இடுகைகள்

குங்குமம் விநோதரச மஞ்சரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குங்குமம் ஸ்பெஷல்! -ரோனி ப்ரௌன்

படம்
காசு வேண்டாம் காதல் போதும் ! என் மகள் இப்படி பண்ணிட்டாளே என மனம் குமைந்து கிடக்கிறார் மலேசிய பணக்காரரான கே பெங் . பின்னே , மூன்று கண்டங்களில் வீடு , பிரைவேட் ஜெட் அத்தனையும் விட்டுவிட்டு ஆசைமகளான ஏஞ்சலினா ஃப்ரான்சிஸ் , பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத தருமி போன்ற ரேஞ்சிலுள்ள காதலனை மணந்துகொண்டதுதான் அப்பாவின் வருத்தத்துக்கு காரணம் . 300 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரியான பெங்கின் மகள் ஏஞ்சலினா , 2008 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது ஜெடிடியா ஃப்ரான்சிஸ் என்ற கரீபிய கட்டழகன் மீது மையலாகிவிட்டார் . அப்பா பெங் , கண் சிவந்து நம்பியாராகி கையைப்பிசைய , எம்ஜிஆராக ஜெடிடியா மாற வேறென்ன ? ஏஞ்சலினாவும் ஜெடிடியாவும் கமுக்கமாக 30 பேர் முன்னிலையில் கெட்டிமேளம் கொட்டி 1500 டாலர்களில் மேரேஜை முடித்து ஃபிரான்சிஸின் அறையில் குடித்தனமே செய்யத்தொடங்கிவிட்டனர் . காதலே ஜெயம் !   அவமானத்தை வென்ற மாற்றுத்திறனாளி ! மனிதவளம் கொட்டிக்கிடக்கும் இ்ந்தியாவில் எளிய மனிதர்களுக்கு ரெஸ்பெக்ட் கிடைப்பதே சால கஷ்டம் . இதில் பிறரின் உதவியாலேயே வாழும்  மாற்றுத்திறனாளிகளின் நிலைமை என

ஜாலி பிட்ஸ் -ரோனி ப்ரௌன்

படம்
ஆசிட் பாட்டிலோடு ரக்‌ஷாபந்தன் ! டெல்லியின் வணிகப்பகுதியான கன்னாட் பிளேஸ் . குண்டூசி டூ ஃபிட்ஜெட்ரன்னர்வரை கிடைக்கும் அக்கட்டிடத்தின் பி பிளாக்கில் முகத்தை மறைத்து கூனிக்குறுகி ரிதுராய் அமர்ந்திருக்கிறார் . தன் சகோதரியின் பிரேஸ்லெட் கடையை அவரின் பிள்ளைகளோடு சேர்ந்து கவனித்துக்கொள்ளும் ரிதுராய் , கடைக்கு வருபவர்கள் , தனக்கு உதவியவர்களின் கைபிடித்து மலர்ச்சியோடு ரக்‌ஷாபந்தன் கயிறு கட்டியபடி இருக்கிறார் . அவரின் கை அன்றும் வெறுமையாகவே இருக்கிறது .   இன்று ஆதரவற்று அமர்ந்திருக்கும் ரிதுராய்க்கும் முன்பு கணவன் இரு பிள்ளைகள் என குடும்பம் இருந்தது . 19 வயதில் பாலுறவுக்கு மறுத்ததால் கோபத்தில் ஒருவன் வீசிய ஆசிட்டால் , முகம் மட்டும் உருகி குலையவில்லை ; அவரின் வாழ்வும்தான் . முதலில் குடும்பம் கைவிட்டது , அலங்கோல முகத்தால் எங்கு வேலை கிடைக்கும் ? பிறகு தன் சகோதரியின் கருணையால் கிடைத்ததுதான் கன்னாட் பிளேசின் பிரேஸ்லெட் வியாபாரம் . கடந்த ஆண்டுகளைவிட ஆசிட் தாக்குதல் அளவு 300% அதிகரித்துள்ளது . 2004 இல் 27 ஆக இருந்த எண்ணிக்கை 2014 இல் 309 ஆக உயர்ந்துள்ளது . உத்தரப்பிரதேசம்

