இடுகைகள்

ஹோலோகிராம் மனைவி - வருகிறது டிஜிசெக்சுவல்ஸ் கலாசாரம்

படம்
ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த அகிகோ கோண்டோ என்ற கல்வி நிறுவனப் பணியாளர், கல்யாணத்தில் புதுமையைச் செய்துள்ளார். கடந்த நவம்பரில் சுற்றும் சூழ நாற்பது பேர் ஒன்றுசேர்ந்து வாழ்த்த  ஹட்சுனே மிகு என்ற ஹோலோகிராம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அகிகோ தன் ஹோலோகிராம் மனைவியுடன் ஆனால் இது பப்ளிசிட்டி கல்யாணம் அல்ல. உண்மையிலேயே காதலியை விரும்பி திருமணம் செய்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்பது ரோபோக்களில் மட்டுமல்ல கேமராக்கள், பொருட்கள் என அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. அப்புறம் படுக்கை அறைக்கும் வருவதற்கு என்ன? ஜப்பான் டைம்ஸ் அகிகோவின் கதையை வெளியிட்டு தவறானது என தீர்ப்பு எழுதியுள்ளது. ஆனால் யாரோ ஒருவர் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை குறித்து தீர்ப்பு எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? அகிகோ போல உலகில் யாருமே இல்லையா? 2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண்மணி, ”தன்னால் ஆண்களோடு உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. ரோபோக்களே பெஸ்ட். மனிதர்களில் ஆண்களுடன் காதலிக்க மட்டுமே என்னால் முடியும். செக்ஸ் வைத்துக்கொள்வது சாத்தியமில்லை ” என்று கூறியுள்ளார். இவர்களை டிஜி செக்ஸூவல் என்று குறிப்பிடுகின

முன்னோர்களைத் தேடி....

படம்
முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சென்று வர வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? மனிதர்களின் முன்னோர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கலாம்.  அவர்கள் இரு கால்களைக் கொண்டவர்களாக அல்லது வேறுபட்டும் இருக்கலாம்.  இதே கனவைத்தான் ஆவணப்படமாக்கியுள்ளார் பிரெஞ்சு இயக்குநரான ஃபிரடெரிக் ஃபோகியா. ”நாம் அனைவரும் தெரிந்துகொள்ள விரும்பும் கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் என்பது. நாம் யார், எங்கிருந்து வந்தோம், நமக்கான விதிகள் எப்படி உருவாயின, நமக்கான அரசியல் எது, ஆகியவற்றை இந்த ஆவணப்படம் உள்ளடக்கும் ” என்கிறார் ஃபிரடெரிக். இவர் இதற்கு முன்பு ஹனுமான், வைல்ட் பிரான்ஸ் ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். 90 நிமிஷ ஆவணப்படத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கேரக்டர்கள் உள்ளனர். உண்மையான பல்வேற உயிரினங்களின் மண்டை ஓடுகள், படிமங்கள் ஆகியவற்றை காட்சிபடுத்தியுள்ளனர். ரெவனனட் படத்திற்கான மேக்அப் குழு இந்த ஆவணப்படத்திற்கு பணிபுரிந்துள்ளது. “நம் முன்னோர்கள் எப்படியிருப்பார்கள் என்ற தெளிவுக்கு வரவே இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்பட்டது. அதனை சுவாரசியமாக சொல்லுவது என்பது அடுத்தகட்ட சவால். இதில் பங்கேற்

