இடுகைகள்

சீனிவாசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுதுவதில் சுணக்கம்! - கடிதங்கள்

படம்
  எழுதுவதில் சுணக்கம் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இப்போது ஊருக்கு வந்துவிட்டேன். சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அறையில் பயங்கரமான புழுக்கம். அலுவலகம் சென்றால் கூட எட்டு மணிநேரம் சமாளித்து விடலாம். வடக்குப்புதுப்பாளையம் நூலகத்திற்கு அன்பளிப்பாக தர எட்டு நூல்களை ரெடி செய்துள்ளேன்.  மந்திர சந்திப்பு - பாலபாரதி அவர்கள் எழுதிய நூலை படித்து வருகிறேன். இந்த நூல் தினசரி ஒரு அத்தியாயம் என அவரது பேஸ்புக் பக்கத்திலும், வலைத்தளத்திலும் வெளியானது. இப்போது நேரம் கிடைத்துள்ளதால் அதனை நூலாக தொகுத்துவிட்டார்.  அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை கணியம் சீனிவாசன் சாரிடமிருந்து பெற்றேன். அதனை இனிமேல்தான் படிக்கத் தொடங்கவேண்டும். அடுத்து வரும் ஜூனில்தான் எங்களுக்கு வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். எனக்கென தனியாக எழுதும் வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியவில்லை. எழுதுவதில் சுணக்கமாக சோம்பலாக இருக்கிறது. வேகமாக வேலைகளைத் தொடங்கவேண்டும். வாசிப்பதிலும் வேகம் கூட்டவேண்டும்.  நன்றி ச.அன்பரசு 5.4. 2021

சங்க நூல்களுக்கான அட்டைப்பட உருவாக்கம்

படம்
மின் நூல்களுக்கான அட்டைப்படங்களை தனியாகவே செய்திருக்கிறேன். ஆனால் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக அச்செயல்முறை நடந்தது. தாம்பரத்தில் கணியம் பவுண்டேஷன் நிறுவனர் த.சீனிவாசன் அவர்களின் இல்லத்தில் புத்தக அட்டைகளை உருவாக்கினோம். அன்று முழுவதும் உணவு, தேநீர் என உபசரித்த சீனிவாசன் அவர்களுக்கு நன்றி! (இடமிருந்து வலமாக )அன்வர், லோகநாதன், சீனிவாசன், அன்பரசு சங்க நூல்களுக்கான அட்டைப்பட உருவாக்கத்தை அன்று செய்தோம். நாலடியாரை சீனிவாசன் எடுத்துக்கொள்ள, அன்வர் தொல்காப்பியத்திற்குள் நுழைந்தார். எனக்கு வழங்கப்பட்டது சிலப்பதிகாரம்.  இதில் எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது, ஜிம்ப் சாப்ட்வேரைக் கையாள்வதிலும், அட்டைப்படத்தை எந்த அளவில் சேமிப்பது என்பதிலும்தான்.  புதிதாக வாங்கிய ஜியோமி மி டிவியில் அனைத்தையும் விளக்கிய சீனிவாசன், நாங்கள் கேட்ட அத்தனை சந்தேகங்களையும் சொல்லியபடியே அட்டைப்படத்தையும் வேகமாக முடித்துக்கொண்டிருந்தார்.  அட்டைப்படங்களை வேகமாக முடித்து வேங்கையாக பாய்ந்தது அன்வர்தான். சீனி, தலைவர் என்பதால் அவரின் பணி வேலையைச் சொல்வதுதான். எனவே அவரை ஒதுக்கி விடலாம். விக்சனரி லோகநாதன், இங்க்