இடுகைகள்

கொள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யோகிபாபுவின் நடிப்பு மட்டுமே ஆறுதல்! நாங்க ரொம்ப பிஸி!

படம்
                  நாங்க ரொம்ப பிஸி இதனை படம் என்றே சொல்லமுடியாது . டெலிபிலிம் போல எடுத்து வைத்திருக்கிறார்கள் . நேர்மையான எஸ்ஐ , எப்படி குடும்ப பிரச்னைக்காக தனது கொள்கை தவறி மோசமான வழியில் செல்கிறார் , தனது காதலியை கைப்பிடிக்க காதலன் எப்படி முறைதவறிய வழியில் பயணிக்கிறான் , சிறிய திருட்டுகளை செய்து வரும் தில்லாலங்கடி திருடன் பெரிய கொள்ளையை செய்து செட்டிலாக நினைக்கிறான் . இந்த மூவரும் ஒன்றாக இணைந்து கருப்பு பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள் . அதனை சரியாக செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்த காலத்தில் நடக்கும் கதை .   இந்த லைன் மட்டுமே சுவாரசியம் . மற்றபடி ப டத்தின் மற்ற விஷயங்கள் எல்லாமே எப்போது முடியும் என்று என்ற எண்ணத்தை ஏற்படுத்துகி்ன்றன . படத்தின் ஒரே ஆறுதல் , யோகி பாபுவும் , சி . சத்யாவின் இசை மட்டும்தான் . இவர்கள் மட்டும்தான் முடிந்தளவு தங்கள் உழைப்பை போட்டு கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள் . நீங்கள் பிஸியாக ஏதாவது வேலையில் இருந்தால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது . பட

சிசிடிவி மூலம் குற்றவாளிகளை ஸ்மார்ட்டாக பிடிக்கும் காவல்துறை! எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்?

படம்
        சிசிடிவி கேமரா மூலம் திருடர்களை பிடிக்க முடியுமா? சென்னை பெருநகரத்தில் காவல்துறையினர் 2.9 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதில் 1.5 லட்சம் கேமராக்கள் தனியார் வீடுகள், கடைகளுக்கானவை. இதன்மூலம் கடைகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர்களையும் காவல்துறையினர் ஸ்மார்ட்டாக பிடித்து வருகின்றனர். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 14 கொலைக்குற்றங்களில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் சிசிடிவி மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதில் முக்கியமான உதவி சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 60 வழிப்பறி கொள்ளையர்கள் இம்முறையில் பிடிபட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையில் அண்மையில் புல்லட்டுகளை திருடி நகருக்கு வெளியில் விற்கும் திருட்டு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். எப்படி பிடிக்கிறார்கள்? நகரத்தின் பாதைகள், ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை இணைத்து யோசிக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இதில் வெற்றி பெறுகின்றனர். அனைவரும் இதனை கவனித்து புரிந்துகொள்ள முடியாது.முதலில் குற்றம் நடந்த இடத்திலிருந்து 50 முதல் 50

திருடவே முடியாத டிசைன் இது!

படம்
        cc          திருடவே முடியாத டிசைன் இது ! உலகளவில் பென்சில் , பிஸ்கெட் டிசைன் , பைக் , கார் என பல்வேறு பொருட்களின் டிசைன்களை எளிதாக பலரும் திருடிவிடுவது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது . இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் தங்களின் நிறுவனப் பொருட்களைப் போல யாராவது டிசைன் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொருட்களின் மீதே அச்சிட்டிருப்பார்கள் . போலியான பொருட்கள் அந்தளவு வேகமாக சந்தையில் பரவி வருகின்றன . இதனால்தான் தற்போது யாரும் திருடவே முடியாத காப்பி செய்ய முடியாத வடிவமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . ஜப்பானைச் சேர்ந்த ட்ஸூபா பல்கலைக்கழகத்தைச் சேர்நத ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான பேட்டர்னை உருவாக்கியுள்ளனர் . ஓவியங்களில் மிக நுட்பமான முறையில் பதிக்கப்படும் மைக்ரோபேட்டர்ன்களைக் கண்டுபிடிபபது கடினம் . இதன்மூலம் அசல் , நகல் எதுவென எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் . மிக சிக்கலான நிறங்களைக் கொண்டுள்ள பேடடர்ன் என்பதால் இதனை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று உறுதியாக பேசுகிறார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யோஹெய் யமமோட்டோ .

