ஓராண்டிற்கு பிறகு பதவியை ஏற்றால் ஒப்புக்கொள்வீர்களா? ரஞ்சன் கோகய்
தேசபிமானி |
நேர்காணல்
ரஞ்சன் கோகய், முன்னாள் தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகய் /வஜிரம் அண்ட் ரவி |
ரஞ்சன் கோகய், தனது நேர்மையான செயல்பாடுகளுக்காக கடந்த காலத்தில் பாராட்டப்பட்டவர். பின்னர், பாஜக அரசில் தலைமை நீதிபதியான பிறகு, அவரின் நேர்மையான செயல்பாடுகள் கேள்விக்குள்ளாயின. அவரின் மீது அவரது உதவியாளர் பாலியல் தொல்லை என்று வழக்கு தொடுத்தார். பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவரின் தலைமையிலான நீதிபதிகள் குழு அயோத்தி வழக்கில் பாஜக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பினை அளித்தது. தலைமை நீதிபதிக்காலம் முடிந்தபிறகு, பாஜக அரசு கோகய்க்கு ராஜயசபை உறுப்பினர் பதவியை அளித்து கௌரவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் நீதியை குழிதோண்டி கோகய் புதைத்துவிட்டார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி கோகய்யிடம் பேசினோம்.
தலைமை நீதிபதியாக இருந்தீர்கள். அந்த பதவியிலிருந்து விலகியதும் குடியரசுத்தலைவரின் பரிந்துரையில் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியைப் பெற்றிருக்கிறீர்களே ஏன்?
அரசமைப்புச்சட்டம் 80படி, குடியரசுத்தலைவர் ராஜ்ய சபை பதவியை அளித்துள்ளார். நான் ஏன் மறுக்கவேண்டும்? நாட்டிற்கு நான் உழைக்க கூடாது என்று கூறுகிறீர்களா? இம்முறையில் பல்வேறு கமிட்டிகளுக்கு கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த காலவரையறையில் ஒருவரை பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற எந்த விதியும் குறிப்பிடப்படவில்லை.
மார்ச் 2019இல் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு பதவிகளில் நியமிக்கப்படுவது நீதிக்கு புறம்பானது என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி சட்டென மாறினீர்கள்?
நான் கூறியது நீதிபதிகளை குறிப்பிட்ட கமிட்டி, ஆணையங்களுக்கு நியமிப்பது குறித்துதான். நான் இன்று ஏற்றுள்ள ராஜ்யசபை உறுப்பினர் பதவி என்பது வேலை செய்வதற்கான து அல்ல. இது என்னுடைய பணியைப் பாராட்டி அரசு அளித்த கௌரவமாகவே பார்க்கிறேன்.
எதிர்கட்சிகள் உங்களது செயல்பாட்டை அவமானம் என்று கூறி வெளிநடப்பு செய்திருக்கிறார்களே?
இது பற்றி கவலைப்பட ஏதுமில்லை. எதிர்கட்சிகள் தங்களது பணிகளை உள்ளே வருவதும் வெளியேறுவதுமாக செய்கிறார்கள். இதில் குறிப்பிட்ட ஒருவர் என்னைப் பற்றிக் கூறியதாக ஏதுமில்லை.
எதிர்கட்சிகள் மட்டுமல்ல ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட உங்களிளின் ராஜ்யசபை பதவியை தவறு என்று கூறியிருக்கிறார்களே?
அப்படி அவர்கள் கூறியிருந்தால் அது நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் செயல் என்றே கருதலாம். அயோத்தி தீர்ப்பை நான் மட்டும் தனியாக யோசித்து எனக்கு பின்னாளில் பதவி கிடைக்கும் என்று நினைத்து எழுதவில்லை. குற்றச்சாட்டுகளை என்மீது வீசியுள்ளவர்களும் இணைந்துதான் தீர்ப்பை எழுதினோம். நான் பதவிக்காக தீர்ப்புகளை சாதகமாக எழுதினேன் என்று கூறுவது தவறான வாதம்.
இப்போது ராஜ்யசபை உறுப்பினராகிவிட்டீர்கள். அடுத்து உங்களை அமைச்சராக பார்க்கலாமா?
எனக்கு ஜோதிடம் தெரியாது. எங்கள் குடும்பத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் உண்டு. ஆனால் எனக்கு எந்த பதவிகளிலும் பணியாற்ற ஆர்வம் இல்லை. அதுபோன்றவற்றை நான் எதிர்பார்க்கவும் இல்லை. பதவிகளுக்காக கட்சிகளில் இணையவும் மாட்டேன்.
முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்து விலகி நான்கு மாதங்களுக்குள் அரசு பதவியை ஏற்றது தவறான சர்ச்சைகளுக்குள் உங்களை தள்ளுகிறதே?
நான் நான்கு மாதங்களுக்குள் அரசு பதவியை ஏற்றது குற்றமெனில் ஓராண்டிற்கு பிறகு ஏற்றால் சம்மதிப்பீர்களா? எந்த கண்டனங்களையும் தெரிவிக்காமல் என்னை ஏற்பீர்களா என்னழ
நன்றி: இந்தியா டுடே
ஆங்கில மூலம் ராஜ் செங்கப்பா, ராஜ் தேகா