இடுகைகள்

திரைப்படம் குறித்து எனக்கும் சில ஆர்வங்கள் உண்டு. லூசியா திரைப்படம் முகநூல் நண்பர்களின் மூலம் மக்களின் பணம் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைக்கதை அவர்களுக்காக முழுதும் வெளியிடப்பட்டது என்ற செய்தியை அறிந்தேன். புதுமையான முயற்சிகளை என்றும் வரவேற்க விரும்புவன் நான் .எனவே லூசியா விமர்சனத்தை நண்பர் ஒருவரின் வலைதளத்திலிருந்து வழங்குகிறேன்.    திரைப்படம், காமிக்ஸ் குறித்த தேடுதல்களுக்கு karundhel.com, kolantha.blogspot.com    என்ற முகவரியைத் தேடிப்பாருங்கள்.                                            70MM லூசியா - கனவுகளின் காதலன்! நீ மாயையினுள்ளா... ? மாயை உனக்குள்ளா ?! நீ உடலினுள்ளா... ? உடல் உனக்குள்ளா ?! நீ கனவினுள்ளா... ? கனவு உனக்குள்ளா ?!  நீ போதையினுள்ளா... ? போதை உனக்குள்ளா ?!   இ ந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க , படம் துவங்குகிறது! பலத்த அடி பட்டு கோமாவில் கிடக்கிறான் நிக்கி என்ற நிகில் ; அதற்கான காரணத்தை அறிய புலன் விசாரணைகள் நடந்து கொண்டிருக்க , இடையிடையே அவனது பிளாஷ்பேக் காட்சிகள் நமக்குக் காட்டப் படுகின்றன! பெங்களூர் தியேட்டர் ஒன்றில் , டார்ச் அடி
வானகம் இதழில் வெளிவரும் திரு. முருகானந்தம் ராமசாமியின் விவசாயக்கட்டுரை இங்கு முன்னதாகவே அவரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. யார் இந்த முருகானந்தம் முருகானந்தம் தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்று நீரின் மாசுபடுதலுக்காக சபர்மதி அறக்கட்டளை நிறுவி பாடுபட்டு வருகிறார். தேசிய கட்சி ஒன்றின் தாராபுரப் பகுதி செயலாளராக இருக்கும் அவர் தன் கட்சியின் அடையாளம் தாண்டி மானுடத்தை நேசிக்கிறவர். பல்வேறு சூழல் சார்ந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் தன்னால் முடிகின்ற அனைத்து தளத்திலும் செயல்படுத்தி வருபவர். பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளிலும், இசை குறித்தும் நுணுக்கமான ரசனை கொண்டவர்.        ஜூலை ஐந்தாம் தேதி உழவர் தினமாக கடைபிடிக்கப்படுவதை ஒட்டி உழவர் தினம் தோன்றியது எப்படி, அதற்கு தன்னை அர்ப்பணித்த நாராயணசாமி நாயுடு என்னும் மனிதரைப் பற்றியும் கூறுகிற இந்தக் கட்டுரை, இன்றைய பல்வேறு விவசாய சங்க நிலைமைகளின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கிற அதே வேளையில் அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பேசவேண்டிய நெருக்கடிகளையும், அர்ப்பணிப்பும், சமரசமற்ற நேர்மையும் கொண்ட தலைமைத்துவம் இன்றுவரையும் இல்லாது போன அவலத்த
      சுந்தர் லால் பகுணா சூழல் போராளி இமயத்தின் தூய வெண்பனி படர்ந்தது போல் வெண்தாடியும் , நரை மயிரும் கொண்ட இந்த 84 வயது முதியவர் , நடுக்கும் குளிரில் ஒற்றை மண் குடிலில் பாகிரதி நதியின் தீரத்திலே அவருடைய மனைவியோடு பல வருடங்கள் வாழ்ந்தவர் .சுந்தர்லால் பஹுகுணா , இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தியர்களில் மிக முக்கியமானவர் .எழுபதுகளில் தொழில்மயமாக்கல் அதன் உச்சத்தில் இருந்த காலம் சூழலியல் பாதிப்புகளை பற்றி மக்கள் கவலைப்படாத காலம் .அப்பொழுது மலர்ந்த இயக்கம் தான் சிப்கோ இயக்கம் .அந்த இயக்கமே இந்திய அளவில் சூழலியளுக்கான முதல் மற்றும் முக்கிய இயக்கம் என்று உறுதியாக சொல்லலாம் .அந்த இயக்கத்தில் பல பிராந்திய தலைவர்களின் பங்களிப்பு இருந்தாலும் , அதில் மிக முக்கியமான ஒருவர் பஹுகுணா .   இமாலயத்தில் தெஹ்ரி அணைக்கு எதிராக இரு தசாப்தங்களாக அணையை ஒட்டி ஒரு சிறு குடிலை அமைத்து கணவனும் மனைவியுமாக வாழ்ந்து தொடர்ந்து போராடி வந்தனர் . 2004 ஆம் ஆண்டு அவரை அங்கிருந்து அப்புறபடுத்தியது அரசு , அங்கிருந்து கோட்டியில் பாகிரதி நதியை ஒட்டி ஒரு இரண்டுமாடி வீட்டில் அவருடைய மனைவியோடு வாழ்ந்து வருகிற