இடுகைகள்

வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! - ரோக்ஸி மேத்யூ கோல்

படம்
  ரோக்ஸி மேத்யூ கோல், ஜப்பானில் கடல் மற்றும் வானிலை இயக்கம் பற்றிய முனைவர் படிப்பை படித்தவர். தற்போது, இந்திய வெப்பமண்டல வானியல் கழகத்தில் சூழல் அறிவியலாளராக பணியாற்றி வருகிறார். புயல், வெப்பஅலை, கடல் சூழல் பற்றி ஆய்வுகளை செய்துவருகிறார்.  வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதே? உலகளவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வேகம் குறைவாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் செயல்பாடுகளை உலகளவிலும், உள்ளூர் அளவிலும் சமச்சீராக செய்வது அவசியம். மக்களின் இனக்குழு மற்றும் கிராம பஞ்சாயத்துகள் காலநிலை மாற்ற மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பதோடு, அதனை செயல்படுத்தவும் முன் வரவேண்டும்.  இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது? ஐ.நாவின் காலநிலை கௌன்சில்(IPCC), இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்து வருவதைக் கூறியிருக்கிறது. கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, இந்தியா முழுக்க பெய்த 3 மடங்கு அதீத மழைப்பொழிவு, புயல்களே முக்கியக் காரணம். நாம், கார்பன்

இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பதுதான் எனது வேலை - ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன்

படம்
  ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன் இயற்கை பேரிடர் வல்லுநர், யுனிசெஃப் தற்போது தாங்கள் என்ன பணிகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்? இயற்கை பேரிடர்களை முன்னமே கணித்து தடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். இயற்கை பேரிடர் ,நடந்த முதல் 72 மணிநேரம் முக்கியமானது. அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.  இதற்கென சில மாதிரிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் நாங்கள் மண்டல அளவிலான அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுவோம். இப்போது தகவல்களுக்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றை உருவாக்கியுள்ளோம்.  நீங்கள் ஜியோமேட்டிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? எனக்கு புவியியல் துறையில் ஆர்வம் உண்டு. எனக்கு 14 வயதாகும்போது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைப் பார்த்தேன். இந்த இயற்கை பேரிடர்தான் இத்துறையில் நான் இன்று பணியாற்றுவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் அரசு அதிகாரியான எனது தந்தை அங்குள்ள மீனவர்களை அடிக்கடி சந்திப்பார். நானும் அப்படிப்பட்ட நேரத்தில் அப்பாவுடன் கூடவே செல்வேன்.  சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பிறகு அக்கடற்புரத்திற்கு நான் சென்றேன். இயற்கை பேரிடரால் மக்கள் எப

பூமிக்கு நுண்ணுயிரிகள் அவசியம்! - ராபர்ட்டோ கோல்ட்டர்

படம்
  நேர்காணல் ராபர்ட்டோ கோல்ட்டர் அமெரிக்காவிலுள்ள நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். மனிதர்களின் வாழ்க்கை, சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பூமியிலுள்ள உயிரினங்களுக்கு நுண்ணுயிரிகள் எதற்கு அத்தியாவசியம் என்று கூறுகிறீர்கள்? நமது பூமி இயங்கும் செயல்பாட்டிற்கு, நுண்ணுயிரிகள் பங்களிப்பு முக்கியம். நுண்ணுயிரிகள் இல்லாத சூழலில் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியும் வாழ்கைகயும் பூமியில் சாத்தியமாகி இருக்காது. கடலில் ஆக்சிஜன் உற்பத்தியாக நுண்ணுயிரிகள் உதவுகின்றன. உயிரினங்களின் வாழ்வுக்கு முக்கியமான சல்பர், நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை நுண்ணுயிரிகள்தான் தயாரிக்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, பயிர்கள் மண்ணில் விளைய என அனைத்து முக்கிய நடவடிக்கையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளது.  மனிதர்களுக்கு நுண்ணுயிரிகளின் உதவி தேவையா? பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தும் , தொடர்புகொண்டும் தான் இயங்குகின்றன. இந்த வகையில் நம் உடலிலுள்ள தோல், நுண்ணுயிரிகளோடு தொடர்புகொண்டுதான் உள்ளது. அதேபோல, வயிற்றின் குட

வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது பயிர்கள் அனைத்துமே பாதிக்கப்படும்! - ரேச்சல் பெஸ்னர் கெர்

படம்
  ரேச்சல் பெஸ்னர் கெர்  ஆசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ரேச்சல், கல்விப்பணியோடு சமூக ஆராய்ச்சியாளராக சூழல் மற்றும் உணவு பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.  உணவு பாதுகாப்பில் என்னென்ன மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்? வெப்ப அலைகள் அல்லது வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது, அனைத்து பகுதியில் உள்ள பயிர்களும் பாதிக்கப்படும். இதன் விளைவாக பிற பகுதிகளில் இருந்து கூட உணவை நம்மால் பெறுவது கடினம். ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சிறு தீவுகளில் ஊட்டச்சத்து பாதிப்பு கூட ஏற்படலாம். இதுபற்றி நாங்கள் செய்த சூழல் ஆய்வில், உணவுபாதுகாப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம்.   நீங்கள் ஆப்பிரிக்காவில் செய்த காலநிலை மாற்றசெயல்பாடுகள் என்னென்ன? நான் இருபதாண்டுகளாக மலாவி, தான்ஸானியாவில் வேலை செய்து வருகிறேன். அங்கு விவசாயிகள் பல்வகையான பயிர்களை பயிரிடவும், மண்ணை சோதிக்கவும், இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும் ஊக்கப்படுத்தினேன். இதன்மூலம் உணவுப்பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைவு பிரச்னையை எளிதாக தீர்க்கலாம்.  வெப்பஅலை, இந்தியாவின் விவசாய துறையை எந்தளவு பாதிக்கும்? எங்களது ஆய்

