இடுகைகள்

பாதிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலர்ஜிக்கான அறிகுறிகள் எவை?

படம்
        போலியான அலர்ஜி என்பது உணவில் உள்ள கலப்படங்களால் அதிகம் நடைபெறுகிறது . உணவில் கலக்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் , உலர்ந்த திராட்சை , உருளைக்கிழங்கு பொருட்கள் , ஹஸ்டாமைனை ஊக்குவிக்கும் சீஸ் , ஒயின் ஆகிய பிற பொருட்களும் அலர்ஜிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன . எளிதாக அலர்ஜி பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களை மேலே சொன்ன பொருட்கள் அதிகம் பாதிக்கும் . இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை சாதாரண சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது . ஆன்டிபாடியான ஐஜிஇயை இதில் இருக்கிறதா என்று சோதிப்பார்கள் . போலியான அலர்ஜி என்பது நோயாளிக்கு செரிமானக் கோளாறு உள்ளதா என்பதை சோதிக்க உதவுகிறது . குடல் பகுதியில் பால் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி , டைரமைன் , ஹிஸ்டாமைன் ஆகியவை கொண்ட உணவுகளால் ஏற்படும அலர்ஜி . சீஸ் , மது , துனா , சாஜேஜ் உணவுகள் இதற்கு காரணமாக அமைகின்றன . குளூட்டேன் , ஒயின்களில் உள்ள பொருட்கள் காரணமாக அலர்ஜி ஏற்படுகிறது . உரம் , உணவு நிறமிகள் , பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் காரணமாக ஏற்படும் பொதுவான அலர்ஜி . அறிகுறிகள் அலர்ஜி

இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன! டாக்டர் டி ஜேக்கப் ஜான்

படம்
                இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன ! நேர்காணல் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இரண்டாவது அலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதா ? நோய்ப்பரவலின் வேகமும் , அளவும் எனக்கு ்ஆச்சரியத்தை அளிக்கிறது . இந்தியாவில் கடந்த ஆண்டு பாதித்த கொரோனா வைரஸிற்கு மாற்றாக டி 614 ஜி எனும் புதிய வகை மாறியுள்ளது . இந்த மாறியுள்ள வைரஸ் இரண்டாவது அலைக்கு காரணமா என்று தெரியவில்லை . மாறியுள்ள கொரோனா வைரஸ் இங்கிலாந்து , பிரேசில் , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் . நோய்த்தொற்றை கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பில் உள்ள ஐசிஎம்ஆர் , ஐஎன்எஸ்ஏ , சிஓஜி ஆகிய மூன்று அமைப்புகளும் இதில் தோல்வியைத் தழுவியுள்ளன . வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆரா்ய்ச்சி அமைப்புகளையும் , ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கத் தவறிவிட்டோம் . அதற்காகத்தான் இப்போது விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் . பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கவே நாம் தடுமாறி வருகிறோம் . மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பில் எங்கு நாம் தவறு செய்துள்ளோம்

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

அதீத தேசியவாதம் உலக நாடுகளிடையே உள்ள கூட்டுறவைக் குலைக்கிறது!- சிவசங்கர் மேனன்

படம்
            சிவசங்கர் மேனன் முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் இவர் தற்போது சாய்சஸ் இன்சைட் தி மேக்கிங் ஆப் இந்தியன் பாரீன் பாலிசி என்ற நூலை எழுதியுள்ளார் . இந்த நூலைப்பற்றியும் தற்போது உள்ள அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம் . வரலாற்றில் நிலப்பரப்பு என்பதை ஏன் முக்கியமாக நினைக்கிறீர்கள் ? நாம் உலக அரசியல் நடப்புகளில் பங்கேற்றுள்ளோம் . இதில் வலிமை வாய்ந்த நாடுகள் , அணிசேரா நாடுகள் ஆகியவை உள்ளடங்கும் . இந்தியா - அமெரிக்கா , இந்தியா - ரஷ்யா , இந்தியா - சீனா ஆகிய கூட்டணிகள் வரலாற்றில் உள்ளன . நாம் எப்படி உருவாகினோம் . எந்த இடத்தில் உருவாகினோம் என்பதை இன்று மறந்துவிட்டோம் . நிலப்பரப்புரீதியான அரசியல் என்பதில் வரலாறு , ஆதாரங்கள் , நிலப்பரப்பு ஆகியவை முக்கியமானது . நீண்டகால நோக்கில் பயனளிக்கும் விஷயங்களை செய்யவேண்டும் . சீனா இப்போது வளர்ந்து வரும் முக்கியமான நாடாக உள்ளது . ஆனால் அதிலும் தேசியவாதம் முக்கியமானதாக உள்ளது . இந்தியாவில் கூட இதே விதமாக தேசியவாதம் ஆதிக்கத்தில் உள்ளது . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? தேசியவாதம் என்பது ் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோ

