இடுகைகள்

சிந்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால இந்தியா 2047 - ஐஐடி மெட்ராஸ் - ரிசர்ச் பார்க் - கனவுகளும் சாத்தியங்களும்

படம்
பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் தொழில்முனைவோர் புனீத் குப்தா வர்னாலி தேகா, ஐஏஎஸ்   எதிர்கால இந்தியா 2047 சென்னை தரமணியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆராய்ச்சி மன்றில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த மார்ச் 7 தொடங்கி 9ஆம் தேதிவரையிலான இமேஜினிங் (Imagining India 2047) இந்தியா 2047 என்ற கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஐ.ஐ.டி மெட்ராஸ் அமைப்பு ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், நேரம் தவறாமைதான்.  நாங்கள் ஒன்பது மணிக்கு செல்லவேண்டிய நிகழ்ச்சி இது. ஆனால், நிகழ்ச்சி பற்றி தகவல் தெரிந்ததே பத்து மணிக்குத்தான். பிறகு, புரோகிராம் பார்த்து தகவல்களை கிரகித்து ஆசிரியரிடம் அனுமதி வாங்கி கிளம்ப பதினொரு மணி ஆகிவிட்டது. சக உதவி ஆசிரியர் காந்தி மகான் உதவிக்கு வந்தார். முதலில் ரயிலுக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால் காந்தி, பஸ்ஸிற்கு போகலாம் என்றார். ஏ1 பஸ்சில் ஏறி உட்கார்ந்தால் ஆமை போல மெல்ல ஊர்ந்தது. எனவே மயிலாப்பூர் குளத்தில் இறங்கினோம். உடனே ஓட்டமாக ஓடி, லோக்கல் ட்ரெயினில் ஏறினோம். ஏறும்போதே காந்தி, யுடிஎஸ் ஆப்பில் டிக்கெட்டை இருவருக்கும் எடுத்துவ

கூட்டத்தில் தனியாக சிந்திக்கும் ஒருவன்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 8 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? விபத்தினால் ஏற்பட்ட வலி இன்னும் உங்களுக்கு தொடையில் இருக்கும். நீங்கள் நலம்பெற பெருமாளை பிரார்த்திக்கிறேன். விபத்து என்பது தற்செயலானது என்பதால் அதில் நமது கட்டுப்பாடு எதுவும் கிடையாது. விபத்து ஏற்படுவதற்கு முன்னர் முதல் அறிகுறி நேரும். நமது கவனம் குலைந்துபோவதுதான், அது. இதற்கு நமது ஜாதகத்திலுள்ள பிரச்னைகள் முதல் காரணம். அடுத்து, நம்மைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின் பாதிப்பும் உண்டு. இந்த விளைவுகளை நமக்கு காட்டுவது நாம் வளர்க்கும் கால்நடைகள், செல்லப்பிராணிகள்தான். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடுமையைக் குறைக்க குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம். நான் சாமி கும்பிடும்போது வணங்குவது மட்டுமே செயலாகவும் எண்ணமாகவும் இருக்கிறது. எந்த வேண்டுதல்களையும் சரியாக நினைத்து சாமி கும்பிட்டதாக எனக்கு நினைவில்லை. உறவுகள் தமக்கான லாப, நஷ்டக்கணக்குகளை போட்டுக்கொண்டு வலம் வரும்போது இறைவனை மட்டுமே நம்ப முடியும். அறிவுக்கான சரியான துணையாக மனைவி அமையாதபோது ஆண் முழுக்க தனிமையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுக்க நேரிடும