அடுத்த நொடியை நம்மால் தீர்மானிக்க முடியாது - லிசா ரே

படம்
லிசா ரே, கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருடன் மீண்டிருக்கிறார். தற்போது 4 மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் என்ற அமேசான் ப்ரைம் தொடரில் நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக நீங்கள் தாயானது, நடிப்பு ஆகியவை.... ஜார்ஜியாவிலுள்ள காகஸ் மலைத்தொடருக்கு சென்று வந்தது அருமையாக இருந்தது. என் குழந்தைகளுடன் சென்று வந்த பயணம் அது. 2009 ஆம் ஆண்டு மைலோமா புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட நொடி தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் நெருக்கடியான நிலைகளைக் கொண்டது. 2018 ஆம் ஆண்டு என் குழந்தைகளை பிரசவித்தேன். மகிழ்ச்சியான நிகழ்வு அது. பொறுப்பு, தகவல் தொடர்பு என நிறைய விஷயங்கள் மாறியுள்ளன. குறிப்பிட்ட விதிகளின்படி வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளீர்கள். அதைப்பற்றி விளக்குங்கள்.  நான் நடிகை என்பதை என் ஆழ்மனம் ஏற்க மறுக்கிறது. புற்றுநோய் சம்பந்தமான கட்டுரைகள், அனுபவங்களை முன்னமே நான் எழுதியுள்ளேன். யெல்லோ டையரீஸ் என்ற நூலை நீங்கள் படித்திருக்க கூடும். மேலும் பல்வேறு மேடைகளில் புற்றுநோய் பற்றிய தன்னம்பிக்கை பேச்சுகளை நிகழ்த்தியுள்ளேன். இவையெல்லாம் என

சந்தோஷ புத்தகங்கள்! - ஜனவரி ரிலீஸ்

படம்
ஜனவரி ஜனுஹேரி என இந்த ஆண்டுக்கான ட்ரெண்டுகள் கிளம்பிவிட்டன. ஜனவரி மாதத்திற்கான புத்தகங்களும் வெளியாகத்தொடங்கிவிட்டன. அதில் சில நூல்கள்: விழிகள் தெறிக்கும் நேரம் வரை படிப்பு, கடிகாரமுள் ஓவர்டைம் பார்க்கும் வேலை,  தொந்தி தள்ளும் வயிறு, பேங்க் பேலன்ஸைக் காட்டி அந்தஸ்தான கல்யாணம் என இவை இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா? ஹேப்பி எவர் ஆஃப்டர் நூலாசிரியர் பால் டோலன், இவற்றை மறுத்து தன் எழுத்து வழியே புது வழி காட்டுகிறார். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு விதம் எனும்போது மேலே சொன்ன விஷயங்கள் எப்படி அனைவருக்கும் ஒன்றுபோல செட்டாகும் என யோசிக்க வைக்கிறது . உலகெங்கும் நியூஸ் எங்கில்லை. பாரம்பரிய சேனல்கள், பத்திரிகைகள் தாண்டி சமூகவலைதளங்கள் புதிய செய்திகளைச் சொல்லும் அதிவேக ஊடகங்களாகி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த செய்தி சுனாமிகளிடமிருந்த நமக்கான அந்தர உலகைக் காப்பாற்றி எப்படி வாழுவது என்பதை ஆசிரியர் மேட் ஹைக் சொல்லுகிறார். சந்தோஷம் எப்படி உருவாகிறது என யோசித்திருக்கிறீர்களா? தந்தி முதல் தினகரன் வரை இதனை எப்படி அணுகி கட்டுரை எழுதுவார்கள்? டோபமைன், செரடோனின் என அறிவியல் முறையி

நிதானமான படம் பார்க்கணுமா? சம்மோகனம் இருக்கு!

