இடுகைகள்

கண்ட்ரோல் + டெலிட் அழித்து கடந்த காலத்தை கூகுளில் அழிக்க முடியுமா? - ஒரு அலசல்

படம்
              கூகுளில் கடந்த காலத்தை மறைப்பது எப்படி ? காவல்துறையில் ஒருவர் பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டால் அது தினகரன் , தினத்தந்தி என அனைத்திலும் செய்தியாகும் . ஆனால் அவர் அக்குற்றச்சாட்டு தவறானது என்றால் அப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்று எந்த செய்தியும் பிரசுரமாகாது . இன்று டிஜிட்டல் உலகிலும் அதே நிலைதான் உள்ளது . இதில் ஒரு மாற்றம் உள்ளது . ஒருவர் தவறுசெய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு பழைய வாழ்க்கையை வாழ நினைத்தாலும் அது முடியாது . காரணம் , வேலை தேடி நிறுவனத்திற்கு சென்றால் அவரைப் பற்றிய பின்னணியைத் தேடும்போது எதிர்மறையான செய்திகளை கூகுள் எளிதாக காட்டிக்கொடுக்கிறது . இப்படி கூகுள் அத்தனை விஷயங்களையும் தனது சர்வரில் தேக்கி வைத்திருப்பதால் , குற்றங்களை மறந்த அமைதியாக வாழ நினைப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பே கிடைப்பதில்லை . கடந்தகாலம் என்பது காலைப்பிடித்த உடும்பாக தடுக்க புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமல் பலரும் தடுமாறி வருகிறார்கள் . இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது .    குழந்தைகளை பாலியல் சீண்டல் , வல்லுறவு , கொலை செய்தவர்களைப் பற்றியும் கூட தகவல்க

பதக்கம் வென்றவர் மட்டும்தான் முக்கியமா? - பணப்பரிசுகளை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள்?

படம்
                வெற்றி பெற்றவருக்கே அனைத்தும் சொந்தம் !     இந்தியாவில் விருது வென்றவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமும் பணப்பரிசுகளும் விளையாட்டுத்துறைத்துறையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை . பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் , நோபல்லெஸ் ஆப்லிஜ் என்ற வார்த்தையை 1835 ஆம் ஆண்டு பயன்படுத்தினார் . இதன்பொருள் , சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பணக்காரர்கள் , உழைக்கும் மக்கள் மீது கருணை காட்டுவதில்லை என்பதுதான் . இந்த வார்த்தை அப்படியே இந்திய அரசுக்கும் விளையாட்டுத்துறைக்கும் பொருந்துவது நகை முரணாக உள்ளது . ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா கடினமாக உழைத்து வென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அவருக்கு மத்திய அரசு , பல்வேறு மாநில அரசுகள் , தனியார் அமைப்புகள் , விளையாட்டு அமைப்புகள் என பறந்து வந்து ஏராளமான பரிசுகளையும் , ரொக்கப்பரிசுகளையும் வழங்கிவருகின்றன . இந்த வகையில் நீரஜூக்கு 4.85 கோடியும் . மீராபாய் சானுவுக்கு 2.50 கோடியும் நிதியுதவியாக கிடைத்துள்ளது . இந்திய மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது . இதில் நாம் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்க

டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்

படம்
            நேர்காணல் ஜி போவ்மன்   உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது . பிரெக்ஸிட் , இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது . இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா ? நான் அப்படி நம்புகிறேன் . இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது . இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம் , மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன் . 2017 ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார் . ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே , அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா ? நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம் . அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது . ஆனால் ஆச்சரியப்படவில்லை . ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை , நோலன் மட்டும் எப்படி பேசுவார் ? இப்போது நமக்கு இருக்கும் சவால் , இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்

உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

படம்
          கிரேட் கேத்தரின் ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின் . இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள் . சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர் . மாப்பிள்ளை பீட்டர் . மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் . மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி . 1745 ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது . அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது . பீட்டரும் ஜார் மன்னராக மாறினார் . ஜார் என்றால் பேரரசர் என்று பொருள் . ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க , அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின் . பிறகு அரியணை ஏறி ராணியானார் . ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும் . அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார் . கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார் . அதில் முக்கியமானது கல்வ

எலன் மஸ்கின் குணங்கள், பழக்கங்கள், சர்ச்சைகள், தொழில்நிபுணத்துவத்தை சொல்லும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
  புத்தக அறிமுகம் பவர் பிளே டிம் ஹிக்கின்ஸ்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ் புத்தகம் முழுக்க நவீன தொழில்துறை மேசியாவான எலன் மஸ்கைப் பற்றி விவரிக்கிறது. அவர்ரை சிலர் ஜீனியஸ் என்றாலும் சிலர் மோசமான முதலாளி என்கின்றனர். தனது மனதில் தோன்றுவதை பேசி நிறுவனத்தில் பங்குகள் சரிந்தாலும் அதை அடுத்த ஐடியா மூலம் சரிக்கட்டும் திறமை கொண்டவர் எலன்மஸ்க். விண்வெளி ஆய்வு, மின்சார கார் ஆகியவற்றை நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.  மோத் மெலடி ரசாக் ஹாசெட் 1946ஆம் ஆண்டு மா, பப்பு என இரண்டு பேரும் உள்ளூர் பல்கலை ஒன்றில் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களின் பதினான்கு மகள் அய்மாவுக்கு விரைவில் திருமணமாகவிருக்கிறது. அவளைப் பற்றியும் திருமணம் பற்றியும் அவளது சகோதரி ரூப் சொல்லும் கதைகளை நூல் கொண்டுள்ளது. இதயத்தின் கருப்பான பக்கங்களையும் காதல், இழப்பு ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளது.  டிஸ்கார்டன்ட் நோட்ஸ் 1 அண்ட் 2 ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு பல்வேறு சிக்கலான, முரண்பாடுகளைக் கொண்ட வழக்குகளை நூல் இருபகுதிகளாக் பிரித்துப் பேசுகிறது. சட்டம் படிப்பவர்கள், வழக்குரைஞர்க

ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தார் என்று அறிய உதவும் நூல்! - நூல் அறிமுகம்

படம்
  சொல்லப்படாத கதை ஹிட்லர் அண்ட் இந்தியா வைபர் புரந்தாரே ரூ.399 வெஸ்ட்லேண்ட் இந்தியாவில் ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறியாமலேயே அவரை ஆராதித்து கொடி பிடிக்கும் ஆட்கள் அதிகம். ஹிட்லரின் எஸ்எஸ் படையை அடியொற்றியே ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை மையமாக வைத்து நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லர் இந்தியாவை பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் என்ன கருத்துகளை கொண்டிருந்தார் என தெளிவுபடுத்துகிற நூல் இது.  --------------------------------- இந்தியன் பொட்டானிக்கல் ஆர்ட் மார்ட்டின் ரிக்ஸ்  ரூ.1495 ரோல் புக்ஸ்  பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாவரங்களை ஆவணப்படுத்துகிற நூல். இதிலுள்ள நிறைய படங்களை வேறு எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. தற்போது உயிரியல் சார்ந்து இயங்கும் கலைஞர்களின் பல்வேறு படைப்புகளோடு நூல் நிறைவடைகிறது.  -------------------------------------------------------------- வாட்டர்  எலிமெண்ட் ஆப் லைஃப் யுத்திகா அகர்வால், கோபால் கிருஷ்ண அகர்வால் 599, ப்ளூம்ஸ்பரி அரசியலமைப்புச் சட்டப்