இடுகைகள்

வானகம் இதழ் ஏப்ரல் – மே 2014 தலையங்கம்

வானகம் இதழ் ஏப்ரல் – மே 2014 தலையங்கம்                            தொகுப்பு: அரசமார் வானகத்திலிருந்து ஒரு விதை!      கனவு கனிந்திருக்கிறது. விவசாயம் தொடர்பான இதழ் ஒன்றினை எந்த சார்புமில்லாமல் உழவர்களின் நலன், இயற்கையின் நலம் விரும்பி உருவாக்க விரும்பினார் நம்மாழ்வார். இன்று நம்மாழ்வார் நம்முடன் இரண்டறக் கலந்திருப்பதன் நம்பிக்கையில் அவர்தம் கனவை நாம் அனைவரும் ஏற்றிருக்கிறோம்.      எப்போதும் பெரும்பான்மை மக்களின் ஆசை, கருத்துக்களுக்குத்தான் மதிப்பு என்றில்லாமல் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சூழல் குறித்த அக்கறையோடும், உணவு குறித்து கவலைப்படும், உழவர்களின் நலன் பற்றியும் சிந்தனை செய்யும், செயல்பாடுகளை முன்னெடுக்கும் குழு இன்று உருவாகியுள்ளது. எதையும் மக்களுக்கு விதியாக நிர்ணயிக்காமல் பல்வேறான வாய்ப்புகளை உருவாக்க முனைவதே இயற்கை சார்ந்த செயல்பாடுகளுக்கு நல்ல பொருளாக இருக்க முடியும். சிறு பொறி போன்ற நம்பிக்கைதான் பல தடைகளை வென்று சாதித்திருக்கிறது. உலகில் அனைத்து மாற்றங்களும் எதிர்ப்பு, ஏளனங்களைக் கடந்து ஏற்றுக்கொள்ளுதல் நிகழும்வரை மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் மனம் சோராது

காற்று மழை வெயில் வெளிச்சம் பகுதியில் அன்பரசின் கடிதங்கள்

கோமாளிமேடை ஊமையின் புல்லாங்குழல் காற்று மழை வெயில் வெளிச்சம் ஹெரிடேஜ் தமிழன் [2014]                       ஊமையின் புல்லாங்குழல்                     ·          அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் ·          தொகுப்பாசிரியர் : அரசமார்      என் சகோதரர் மூலம் அன்றுதான் முருகானந்தம் ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அப்போது எவ்வளவு தூரம் அபத்தமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினேன். அப்போது திருப்பூரார் அருகிலிருந்தார். முகவரி பெற்றுக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த விஷயத்தையும் பேசுவதற்கு இன்றுவரையில் என் சமவயது தோழர்கள் யாரும் கிடையாது. எந்த ஒரு விஷயம் குறித்தும் தெளிவான பார்வை, தான் சார்ந்த கட்சி குறித்த நேர்மையான நிலைப்பாடு, எந்த விஷயம் குறித்தும் தயக்கமில்லாமல் முருகுவிடம் உரையாடலாம். பல விஷயங்கள் பேச்சில் வந்தாலும் நான் முடிந்தவரை கலைகள் குறித்து பல பகிர்தலை நிகழ்த்த மேற்கொள்ள முயற்சித்தேன்.                                                      22.9.2012 இரா. முருகானந்தம் அவர்களுக்கு,      அன்பரசு எழுதுவ