இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழிபெயர்ப்பில் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பது அவசியம்! - டாக்டர் கே. செல்லப்பன், மொழிபெயர்ப்பாளர்

படம்
            டாக்டர் செல்லப்பன் மொழிபெயர்ப்பாளர் அண்மையில் மார்ச் 12 அன்று தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்த்த பணிக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார் . 2020 க்கான விருது இது . மொழிபெயர்ப்புக்கான விருது என்றாலும் கூட இது தாமதமாகவே இவருக்கு கிடைத்துள்ளது . தாகூரின் நாவல் இன்று கலாசாரம் சார்ந்து ஒருவருக்குள் எழும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்படி அமைந்துள்ளது . செல்லப்பன் புதுக்கோட்டையில் உள்ள ராஜா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார் . பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான கல்லூரிகளில் ஆசியராக பணியாற்றியுள்ளார் . இவரது கற்பித்தல் முறைகளை மாணவர்களே தன்னார்வமாக பணம் சேகரித்து ஆவணப்படமாக்கியுள்ளனர் . தூங்கும்போது வரும் கனவு அழகாக இருக்கிறது . எழும்போது கண்முன்னே உள்ள வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தத்துவமாக பேசுபவர் அப்படியேதான் வாழ்ந்தும் இருக்கிறார் அவரிடம் பேசினோம் . இந்த நேர்காணல் புத்தகத்திலுள்ளதன் சுருக்கமே ஆகும் . தாகூரின் கோராவை மொழிபெயர்ப்புக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ? அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அகாதெமியின் முடிவு . எனக்

அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!

படம்
  cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ்   ஜானியின் அசுரவேட்டை காமிக் பிடிஎப் டைம்ஸ் தமிழில் ஜானி வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை. 18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள்  நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை. காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது. புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள் காமிக்ஸ் நூல்

தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

படம்
    மௌனம் சம்மதம்     மௌனம் சம்மதம் மது இளையராஜா தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை. நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன. திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தம்பி சர

நம்பியாரை எம்ஜிஆர் வெல்லும் காதல் கதை! - நம்பியார்

படம்
movie image gallery நம்பியார் இயக்கம் - கணேஷா படம் முழுக்க உளவியல் சார்ந்து நகருகிறது. நாயகன் அனைவரையும் ஒருவர் ஏன் கோபமாக இருக்கிறார் என்பதை எளிமையாக அவர்களின் உடை, அணிந்துள்ள ஷூக்கள் ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து அதற்கான உபாயங்களை சொல்கிறார். ஆனால் அவரால் தன் தந்தையுடன் சரியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோற்றுக்கொண்டே இருக்கிறார். அச்சூழ்நிலையில் ஒரு பெண்ணுடன் அவர் தற்செயலாக சந்திக்க நேருகிறது. அதனை பெண்ணின் அப்பா பார்த்துவிட்டு தவறாக எண்ணுகிறார். இதனால் இருவருக்கும் மோதலில் சந்திப்பு தொடங்கி காதலில் முடிகிறது. காதலுக்கு மட்டுமல்ல நாயகன் ராமச்சந்திரனின் வாழ்க்கை வில்லனே அவனுடைய எதிர்மறையான எண்ணங்கள்தான். அவை எப்படி அவன் வாழ்க்கையை பலி வாங்குகின்றன, அவன் தன் கனவான ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதினானா? காதலி சரோஜாவை தாஜா செய்து கைபிடித்தானா என்பதுதான் கதை. ஆஹா உளவியல் சார்ந்து கதை என்பதை சில நிமிஷங்களில் சொல்லி விடுகிறார்கள். படம் முழுக்க ஸ்ரீகாந்த் செய்வதற்கு எதுவும் இல்லை. முழுக்க சந்தானம் ஆட்சி செய்கிறார். அவர் உடல்பூர்வமாக இல்லாதபோது குரல் மூலமாக வந்துவிடுகிறார். இதனால் ர

ஜாலி கேலி கலாய் காதல் சினிமா - ஓ மை கடவுளே !

