இடுகைகள்

அன்புள்ள அப்பாவுக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தந்தை தாயை நேசிக்கவேண்டியது முக்கியம்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
  6 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடைய ராசி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கன்னி ராசி என்று கேள்விப்பட்ட வரையில் அதற்கு உருப்படியான நற்பலன்களை நான் நாளிதழ்களில் கூட படித்தது இல்லை. கடுமையான வறுமை, போராட்டங்கள், தரித்திரத்தை அனுபவித்து கடந்து வரவேண்டியிருக்கும் என்பதுதான் நான் படித்த ஜோதிட நூலில் எழுதியிருந்தது. ஜோதிடருக்கு கூட கன்னி ராசிக்காரர்கள் ஏதோ கெடுவினை செய்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டேன். உங்களுடைய கஷ்டங்கள், சிரமங்கள் இதெல்லாம் ராசி காரணமாகத்தான் நடந்தது என்று கூறவில்லை. படிக்காமல், கற்ற தொழில்திறனை வைத்து முன்னேற நினைக்கும் ஒருவருக்கு வாழ்க்கை வேறு எப்படி அமைய முடியும்? நான் உங்களிடம் கற்றுக்கொண்ட விஷயமாக நேர்மையையும், ஏற்றுக்கொண்ட பொறுப்பை கவனமாக நிறைவேற்றுவதையும் முக்கியமானதாக நினைக்கிறேன்.   இன்று எனக்கு அலுவலகத்தில் கிடைக்கும் வேலைகள் பலவும் பிறரால் ஏற்கப்படாதவை. நான் முடிந்தளவு கவனமாக செய்ய முயன்று வருகிறேன். வாழ்க்கை முழுக்க தொடரும் சில பிரச்னைகள் கடந்து கடன் கொடுக்காமல

சாக்கடை நாற்றம் அடிக்கும் சமூகநீதி சந்நிதானங்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
chambre237.com 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு வருந்தும்படியான பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு இதழில் மீதிப்பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,   அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16