குடும்பத்தின் சாபம் தீர்க்க கொள்ளையடிக்கும் துரதிர்ஷ்டசாலி லோகன்! - லோகன் லக்கி 2017

படம்
    லோகன் லக்கி       லோகன் லக்கி  Directed by Steven Soderbergh Written byRebecca Blunt Music by David Holmes Cinematography Peter Andrews [a]   லோகன் குடும்பத்திற்கு உள்ள சாபத்தில் அண்ணன் ஜிம்மிக்கு காலில் அடிபட்டு விடுகிறது. விவாகரத்து வாங்கிய மனைவியிடம், தன் குழந்தையைப் பார்க்க கூட போராடும் நிலை. சுரங்கத்தில் வேலை பார்ப்பவருக்கு காலில் அடிபட்டு ஊனமான காரணத்தால் வேலை செய்ய தகுதியில்லை என்று நிராகரித்து வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். இதனால் அவரது குழந்தையைக் கவனித்துக்கொள்ளக்கூட கையில் காசில்லாத நிலை. அவரது தம்பி, பார் ஒன்றை நடத்திவருகிறார். அண்ணனின் கொள்ளைத்திட்டம் ஒன்று தோல்வியாக சிறைக்குச் சென்ற கோபம் அவரது மனதில் உள்ளது. அவரின் இடதுகையைக்கூட விபத்தில் பறிகொடுக்க,. கழிவுணர்ச்சியால் தினந்தோறும் கலங்கி வருகிறார். ஜிம்மியும் அவரது தம்பியும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இவர்களது தங்கை சலூன் ஒன்றில் வேலை செய்கிறார். துரதிர்ஷ்டம் துரத்தாத ஒரே ஆன்மா அவள் மட்டும்தான். இந்த நிலையில் வருமான பிரச்னையை சமாளிக்க ஜிம்மி, ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான். அது கார் பந்தயம் நடத்தும் கம்பெனி

குற்றவாளியும், நல்லவனும் ஒரே உருவத்தில்! - முடிஞ்சா இவனப் புடி!

படம்
முடிஞ்சா இவனப்புடி இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார் கதை: டி.சிவக்குமார் ஒளிப்பதிவு ராஜரத்தினம் இசை: இமான் கதை: சத்யம் நேர் வகிடு எடுத்து சீவிய நல்ல மனிதர். இவருக்கு எதிராக ஜெல் போட்டு வாரிய தலை, தொப்பி சகிதமாக ஊர்ப் பெருசுகளின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சாமர்த்தியசாலி சிவம். இருவரும் ஒருவரா, வேறு வேறா என்று காவல்துறை ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடிப்பதுதான் கதை. ஆஹா கிச்சா சுதீப் நன்றாக நடித்திருக்கிறார். என்ன அவர் பேச்சில்தான் தடுமாற்றமாக இருக்கிறது. தன்னுடைய குரலில் பேசுகிறாரா அல்லது ரஜினி போல மிமிக்ரி ஏதாவது செய்கிறாரா என்று கண்டுபிடிப்பதிலேயே படம் பாதி போய்விடுகிறது. நித்யா மேனன் இந்த படத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார். பிரகாஷ்ராஜின் போர்ஷன் சிறியதுதான் என்றால் கவனிக்க வைக்கிறார்.    ஐயையோ இதுபோல பணத்தைக் கொள்ளையடிக்கும் படம் என்றால், எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கொஞ்சமேனும் டீட்டெய்லாக சொல்லுவார்கள். இதில் படம் தொடங்கும்போது நடக்கும் கொள்ளையைத் தவிர்த்து வேறெங்கும் சிவத்தின் புத்திசாலித்தனத்திற்கு எந்த சாட்சியும் இல்லை. மேலு

வண்டி ஸ்டார்ட்டே ஆகலீங்க- ட்ரைவ் படம் எப்படி?