ஜாலி பிட்ஸ் - ரோனி ப்ரௌன்

படம்
எம்பிஏ ட்ரைவர் ! டாக்ஸியை புக் பண்ணி ஏறி உட்கார்ந்த உடனே ஹெட்போனை காதில் இணைத்து ஃபேஸ்புக் ஜோதியில் ஐக்கியமாகும் ஆட்கள்தானே அதிகம் . டெல்லியில் எம்பிஏ மாணவர் டாக்ஸி ட்ரைவரிடம் ஜாலியாக பேச்சு கொடுத்தார் என்ன ஆச்சு தெரியுமா ? டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் ஜஸ்தேஜ் சிங் காலையில் தன் கல்லூரிக்கு செல்ல டாக்ஸியை புக் செய்தார் . வண்டியை ஓட்டி வந்தது 60 வயது டிஷர்ட் போட்ட அங்கிள் . இவருக்கு என்ன தெரியப்போகிறது என நினைத்த ஜஸ்தேஜ்சிங் , " எம்பிஏ படிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ? உங்கள் பேரனைக்கூட இப்படிப்பில் சேர்த்துவிடாதீர்கள் " என்று ஏதோ போக்கில் புலம்பியிருக்கிறார் . திடீரென ட்ரைவர் அங்கிள் , சில எம்பிஏ டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி அதுதான் பிராப்ளமா ப்ரோ ? என கேட்க , ஜஸ்தேஜ்சிங் மெர்சலாகிவிட்டார் . விபரம் கேட்டபோதுதான் தெரிந்தது , பொதுத்துறையில் ஜெனரல் மேனேஜராம் அவர் . ரிடையர்டான பின் ஜாலியாக வண்டி ஓட்டும் அவர் இதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு கொடுத்துவிடுகிறாராம் . ஏன் இப்படி மனுஷனை நிலைகுலைய வைக்கிறீங்க அங்கிள்ஸ் ! சீனாக்காரர்களின்

விநோதரசமஞ்சரி- தொகுப்பு: ரோனி ப்ரௌன்

படம்
அழகு மனைவிக்காக புடவை அபேஸ் ! மனைவி மேல் லவ் இருந்தால் என்ன செய்வீர்கள் ? பக்கெட் பிரியாணியை ஆஃபரில் ஆர்டர் செய்வோம் , ஆடி ஆஃபர் தள்ளுபடி கடைகளை கூகுளில் காட்டலாம் . தண்ணீர் லாரி வந்தால் டோக்கன் போட்டு குடம் வைக்கலாம் . ஆனால் தன் அதிலோக சுந்தரி மனைவிக்காக ஹஸ்பெண்ட் என்ன செய்தார் தெரியுமா ? சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த  காந்த் குப்தாதான் மனைவி பிரமிளா மேல் டன் கணக்கில் பாசம் கொண்ட கணவர் . மனைவி பிரமிளா பிலாஸ்பூரில் நடந்த சாவன் சுந்தரி என்ற லோக்கல் அழகிப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட , மனைவி கண்ணுக்கு லட்சணமாக நின்றால்தானே தனக்கு கௌரவம் என்று நினைத்த  காந்த் அதன்பின் எல்லாம் நோ யோசனை .  டிசைனர் கடை ஜெட் வேகத்தில் சென்றவர் , 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை டக்கென  அபேஸ் செய்தவர் , அதனை தன் மனைவிக்கு போட்டு அழகுபார்த்ததோடு நின்றிருக்கலாம் . ஆனால் அழகிப்போட்டியில் ராம்ப்வாக் செல்ல திருட்டு புடவையைக் கட்டிவிட்டதுதான் வினையானது . விழாவில் புடவையைப் பார்த்து ஒருவர் போலீசுக்கு மிஸ்டுகால் கொடுக்க , பிரதீப் இப்போது மாமியார் வீட்டில் கம்பி எண்ணுகிறார் . மின்சாரமில்லாத மே

விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்

படம்
விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன் நிறவெறி க்ளவுஸ் ! பட்டம் ஜெயித்தவுடன் உலக அழகிகள் என்ன செய்வார்கள் ? உலகில் தேடிப்பிடித்து ஏழையின் குடிசைக்குள் நுழைந்து குழந்தைகளின் வாயில் பாதாம்பாலை ஊற்றி அதை போட்டோவில் கவர் செய்து கருணைமாதா ஆவது வழக்கம் . இங்கும் அதே சீன்தான் . என்ன ? சாப்பாடு கொடுக்கும்போது க்ளவுஸ் கையில் ஏறியதால் உலக அழகியின் கௌரவம் கீழே விழுந்துவிட்டது . மிஸ் . தென் ஆப்பிரிக்கா பியூட்டியான நெல் பீட்டர்ஸ் , ஐகாகெங்க் என்ற ஹெச்ஐவி பாதிப்பு கொண்ட குழந்தைகள் மையத்திற்கு கருணை குபீரென பொங்க ஷேர் ஆட்டோ பிடித்து போனார் . பெருமிதமாக உணவை குழந்தைகளுக்கு வழங்கினார் . உணவுகளை பாதுகாப்பு க்ளவுஸ் அணிந்து வழங்கியதுதான் அகில உலகத்திலும் நிறவெறி சர்ச்சையாகிவிட்டது . உணவுகளை வழங்கும்போது க்ளவுஸ் அணிவது உலகவழக்கம்தானே என்ற நெல் பீட்டர்ஸின் விளக்கத்தைக் கேட்கவெல்லாம் யாரும் தயாராக இல்லை . ஏனெனில் அந்த மையத்தில் உணவு வழங்கியவர்கள் அனைவரும் அணிந்திருந்தது சாதாரண க்ளவுஸ் ; ஆனால் ஆப்பிரிக்க அழகி அணிந்திருந்தது லேடக்ஸ் க்ளவுஸ் என்பதோடு , முன்னர் வெள்ளையின குழந்தைகளோடு நெல்பீட்டர்ஸ் எ

