இடுகைகள்

ட்விட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

படம்
          மயங்க் பைடாவட்கா கூ , சமூக வலைத்தளம் , துணை நிறுவனர் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள் ? இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள் . இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன . போலிசெய்திகள் , வதந்திகள் அதிகம் வருகின்றன . இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது . இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும் .. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு , போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன் . உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா ? இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது . அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது . ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான் , இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவ

சமூக வலைத்தளங்கள் அரசுக்கு பயனர் பற்றிய தகவல்களை அளிக்கின்றனவா?

படம்
  இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 560 மில்லியனாக உள்ளது. இதற்கடுத்த இடத்தில் வாட்ஸ் பயனாளர்கள் எண்ணிக்கை வருகிறது. மேலும் இதில் கண்காணிப்பு வந்தால் என்னாகும்? அனைத்து மக்களுமே அறிந்தோ அறியாமலே இதில் மாட்டிக்கொள்வோம்.  போனில் உள்ள குறுஞ்செய்தி வசதியை இன்று யாருமே பயன்படுத்தவில்லை. எளிமையாக போனின் டேட்டாவை ஆன் செய்துவிட்டு வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு காலை வணக்கம் தொடங்கி டீ குடிக்க ஆபீஸ் வரட்டுமா என்ற அளவில் பேசி வருகிறோம்.  2019ஆம் ஆண்டு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த ஆய்வுப்படி இந்தியாவிலுள்ள 92 பெண் அரசியல்வாதிகளுக்கு, சமூக வலைத்தளங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவதூறு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதேபோல 2020இல் பெண்கள், குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் புழங்கிய வதந்தி ஒன்றை நம்பி மூன்று பேர்களை மக்கள் அடித்துக் கொன்றனர். இந்த  சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றது.  அரசு தற்போது 69 ஏ சட்டப்படி, குற்றவழக்கு தொடர்பாக கேட்கும் விவரங்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் தரவேண்டும். அப்படி தராதபோது அவர்கள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இத