இடுகைகள்

தடைபட்டு போன இலக்கிய நோபல் பரிசு!

படம்
இலக்கிய நோபல் சர்ச்சை ! இவ்வாண்டிற்கான நோபல்பரிசு பாலியல் ஊழல் பிரச்னைகளால் அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . 1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த ஆசைப்படி இலக்கிய நோபல் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது .  1901 ஆம் ஆண்டு முதல் இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது . 1914, 1914, 1935, 1940,1941, 1942, 1943 ஆகிய ஆண்டுகளில் படைப்புகள் செறிவாக இல்லை என்பதற்காக பரிசுகள் அறிவிக்கப்படவில்லை . தற்போது பரிசுகளை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமியைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஜீன் கிளாட் அர்னால்ட் பதினெட்டு பெண்களிடம் பாலியல்ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு சர்ச்சைகள் ஆகியுள்ளார் . இவரும் , மனைவி கடாரினாவும் இணைந்து நடத்தும் கலாசார கிளப்புக்கு அகாடமி நிதியளித்து வருகிறது . பல்வேறு புதிய பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்களுக்கு வெளிச்சம் தந்த விருது இலக்கிய நோபல் . எ . கா . ரஷ்ய பத்திரிகையாளர் ஸ்வட்லானா அலெக்ஸிவிட்ச் (2015). ஸ்வீடிஷ் அகாடமி தன்மீதான கறையை துடைத்து உயிர்ப்புடன் மீண்டும் எழவேண்டும் என்பதே கலைஞர்களின் விருப்பம் . 

ரோக் - மசாலா டாக்கீஸ்

படம்
ரோக் பூரிஜெகன்னாத் ஒளிப்பதிவு:முகேஷ் இசை:சுனில் காஷ்யப் முன்கோபமும், காதலும் கொண்ட இளைஞனின் கதை. கிளுகிளுப்பான படமாக இருக்கும் என முதல் பாட்டை பார்த்ததும் பலரும் நினைப்பார்கள். படத்தில் ஆக்ரோஷமும், வன்மமும் கொப்பளிக்கிறது. இஷானை கமிஷனரின் தங்கை அஞ்சலி 1 ஏமாற்றிவிடுகிறார். கல்யாணத்தை தடுக்க நினைத்து இஷான் செய்யும் கலாட்டாவினால் சிறைதண்டனை கிடைக்கிறது. பின் விடுதலை ஆகி வீட்டுக்குப் போனால் தந்தை வெளியே போ என விரட்டுகிறார். காரணம், கல்யாண வீட்டு கலாட்டாவில் மூர்க்கத்தனமாக ஒருவரை டேபிளில் தூக்கி விசிறியதில் இருகால்களும் காவலருக்கு உடைந்துவிடுகிறது. வருமானமின்றி தவிக்கும் அக்குடும்பத்திற்காகவே தன் மகனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் இஷானின் தந்தை. பின்னர் உண்மை புரிந்து காவலரின் வீட்டுக்கு சென்று வட்டிப்பணத்தையும்  கட்டி குடும்பத்தை அய்யனாராக காத்து நிற்கிறார். சீரியசான கதை போல தோன்றலாம். இதில் அலி இருப்பதால் காமெடியும் உண்டு. உடைந்த கால்களைக் கொண்ட காவலருக்கு பாரில் பாட்டுப்பாடும் தங்கை உண்டு. யெஸ் லவ் போர்ஷன்(பாட்டு கம்போஸ் பண்ணி வெச்சிருக்கோமே? பாஸ்)  அஞ்சலி 2 அறிமுக

இந்தியாவின் அணுசக்தி பயணம்!

படம்
அணுசக்தி பயணம் ! இந்தியாவின் அணுசக்தி பயணம் தொடங்கிய ஆண்டு 1944. டாடா ஆராய்ச்சி நிலையத்தில் இதனை தொடங்கியவர் இயற்பியலாளரான ஹோமி ஜே . பாபா . ஆராய்ச்சிகள் தொடங்கிய நான்காவது ஆண்டில் 1948 ஆண்டு , ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான அணுசக்தி ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது . 1968 ஆம் ஆண்டு இங்கிலாந்து , அமெரிக்கா , சீனா , பிரான்ஸ் , ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் (NPT) இந்தியா கையெழுத்திட மறுத்தது . இந்த ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது . 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது . 1998 ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு , ஐந்து அணு ஆயுதச்சோதனைகளை நடத்தியது . இதன் விளைவாக உலகநாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிட்டது .  2001 ஆம் ஆண்டு இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டது . 2005 ஆம் ஆண்டு அமெரிக்கா - இந்தியா அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது

சிறையில் வெளியான கைதிகளுக்கான பத்திரிகை!