விநோதரச மஞ்சரி - விக்டர் காமெஸி

படம்
விநோதரச மஞ்சரி - விக்டர் காமெஸி உலகம் சுற்றிய தம்பதி ! வேலையில் கான்சென்ட்ரேஷன் செய்து எங்காவது ஜாலி டூர் அடிக்கலாம் என யோசனை வரும்போதே தலையில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் வந்துவிடுகிறது . அந்த வயதிலும் வொஃய்ப்போடு பிளான்போட்டு ஊர் சுற்றுவது சாதனைதானே ! மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதியினரின் மும்பை டூ லண்டன் சாதனை இந்த கேட்டகிரிதான் . மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதிகள் , மார்ச் மாதம் 23 அன்று லெமன் நசுக்கி BMW காரில் கியர் போட்டு கிளம்பிய 72 நாள் டூர் இது . மும்பை டூ லண்டன் லட்சியத்தில் 19 நாடுகளை சாலைவழியாக கடந்து சென்று இறுதியாக லண்டன் சென்று சேர்ந்தபோது 22 ஆயிரத்து 200 கி . மீ தூரத்தை கடந்திருந்தனர் . கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட பல்தவா , சார்டண்ட் அக்கவுண்ட்டாக செட்டிலானது மும்பையில் . அட்வென்ச்சர் பயணங்கள் இவரது ஸ்பெஷல் ஹாபி . " கடந்த ஆண்டு போட்ட பிளான் இது . இம்பால் வழியாக லண்டன் சேர்வது சேஃப் என முடிவு செய்து சாதித்துவிட்டோம் " என புன்னகைக்கிறார் பல்தவா . அட்வென்ச்சர் தீராது !   அதிசய ட்வின்ஸ் ! மனித உயிரைக் காப்பாற்றுவது டாக்டர்களின

விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்

படம்
விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன் மட்டன் சமோசாவால் லட்சாதிபதி !  எம்பிஏ படித்தவருக்கு என்ன லட்சியம் இருக்கும் ? நல்ல வேலை கிடைத்ததும் இஎம்ஐயில் அபார்ட்மெண்ட் புக் பண்ணிய கையோடு , ஏரியா அசரும் அட்டகாச அழகியை மேரேஜ் செய்து மொய்ப்பணம் பிளஸ் டௌரியில் ஸ்போர்ட்ஸ் காரை சல்லீசு ரேட்டில் புக் செய்வதுதானே ! ஆனால் முனாஃப் கபாடியா , தன் லேட்டரங் திங்கிங்கில் ஹோட்டல் தொடங்கி லட்சாதிபதியாகியிருக்கிறார் . மும்பையின் நர்சிமோன்ஞ்சி யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்த , முனாஃப் கபாடியா , கூகுளில் வேலை பார்த்தவர்தான் . சமையலில் கலக்கும் தன் அம்மா , ரிமோட்டை கூட தராமல் டிவி பார்ப்பதைத் தடுத்து அவரை பிஸியாக்க நினைத்து தொடங்கியதுதான் போரி கிச்சன் . வீட்டிலேயே தொடங்கியுள்ள வீக் எண்ட்டான சனி , ஞாயிறு மட்டும் இயங்கும் இந்த ரெஸ்டாரெண்ட்தான் இன்று மும்பையின் செம ஹாட் ஸ்பாட் . ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்கள் லிஸ்டில் துண்டுபோட்டு இடம் ரிசர்வ் செய்த முனாஃப் , தன் மட்டன் சமோசாவை விற்று சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா ? ஜஸ்ட் 50 லட்சம் ரூபாய்கள் .    வேட்டிக்கு அவமரியாதை !