பசுமையான மரங்கள் நடப்படவேண்டும் என்பதே எனது லட்சியம்! - பீட்டர் ஜேம்ஸ்

படம்
  நேர்காணல் பீட்டர் ஜேம்ஸ் உதவி பேராசிரியர்,  சூழலியல், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சூழலியல் பற்றிய தங்களது ஆராய்ச்சியை விளக்க முடியுமா? இயற்கை சார்ந்த இடங்கள் எப்படி மனிதர்களின் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கின்றன, தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். 1976ஆம் ஆண்டு தொடங்கி பல தனிப்பட்ட சூழலியலாளர்கள் செய்த ஆய்வுத்தகவல்களை இதற்காக ஆராய்ந்து வருகிறேன். மனிதர்களின் நோய், இறப்பு ஆகியவற்றையும் கவனித்து வருகிறோம்.  இயற்கைச் சூழல் மனிதர்களுக்கு என்ன பயன்களை தருகிறது? நாம் இன்று டிஜிட்டல் உலகில் கணினி, ஸ்மார்ட்போன்  ஆகியவற்றின் திரைகளைப் பார்க்க அதிக நேரத்தை செலவிடுகிறோம். இது நமது கவனத்தை சிதறடிக்கிறது. இயற்கைச்சூழல், சீர்குலைந்த கவனத்தை சீராக்கி, திறன்களையும் மெருகேற்றுகிறது. பணியாற்றும் போது ஜன்னல் வழியாக தெரியும் இயற்கை காட்சிகள் ஒருவரின் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கிறது.   சூழல் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறீர்கள்? ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி சூழல் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம். இதோடு கைகளில் அணியும் டிஜிட்டல் கருவிகள், டீப் லேர்னிங் அல்காரிதம், கூகுள் ஸ்ட்ரீட் விய

சுகாதாரமான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை! - பீட்டர் கிளீக்

படம்
நேர்காணல் பீட்டர் கிளீக் சூழல் அறிவியலாளர்  அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த அறிவியலாளர், பீட்டர் கிளீக். பசிஃபிக் இன்ஸ்டிடியூட் (Pacific Institute) என்ற அமைப்பைத் தொடங்கி, சூழல் பிரச்னைகளைப் பற்றி பேசி எழுதி வருகிறார்.  நீருக்கும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்பிருக்கிறது என எப்படி கூறுகிறீர்கள்? இன்றுவரை,  தூய குடிநீர், சுகாதார வசதி என்பது  அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. இது நமது மிகப்பெரும் தோல்வி. தூய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அதிக நிதி செலவிட வேண்டும். குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே மனிதர்களுக்கு ஏற்படும் பிற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.   சிறந்த நீர்மேலாண்மைக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? சிங்கப்பூர் நாட்டில் தூய குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி, புத்திசாலித்தனமான நீர்ப்பாசன முறைகளைக் கையாள்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விவசாயிகள் நீரை எப்படி சிறப்பாக பயிர்களுக்குப் பயன்படுத்துவது என அடையாளம் கண்டுள்ளனர்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவின் பருவகாலத்தைப் பாதிக்குமா? நிச்சயமாக. காலநிலை மாற்

பயிர்களை வளர்க்க பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகளை மாற்றிக்கொள்வது அவசியம்! - அரியல் ஆர்டிஸ் போயியா

படம்
  நேர்காணல் அரியல் ஆர்டிஸ் போயியா பொருளாதார பேராசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சி பற்றி கூறுங்கள். வரலாறு மற்றும் எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்கள்  பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். குறிப்பாக, வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள்.  2021ஆம் ஆண்டு நானும், சக பணியாளர்களும் வேளாண்மையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை பற்றிய ஆய்வை செய்தோம். இதில் பயிர்கள், மரங்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை உள்ளடங்கும். 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 99.9 சதவீத உலக வேளாண்மை உற்பத்தியை நாங்கள் ஆய்வில் உள்ளடக்கியிருந்தோம். வெப்பம் அதிகரித்த காலத்தில் வேளாண் துறையில் உற்பத்தி வீழ்ச்சியை அடையாளம் கண்டோம். இதற்கு, சரியான அளவில் முதலீடுகள் தேவை.  பயிர்களை எப்படி விளைவிப்பது? மனிதர்களின் உதவியின்றி முன்னமே பயிர்கள் இங்கு சிறப்பாக வளர்ந்து வந்துள்ளன. மனிதர்களின் எண்ணிக்கை பெருகியபோது, வேளாண்மையின் உற்பத்தி குறையத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில், 7 ஆண்டுகளுக்கான வேளாண்மை உற்பத்தித் திறனை நாம் அறிந்தே அழித்திருக்கிறோம்.  நீங்கள் உற்பத்தித் திறனை வளர்க்க தீர்வுகளை வைத்திர