படம்
சம்மோகனம் (தெலுங்கு) தெலுங்கு படங்களில் நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கிறீர்களோ அது எதுவும் சம்மோகனம் என்ற இந்தப்படத்தில் கிடையாது. குத்துப்பாட்டு, பன்ச் டயலாக், முதுகுத்தண்டு சில்லிடும் ஃபைட் என எதுவும் கிடையாது. கதையை 21 பஸ் டிக்கெட்டில் எழுதிவிடலாம். அப்புறம் என்ன விசேஷம்? எடுத்த விதம்தான் அம்சமாக இருக்கிறது. பதட்டமே இல்லாமல் படம் செல்கிறது. இல்லை நான் போயபட்டி ஸ்ரீனு படம்போல வேகமாகவேண்டும் என்று சொன்னால் இந்தப்படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கான படங்கள் வரையும் ஓவியர், நடுத்தர வர்க்கத்திற்கு மேலுள்ள குடும்பம். சினிமா நடிகர்கள், நடிகைகளை தீவிரமாக வெறுப்பவர். ஆனால் தந்தையின் சினிமா ஆசைக்காக வீட்டில் நடக்கும் ஷூட்டிங்குக்கு ஒப்புக்கொள்கிறார். அங்கு வரும் நடிகை மீது காதலாகிறார். ஆனால் நடிகை ஓவியரை காரணமேயின்றி தயக்கத்துடன் மறுக்கிறார். மறுக்க என்ன காரணம், ஓவியரின் தந்தைக்கு இருக்கும் நடிகர் ஆசை என்னவானது? ஆகியவற்றுக்கு இதமான இசை, இசைவான நடிகர்களின் பங்களிப்புடன் கதை சொல்கிறார்கள். மோகன கிருஷ்ண இந்திரகாந்தியின் படம்(அமிதுமி, ஜென்டில்மேன்படங்களை இயக்கியவர

கொட்டாவி விடும்போது காது கேட்கும் திறன் குறைவது ஏன்?

படம்
SF ஏன்?எதற்கு?எப்படி? கொட்டாவி விடும்போது நம் காது கேட்கும் திறன் குறைவது ஏன்? இதற்கு காரணம், காதில் உள்ள தசையான டென்சர் டைம்பானி. கோடாரி ஷேப்பிலுள்ள எலும்புடன் இத்தசை இணைந்துள்ளது. தீபாவளி சமயத்தில் உங்கள் மீது சீனிப்பட்டாசை தூக்கிப்போடும்போது, தண்டபாணி வாத்தியார் கணக்கே வரலையே படவா என ஓங்கி அறையும்போது, ரசத்திற்கு அதிக அப்பளம் எடுத்து லஷ்மி அம்மாவிடம் பிடிபட்டு காது முறுக்கப்படும்போது இத்தசை காதை பாதுகாக்கிறது. குறிப்பாக அதிக ஒலிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது.

மின்சிக்கனத்தை வழிமொழியும் இங்கிலாந்து பொறியாளர்!

படம்
எல்இடி மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்! ஓய்வுபெற்ற பொறியாளர்கள் நம்மூர்ப்பக்கம் என்ன செய்வார்கள்? கோவையின் தண்டாயுதசாமி கோயிலுக்கும், ஈஷாவுக்கும் சென்று தலைமுழுகி துறவி அவதாரம் எடுக்க முயற்சிப்பார்கள். வெளிநாட்டவர்கள் குளிப்பதில் சோம்பல் பட்டாலும் சாகும்வரை நிறைய கண்டுபிடித்துவிட்டுத்தான் போவார்கள் போல. ஓய்வுபெற்ற பொறியாளர் ரோட்னி பிர்க்ஸ் , எல்இடி பல்புகளை வீடு முழுக்க பயன்படுத்தி 90 சதவீத மின் கட்டணத்தை குறைத்துவிட்டார். எப்படி? இங்கிலாந்திலுள்ள 25 மில்லியன் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வரும் மின் கட்டண பில் மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள். அதோடு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கார்பன் வெளியீடு வேறு உள்ளது. எங்கள் குழுவில் சூழலுக்காக ஜனனியும், கார்பன் வெளியீட்டுக்காக மனோவும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை விட அதிகம் கவலைப்படுகிறவர்கள். அவர்களுக்காகவாவது ரோட்னி எப்படி சாதித்தார் என்பதை கூறவேண்டும். ஒளிவீச்சு குறைந்த 40 எல்இடி பல்புகளைக் கொண்டே ரோட்னி மின்சார சாதனையைச் செய்துள்ளார்.  “முதலில் என் வீட்டில் நிறைய பல்புகளை பயன்படுத்தி வந்தேன். அப்போது எல்இடி பயன்ப