இடுகைகள்

பஞ்சாப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிற மாநிலங்களை விட பஞ்சாப் வெளியிடும் மாசு குறைவுதான்!

படம்
நெற்கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவோம்.  பஞ்சாப்பில் அறுவடை முடிந்ததும் நெற்கழிவுகளை எரிப்பது வழக்கம். மாறிவரும் சூழலில், இந்தப் பழக்கம் சூழல்கேடுகளை உருவாக்கி வருகிறது. இதனைக் குறைக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர்களை எரிக்கும் நிகழ்வு போன ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நடந்துள்ளது. இதைத்தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? இந்த பிரச்னைக்கு நீண்டகால நோக்கில் யோசித்துத்தான் தீர்வுகளைக் காண முடியும். நாங்கள் விவசாயிகளுக்கான எந்திரங்களை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டில் 28 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். இந்த ஆண்டில் 22 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். மேலும் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயை மானியமாக வழங்கிவருகிறோம். இது மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கான குறைந்த விலையை விட அதிகமாகும். மாநில அரசாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்துத்தான் நாங்கள் செயல்பட முடியும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவினால் மட்டுமே மாசுபாடுகளை குறைக்க முடியும். விவசாயிகளு

கவிதைகளை உயிர்ப்பிக்கும் டெக் வல்லுநர்!

படம்
பஞ்சாப் கவிதைகளை உயிர்ப்பிக்கும் பாக்.டெக் வல்லுநர்! அபிதின் பத்து வயதில் அவரது தந்தை அவருக்கு பஞ்சாபி சூபி நூல்களின் தொகுப்பை வாசிக்க கொடுத்தார். அதிலிருந்து கவிதைகள் அனைத்தும் படிக்கும் போதே அபித்துக்கு பெரும் பரவசத்தைத் தந்தன. அப்போது அவரின் வீட்டின் பெற்றோர் தங்களுக்குள் பஞ்சாபி பேசினாலும் குழந்தைகளிடம் உருதில் பேசினர். நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பதால், அங்கு பஞ்சாபியைப் பேசுவது மிக குறைவு. அப்படிப் பேசினாலும் அதனை சிலர் கொச்சையாக நினைக்கின்றனர். தற்போது பஞ்சாபி மொழிக்காக ஃபோக்பஞ்சாப் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். அதோடு இம்மொழிக்கான அகராதியையும் உருவாக்கியுள்ளார் அபித். நன்றி: தி டைம்ஸ்