நீதித்துறைக்கு நேர்மையை சொல்லித்தரும் தனியொருவன்!
லா அபைடிங் சிட்டிசன் ஆங்கிலம் -2009 இயக்கம் - எஃப் கேரி கிரே திரைக்கதை - கர்ட் விம்மர் ஒளிப்பதிவு - ஜொனாதன் சேலா இசை - பிரையன் டைலர் ஜெரார்ட் பட்லரின் தயாரிப்பில் அவரே நடித்து வெளியிட்டுள்ள படம். கதை எளிமையான பழிவாங்கும் கதைதான். படத்தில் தொடக்கத்தில் ஜெரார்டின் மனைவி கற்பழித்துக் கொல்லப்படுகிறார். குழந்தையும் சுடப்பட்டு சாகிறாள். இவர்களை காப்பாற்ற முடியாதபடி ஜெரார்டு காயம்பட்டு வீழ்கிறார். பிறகு, காவல்துறை ஜெரார்டின் உதவிக்கு வருகிறது. ஆனால் அரசு துறை வழக்குரைஞரான ஜேமி ஃபாக்ஸ் ஜெயிக்கும் வழக்குகளில்தான் தான் வாதாட வேண்டும் என்ற உறுதியாக இருக்கிறார். எனவே ஜெரார்டின் குடும்பத்தை கொன்றவர்களோடு சமரசமாகி அவர்களுக்கு குறைவான தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். இதனை அகங்காரமாக ஜெரார்டின் முன்னால் சாட்சியங்களே கிடையாது எப்படி ஜெயிப்பது என்று கூறுகிறார். அவர் குற்றவாளிக்கு கை கொடுப்பதை ஜெரார்டு நேரடியாக பார்த்துவிட்டு அமைதியாக செல்கிறார். அவர் எப்படி அரசு வழக்குரைஞரை பழிவாங்கினார், தனது குடும்பத்தைக் கொன்றவர்களை எப்படி கொன்றார் என்பதுதான் கதை. படம் ம