படம்
ஓ மை கடவுளே - தமிழ் அஷ்வத் மாரிமுத்து ஒளிப்பதிவு - விது அய்யன்னா இசை - லியோன் ஜேம்ஸ் ஒரு பெண், இரண்டு ஆண்கள். இந்த மூவரும் நண்பர்கள். பப் மது அருந்திக்கொண்டிருக்கும்போது, காதலித்தவர்களை கல்யாணம் செய்துகொண்டால்தான் லைஃப் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லுகிறார். அருகிலிருந்து தோழி, அதையேதான் யோசிக்கிறார். உடனே அருகிலிருந்த தோழனிடம் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறார். அதை மறுக்க அவரிடமும் எந்த காரணமுமில்லை. அடுத்த பதினைந்து நிமிட ஆட்டோ பயணத்தில் சரி பண்ணிக்கலாம் என்கிறார். அதன்பிறகு அவர்களது வாழ்க்கை என்ன ஆனது, ஓ மை கடவுளே என்று சொல்லும்படி ஆன நிகழ்ச்சிகளை அட்டகாசமாக உருவாக்கிய படம்தான் ஓ  மை கடவுளே. ஆஹா! இயக்குநர் ஆறு ஆண்டுகளாக எழுதி உருவாக்கிய படம். அதனால்தான் திரைக்கதை -வசனம்-இயக்கம் என ஹரி, கே.எஸ். ரவிகுமார் ரேஞ்சுக்கு போடுகிறார். படத்தில் தான் யோசித்த விஷயங்களை நுட்பமாக பேசி அதற்கு நியாயம் செய்துவிடுகிறார். எளிமையாக கிடைத்த விஷயங்களின் அருமையை நாம் உணருவதில்லை என்பதுதான் படத்தின் கான்செப்ட். அப்படி கிடைத்த தோழி - மனைவியை தவறவிடும் ஒருவன்,

எந்த மொழியைக் கற்பது ஈசி?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி எளிதாக ஓர் மொழியைக் கற்க நினைக்கிறேன். எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்? கணினி மொழியை கற்க விரும்பினால் ரூபி கற்கலாம். இம்மொழியை கற்பதும் எளிது, நிறைய சம்பாதிக்கவும் முடியும். அதேசமயம் மொழி கற்பது என்றால், தமிழ் என்று மொழிவெறியோடு சொல்ல மாட்டேன். ஆங்கிலத்தோடு இணைந்த அதன் சாயல்களைக் கொண்ட ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளை கற்கலாம். இது எளிது. நன்றி - பிபிசி

தூய இந்தி மொழி சாத்தியமில்லை! - சேட்டன் பகத்

படம்
டில்லியில் புதிய அரசு எப்போது ஆட்சி அமைத்தாலும் இந்தி சார்பான ஆதரவை எப்போதும் காட்டுவார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரை இந்தி பிரசார சபையில் நின்று மொழி வீரம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்று இதுவரையிலும் புரியவில்லை. இந்தியா பன்மைத்துவமான தேசம். அரசு கூறும் புள்ளிவிவரங்களில் இந்தி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து, தெலுங்கு, மராத்தி, தமிழ் என இடம்பெறுவது மாறவே இல்லை. பின் எதற்கு இந்தி படி என்று காட்டுக்கத்தல் வட இந்தியாவிலிருந்து எழுகிறது. காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்ற காரணம்தான் தேடினால் தட்டுப்படுகிறது. பாஜக நேரடியாக சமஸ்கிருதத்தை நோக்கி பயணித்துவருகிறது. இந்தி என்பது சமஸ்கிருதம் எனும் லட்சியத்தை அடைய உதவும் படகுதான். பிறகு இந்தியை கைவிட்டு விடுவார்கள். இன்றைய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா முதற்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வரை இந்தி விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் இந்தி பேசுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களே சொல்லுகின்றன. பின் என்ன? எதற்கிந்த