுவருதியை பல்வேறு சவால்கள

தலைமைத்துவ பெண்கள்! - இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களைப் பற்றிய அறிமுகம்!

படம்
            சபா பூனாவாலா ஒப்பனைக்கலைஞர் , சூழலியலாளர் நான் விலங்குகளின் நலனுக்காகவே முதலில் வேலை செய்துவந்தேன் . பிறகுதான் அழகுக்கலை பக்கம் வந்தேன் என்பவரின் சம்பாத்தியத்தில் 80 சதவீதம் விலங்குகளின் நலனுக்கே செல்கிறது . வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை . என்கேஷா , நாலேகு என்ற இரு யானைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . அழகுக்கலை துறைக்கு தனது 17 வயதில் உள்ளே வந்தவர் சபா . தற்போது நாய்களை பயிற்றுவிப்பதெற்கென தனி அகாடமி தொடங்கி நடத்தி வருகிறார் . ஒருவர் நாய்களை தனது குடும்ப உறுப்பினர் போலவே கருதவேண்டும் என்றுதான் அகாடமி தொடங்கினேன் . அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்கிறார் . ராஷ்மி உர்த்வாரேஷி வாகன பொறியியலாளர் தானியங்கி ஆராய்ச்சி அசோசியேஷன் அமைப்பின் முன்னாள் இயக்குநர் . நாரி சக்தி புரஷ்கார் எனும் விருதை கடந்த ஆண்டு பெற்றவர் . தானியங்கி வாகனத்துறையின் பாதுகாப்பு . சூழல் தொடர்பான விவகாரங்கள் , மின் வாகனங்கள் தொடர்பாக முக்கியமான ஆளுமை மேற்சொன்ன அமைப்பின் முதல் பெண் இயக்குநர் ராஷ்மிதான் . பெண்கள் கல்வி தொடர்பாக நூல் ஒன்றை எழுதுகிறார

மருத்துவம், பேஸ்கட்பால், வடிவமைப்பு என பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியப் பெண்கள்! -பெண்களின் இ்ந்தியா!

படம்
          தலைமைத்துவ பெண்கள் டாக்டர் கனன்பாலா யெலிகார் கல்வியாளர் , நிர்வாகி யெலிகர் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக இருந்தவர் . இதுவரை இத்துறையில் 800 க்கும் மேற்பட்ட உரைகளை பெண்கள் தொடர்பாக பேசியுள்ளார் . இதில் ரத்தசோகை , எய்ட்ஸ் , குடும்பக்கட்டுப்பாடு , மார்பக புற்றுநோய் ஆகியவை உள்ளடங்கும் . நேர்காணலுக்கு அணுகுபவர்களுக்கு கூட சற்றுப் பொறுங்கள் என்று சொல்லமுடியாதபடி தனது கீழுள்ள பணியாளர்களுக்கு ஆன்லைன் மருத்துவ செயல்பாடுகளை விளக்கம் அளித்து செய்துகொண்டிருக்கிறார் . பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரித்த சாதனைக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் . மேலும் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்டும் விழிப்புணர்வு தொடர்பாகவும் விருது பெற்றிருக்கிறார் . மகாராஷ்டிரா முதல்வரின் பாராட்டுக்களைப் பெற்றதற்கு காரணம் , பல்வேறு தடைகளை தாண்டி தனது கடன் பணி செய்வதே என தன்னை ஈடுபடுத்திக்கொண்டதுதான் என யெலிகர் நம்புகிறார் . பெமினா சாந்தாபாய் துல்சிராம் சகாரே யூடியூப் பிரபலம் சாந்தாபாய் தான் கற்ற விஷய