படம்
ஜெயில் பத்திரிகை ! ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்ற குற்றவாளிகளால் தொடங்கப்பட்டது பிரிசன் மிரர் என்ற பத்திரிகை . அமெரிக்கா மட்டுமல்லாது மூன்று வெளிநாடுகளுக்கும் சென்றது இதன் சாதனை . சிறையில் 1,200 பிரதிகளும் , சிறைக்கு வெளியே 2 ஆயிரம் பிரதிகளும் விற்கப்பட்டன . ஆண்டு சந்தா 5 டாலர் , ஓராண்டு சந்தா 1 டாலர் விலையில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று பிரிசன் மிரர் வெளியானது . 1876 ஆம் ஆண்டு நார்த்ஃபீல்டு பகுதியிலுள்ள வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியில் தோற்ற ஜெஸ்ஸி ஜேம்ஸ் , கோல்மன் யங்கர் மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் ஆகியோர் 50 டாலர் செலவில் நாளிதழை தொடங்கினர் . டேப்லாய்டு வடிவ நாளிதழின் பதினாறு பக்கங்களுக்கும் கைதிகளே பொறுப்பு . 1985-86 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கா பீனல் பிரஸ் பிரிசன் மிரர் பத்திரிகைக்கு வழங்கப்பட்டுள்ளது . பல்வேறு வார்டன்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிரிசன் மிரர் சிறைச்சாலை பற்றிய செய்திகள் , கடிதங்கள் ஆகியவற்றை தாங்கி வெளியானது . தொடங்கிய காலத்திலிருந்தே கைதிகளின் குரலை , எழுத்தை வலுப்படுத்த உருவான பத்திரிகை என்ற லட்சியத்தை தி பிரிசன் மிரர் விட்டு க

FBI வீழ்ச்சியடைந்தது எப்படி?

படம்
மக்களின் நம்பிக்கையிழந்த FBI! எஃப்பிஐயின் 110 ஆண்டுகால வரலாற்றில் இப்படியொரு களங்கம் இனிமேலும் ஏற்படப்போவதில்லை . நாட்டு அதிபரே காவல் அமைப்பின் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் . 36 ஆயிரம் பேர் பணிபுரியும் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளார் . எந்த விவகாரங்களில் எஃப்பிஐ தடுமாறியுள்ளது ? நெவடா மற்றும் ஓரேகான் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டக்குழுவை அச்சுறுத்தியதாக எஃப்பிஐ அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது . துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொய் கூறிய அதிகாரி மீது கோர்ட் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது . 2015 ஆம் ஆண்டு டெக்ஸாசில் நடந்த தீவிரவாத தாக்குதலில் எஃப்பிஐயைச் சேர்ந்த அதிகாரியும் உள்ளதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது . தீவிரவாத ஒழிப்புக்குழுவிலிருந்த மொழிபெயர்ப்பு பெண் , ஐஎஸ்எஸ் அமைப்பிலிருந்த ஒருவரின் காதலில் ஈடுபட்டு சிரியாவுக்கு அவரை மணக்க சென்றது எஃப்பிஐ அமைப்பை சங்கடப்படுத்திய விவகாரம் . ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லாரி நாசர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் ஓராண்டாக இழுபற

புத்தகம் புதுசு!

படம்
புத்தகம் புதுசு ! Ghost Boys by Jewell Parker Rhodes 192pp Little, Brown Books தன் பொம்மைத்துப்பாக்கியால் போலீஸ் மூலம் சுடப்பட்டு அநியாயமாக ஆவியாகிறான் பனிரெண்டு வயசு ஜெரோம் . அப்போது தன்னைப் போன்ற சூழலில் இறந்த எம்மெட் டில் என்ற சிறுவனை சந்திக்கிறான் ஜெரோம் . இருவரின் வாழ்வு வழியாக அமெரிக்காவில் நிலவிவரும் இனவெறி அவலத்தை விவரிக்கிறார் ஆசிரியர் . The Stone Girl's Story by Sarah Beth Durst 336pp Clarion மலையில் வாழும் சிற்பி , தன் அபூர்வ திறமையால் பாறைகளை விலங்குகளாக வடித்து ஸ்பெஷல் திறமையால் அதற்கு உயிரும் கொடுக்கிறார் . அதில் மாய்கா எனும் பனிரெண்டு வயது சிறுமியும் அடக்கம் . திடீரென சிற்பி இறந்துபோக , பாறைகளின் உடலிலுள்ள வடிவங்களும் காலப்போக்கில் மறைய , உயிருடன் உலாவிய விலங்குகள் இறக்கின்றன . தங்களை மரணத்திலிருநது காக்கும் சிற்பி தேடி சிறுமி மாய்கா செல்லும் பயணமே கதை .  

ஐரோப்பாவில் தொடங்கிய கொடூரநோய்!

படம்
தொழுநோயின் நதிமூலம் எது ? ஐரோப்பாவிலிருந்து தொழுநோய் உலகெங்கும் பரவியுள்ளது என அகழ்வாராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . இதற்கு முன்பு தொழுநோயின் பூர்விகம் ஆசியா என கருதப்பட்டு வந்தது . " பல நூற்றாண்டுகளாக கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து தொழுநோய் பரவியது என்று யூகமாய் நம்பப்பட்டு வந்தது . தொழுநோய் பாக்டீரியத்தின் எச்சங்கள் தென்கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பரவியிருக்கலாம் என்ற தீர்மானத்தை ஏற்படுத்தியுள்ளது " என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெலன் டோனக் . இன்றும் உலகளவில் 2 லட்சம் தொழுநோயாளிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தகவல் தருகின்றன . 90 மண்டை ஓடுகளை அறிவியலாளர்கள் ஆராய்ந்ததில் கி . மு . 400-1400 காலத்திலேயே தொழுநோய் பாக்டீரியம் இருப்பதை கண்டறிந்தனர் . எசெக்ஸிலுள்ள செஸ்டர்ஃபீல்டில் கிடைத்துள்ள லெப்ரே நுண்ணுயிரிக்கு வயது கி . மு .415-545 க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது . தொடரும் ஆராய்ச்சிகள் தொழுநோய் குறித்து துல்லியமான தகவல்களை தரக்கூடும் .