படம்
ட்ரைவ் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படம் இயக்கம் -  தருன் மன்சுக்கானி இசை -பலர் ஒளிப்பதிவு - விஷால் சின்கா ஃ பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற படத்தை இந்தி வசனங்கள் எழுதி படுமோசமாக எடுத்தால் எப்படியிருக்கும். ட்ரைவ் படம் மாதிரியேதான் இருக்கும்.  படத்தின் கதை எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. நடித்தவர்கள் அனைவரும் விடுமுறை ஆர்வத்தில் இருப்பது போலவே இருக்கிறது. அவ்வளவு ரிலாக்சாக நடித்திருக்கிறார்கள். அதிலும் சுசாந்திற்கு வரும் சிரிப்பு, உண்மையில் அதை காசுகொடுத்து பார்ப்பவர்களை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. படத்தை பார்த்து முடித்தவுடன் அது உறுதியாகிவிட்டது. வேகமாக செல்ல வேண்டிய படம் படுமோசமாக திரைக்கதை, சுமார் நடிகர்களால் சீரியல் லெவலுக்கு கீழிறங்கி ஒருகட்டத்தில் இது படமாக, கல்யாண வீடியோவா என டவுட் ஆகிறது. உண்மையில் இதனை எப்படி படமாக நம்பிக்கையுடன் தருன் எடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை. இவ்வளவு ஸ்லோவான படத்தை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய பேனரில் வெளியிட்டது திருஷ்டி பரிகாரம் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் ஒரே ஆறுதல், சப்னா பாபியின் அழகு. நாயகி ஜாக்குலினை விட அழகாக இ

காமெடி செய்த திருடர்கள்!

படம்
காமெடி திருடர்கள்! கம்பி எண்ண வைத்த கழுதை! கொலம்பியாவில் நடந்த கூத்து இது. மளிகைக் கடை ஒன்றை திருடர்களை சுழி சுத்தமாக கத்தி கபடாக்களை வைத்து கொள்ளையடித்தனர். அதெல்லாம் பிரச்னையில்லை. கல்லாவில் உள்ள பணத்தைக்கூட துடைத்து எடுத்தாயிற்று. ஆனால், போலீசில் பத்து நிமிடங்களில் மாட்டிக்கொண்டார்கள். உணவு மற்றும் ரம் பாட்டில்களை திருடிய கொள்ளையர்கள் அதனை மோட்டார் வண்டியில் ஏற்றியிருக்கலாம். எகானாமி முக்கியம் என்று நினைத்தார்களோ, மேக் இன் கொலம்பியா திட்டத்தை பின்பற்றலாம் என நினைத்தார்களோ மாட்டிக்கொண்டார்கள். காரணம் , கழுதைதான். ஏராளமாக சுமையை ஏற்ற, அது பச்சாவோ, ஆபத்து, ஐம் இன் டேஞ்சர் என அத்தனை மொழிகளிலும் ஆபத்தை கத்தி கதறி உலகிற்கு சொல்ல, அருகில் நின்ற போலீஸ் உஷாராகி திருடர்களை அடித்து உதைத்து வெளுத்து விட்டனர். முக்கியமான தகவல் அந்த கழுதையின் பெயர் எக்ஸேவி. ரெடியா இருங்க ப்ரோ! நம் நண்பர்களில் சிலர் கூட இப்படித்தான். எங்கு செல்லும்போதும் முன்னேற்பாடுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். பஸ் இருக்குமா, பாத்ரூமில் பக்கெட் வச்சுருப்பாங்களா, சில்லறை வச்சிருக்கியா, வழி தெரியுமா என