கொரோனாவை தீரத்துடன் எதிர்த்த வீரர்கள்!

படம்
          காவல்துறை உங்கள் நண்பன் ! நிஷா சாவன் காவல்துறை துணை ஆய்வாளர் மும்பை புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான் . இவர் , வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார் . ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார் . புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை . அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை . ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது . அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை . பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார் . நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா , காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம் , ராஜஸ்தானுக்கு ரயில் , பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் . அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக ப

கஞ்சாவை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகள்!

படம்
         பெல்ஜியம்  இங்கு 3 கிராம் அளவுக்கு குறைவாக பயன்படுத்துவது குற்றம் கிடையாது என 2003ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டுவிட்டது.  நெதர்லாந்து கஞ்சாவை காபி கடைகளில் பயன்படுத்துவதற்கான அனுமதி 1976ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டுவிட்டது. தனிநபர் பயன்பாடாக ஐந்து கிராம் அளவில் பயன்படுத்தலாம். வீட்டில் கூட ஐந்து செடிகளுக்கு மிகாமல் வளர்த்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்றலாம்.  போர்ச்சுக்கல்  இங்கு 25 கிராமுக்கு மிகாமல் கஞ்சாவைப் பயன்படுத்தலாம். இதற்கான தடையை அரசு 2001ஆம் ஆண்டு விலக்கிக்கொண்டு விட்டது.  ஸ்பெயின்  இங்கு பொதுஇடத்தில் கஞ்சாவைப் பயன்படுத்த தடை நீடிக்கிறது. மற்றபடி தனிநபராக கஞ்சாவை பயிரிடுவது குற்றமல்ல என 2017ஆம்ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.  இத்தாலி இங்கு மருத்துவம், தொழில்துறை சார்ந்து கஞ்சாவைப் பயன்படுத்த உரிமம் பெறவேண்டும். டிஹெச்சி என்ற அளவு குறைவாக உள்ள செடிகளை வளர்த்த அரசு அனுமதி தேவை இல்லை. நாட்டிலுள்ள மாகாணங்கள் கஞ்சா வளர்ப்பதற்கான விதிகளை தளர்த்த முயன்று வருகின்றன.  மேற்கிந்திய தீவுகள் இங்கு ஐந்து கிராமுக்கும் குறைவாக கஞ்சாவைப் பயன்படுத்தலாம். செடிகளையும் வளர்த்தலாம். ஜமை

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை

அரசும் தனியாரும் இணைந்து பணிபுரிய வேண்டும்!

படம்
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பத்து இத்தாலியர்களில் ஒருவர் குணமாகி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனை தலைவர் நரேஷ் திரேகானிடம் பேசினோம். அரசும் தனியாரும் இணைந்து மருத்துவத்துறையில் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறதே? கொரோனா போன்ற சூழல்களில் அரசிடம் கூட போதுமான படுக்கை வசதிகள், மருந்துகள், தங்கும் அறைகள் இருக்காது. இச்சூழலில் தனியாரின் மருத்துவ வசதிகளை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். சரியான மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள், வெண்டிலேட்டர் ஆகியவை நம்மிடம் போதுமான அளவு இல்லை. கொள்ளைநோய் சிகிச்சைக்கான செலவும் அதிகம். எனவே, முடிந்தவரை நோய் யாருக்கும் அதிகம் பரவாமல் இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இப்போது பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு சிகிச்சை செய்துள்ளீர்கள். இதிலிருந்து  பலருக்கும் சிகிச்சை செய்வதற்கான திறனை பெற்றுவிட்டீர்களா? நாங்கள் இப்போதுதான் இந்த நோயை சமாளிப்பதற்கான