இடுகைகள்

நீதிமன்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓராண்டிற்கு பிறகு பதவியை ஏற்றால் ஒப்புக்கொள்வீர்களா? ரஞ்சன் கோகய்

படம்
தேசபிமானி நேர்காணல் ரஞ்சன் கோகய், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் /வஜிரம்  அண்ட் ரவி   980 × 549 ரஞ்சன் கோகய், தனது நேர்மையான செயல்பாடுகளுக்காக கடந்த காலத்தில் பாராட்டப்பட்டவர். பின்னர், பாஜக அரசில் தலைமை நீதிபதியான பிறகு, அவரின் நேர்மையான செயல்பாடுகள் கேள்விக்குள்ளாயின. அவரின் மீது அவரது உதவியாளர் பாலியல் தொல்லை என்று வழக்கு தொடுத்தார். பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவரின் தலைமையிலான நீதிபதிகள் குழு அயோத்தி வழக்கில் பாஜக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பினை அளித்தது. தலைமை நீதிபதிக்காலம் முடிந்தபிறகு, பாஜக அரசு கோகய்க்கு ராஜயசபை உறுப்பினர் பதவியை அளித்து கௌரவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் நீதியை குழிதோண்டி கோகய் புதைத்துவிட்டார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி கோகய்யிடம் பேசினோம். தலைமை நீதிபதியாக இருந்தீர்கள். அந்த பதவியிலிருந்து விலகியதும் குடியரசுத்தலைவரின் பரிந்துரையில் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியைப் பெற்றிருக்கிறீர்களே ஏன்? அரசமைப்புச்சட்டம் 80படி, குடியரசுத்தலைவர் ராஜ்ய சபை பதவியை அளித்துள்ளார். நான் ஏன் மறுக்கவேண்டும்? நாட்டிற்

பெண்களை குரான் புறக்கணிக்கவில்லை! - எழுத்தாளர் ஜியா அஸ் சலாம்

படம்
நேர்காணல் குரான் பெண்களை ஒதுக்கவில்லை! பெண்களை மசூதிக்குள் பொதுவாக அனுமதிப்பதில்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் தனி இடங்கள் அங்கு உண்டு. இதுபற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாய் அஸ் சலாம் வுமன் இன் மஸ்ஜித்: எ க்வெஸ்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பேசினோம். நீதிமன்றம், பெண்களை சபரிமலை போன்ற இடங்களில் அனுமதித்து உள்ளது. அதை நீங்கள் ஏற்கிறீர்களா? இது சரி, சரி அல்ல என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. மதம் பெண்களை அனுமதிக்கும்போது, அதனை ஆண்கள் ஏன் தடுக்கிறார்கள் என்பதே எனது கேள்வி. நீதிமன்றம் குரான் மற்றும் அரசியல் அமைப்பு சட்டப்படி பெண்களை அனுமதிப்பு ஏற்புடையதே. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பெண்களின் உரிமைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்.  சுல்தான்கள் காலத்தில் இங்குள்ள பெண்கள் சிறப்பான கல்வித்தகுதியை அடைந்தனர். காரணம், அங்கு ஏராளமான மதரசாக்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அடிமையாக வேலை செய்து வந்த பெண்கள் கூட குரானைப் படிக்கும் அளவு கல்வி அறிவு பெற்றிருந்தனர். மொகலாயர்கள் காலத்தில் பெண்கள் மதரசாக்களையும், மசூதிகளையும் கட்டியது வரலாறு மூலம் தெரிய வர