இடுகைகள்

நிதின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதுரங்க கட்டத்திற்குள் வைத்து வஞ்சக மனிதர்களை வீழ்த்தும் கில்லாடி! - செக் - சந்திரசேகர் யெலட்டி

படம்
                  செக் சந்திரசேகர் யெலட்டி தீவிரவாத தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் திருடன் ஆதித்யா , எப்படி சிறையிலிருந்து ஆப்ரகா டாப்ரா சொல்லித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை . தெலுங்கு சினிமா என்றாலும் சந்திரசேகர் யெலட்டியைப் பொறுத்தவரை படத்தின் சுவாரசியம் எங்கேயும் ஒரு பிரேம் கூட குறையாது . இந்தப் படத்திலும் கூட அதையேதான் எதிர்பார்க்கிறோ்ம் . படத்தையும் அதேபோல நுணுக்கமாக எடுத்திருக்கிறார் . படத்தை முழுமையாக பார்த்தபிறகு ஷஷாங்க் ரிடெம்ஷன் பாதிப்பில் படம் எடுத்திருக்கிறாரோ என்று பலருக்கும் தோன்றும் . அந்த படத்தின் பாதிப்பு திரை ரசிகர்களுக்கே இருக்கும்போது இயக்குநருக்கு இருக்காதா ? ஆதித்யா , ஸ்மார்ட்டாக ஏடிஎம் கார்டு திருடுவது , நுட்பமாக பல்வேறு இடங்களில் புகுந்து பணத்தை அபேஸ் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறான் . ஆனால் அவன் சந்திக்கும் யாத்ரா ( எ ) இசபெல் என்ற பெண் அவனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறாள் . ஆம் இரண்டே காட்சிகளில் காதல் பூக்கிறது . இப்படியெல்லாம் நடக்காதே என்பதற்குள் கல்யாணி மாலிக்கின் அழகான இசையில் கொண்டாட்டமா

அதிர வைக்கும் ரொமான்ஸ் காமெடி - பீஷ்மா படம் எப்படி?

படம்
பீஷ்மா  - தெலுங்கு இயக்கம்  வெங்கி குடுமுலா இசை மகதி சாகர் ஒளிப்பதிவு  ஆஹா... சலோ என்ற நாக சௌரியா படம் பார்த்திருப்பீர்கள் என்றால் இந்த படத்தை நம்பி பார்க்கலாம். சீரியசான கையில் வைத்திருக்கும் பாப்கார்ன் சிதறும்படி எந்த ஆபத்தும் நடந்துவிடாத கதை. நிதின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பின்னியிருக்கிறார். வாட் எ பியூட்டி பாட்டில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். நடித்திருக்கிறார். காமெடி செய்திருக்கிறார். இவருக்கு இணையாக படத்தில் நாயகிக்கான இடத்தையும் ராஷ்மிகா செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. நிதினின் அப்பாவாக வரும் நரேஷ், மாமாவான பிரம்மாஜி காம்போ ரசிக்க வைக்கிறது. ஐயையோ படத்தில் ஆபத்தான சீரியசான எந்த விஷயமும் நடக்கவில்லை. நாயகனுக்கு ஒரே பிரச்னை. வேலை கிடையாது. காதலி கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் நாம் கவலைப்பட்டு படத்தில் என்ன மாறப்போகிறது, எனவே படத்தை காவிரி ஆறு போல அதன் போக்கிலே போகட்டும் என விட்டுவிடுகிறோம்.  ஃபீல்டு சயின்ஸ் கம்பெனி இயக்குநரும் வீக்கான வில்லன் என்பதால் எதிர்பார்க்க ஏதுமில்லை. மகதியின் பின்னணி இசை, பாடல்க

கலாசாரத்தை காக்கும் மனவாடுகள் ஸ்ரீனிவாச கல்யாணம்

படம்
ஸ்ரீனிவாச கல்யாணம் இயக்கம் - சதீஸ் வகீஸ்னா ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி இசை - மிக்கி ஜே மேயர் கலாசாரம், பாரம்பரியம் என வாழும் ஒருவரின் வாழ்க்கை. ஷெட்யூல் போட்டு வாழும் தொழிலதிபரோடு முட்டிக்கொண்டால் என்னாகும்? இதுதான் கதை. ஆஹா தெலுங்கு கலாசாரம் விரும்புவர்களுக்கான படம் இது. அனைத்து பிரச்னைகளையும் ஸ்ரீனிவாசன் பேசியே சமாளிக்கிறார். இதுவே நாயகி ஸ்ரீக்கு பிடித்தமானதாக இருக்கிறது. மேலும் அவரின் பெரிய குடும்பத்தோடு அவருக்கு இருக்கும் அப்டேட், ஸ்ரீக்கு ஸ்ரீனிவாசனின் மீது பொறாமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவரது குடும்பம் தொழில், வருமானம் ஆகியவற்றுக்கு மட்டும் கைதட்டி மகிழும். இந்த வேறுபாட்டை நன்றாக விளக்கி எது வாழ்க்கை என்று சொல்லி இருக்கிறார்கள். படத்தை உறுத்தலின்றி நிதானமாக பார்க்கலாம். நிதின், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ படம் மெதுவாகவே நடக்கிறது. ஸ்ரீனிவாச கல்யாணம் என்பதால் சடங்கு நடைபெறும் வேகத்தில் படத்தை அழைத்து சென்றால் எப்படி? கிராமம் என்றால் சாணி தட்டுவதை ஏன் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நந்தி