இடுகைகள்

விளம்பரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்கெட்டிங்கில் மாஸ் மகராஜா ஆவது எப்படி? - மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

படம்
      sample/pixabay           மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது , அதனை விற்பனை செய்வது என இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் ஏராளமான உள்நாட்டு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்கியுள்ளார் . மார்க்கெட்டிங்கின் அடிப்படை என்ன , அதில் பிரபல நிறுவனங்களாக இருந்தாலும் செய்த தவறுகள் என்ன , அதனை திருத்திக்கொள்வது எப்படி என விளக்கியுள்ளார் . ஒருவகையில் மார்க்கெட்டிங்கை பற்றி தெரியாதவர்கள் இந்த நூலைப்படித்தால் கூட அதனை எப்படி செய்வது என அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம் . பெரிதாக அவர்கள் சாதிப்பார்களோ இல்லையோ , இதில் சதீஸ் கூறியுள்ள தவறுகளை நிச்சயம் செய்யமாட்டார்கள் . அந்தளவு நூலில் ஏராளமான நம் தினசரி வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பொருட்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளார் . நூலை வாசிக்க உதவுவது சதீஸ் பயன்படுத்தியுள்ள மொழிதான் . நம் தோள் மீது கைபோட்டு நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பற்றி சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு மொழியுடன் நூல் உள்ளது . பிராண்டின் செக்மெண்ட் , டார

சமூக வலைத்தள விளம்பர நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனமாக உயர்த்திய பூஜா, ஜவ்ஹாரி, கிளிட்ச் நிறுவனம்

படம்
      பூஜா ஜவ்ஹாரி,  கிளிட்ச்   பூஜா ஜவ்ஹாரி இயக்குநர், கிளிட்ச் நிறுவனம். இந்துஸ்தான் யுனிலீவரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், தற்போது கிளிட்ச் என்ற விளம்பர நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். பூஜா, ஒரு நிறுவனத்தின் கலாசாரம், அவர்களின் தேவை ஆகியவற்றை உணர்ந்து அவர்களுக்கான விளம்பரங்களை வடிவமைத்து தருகிறார். இதன் காரணமாக அவரது நிறுவனமும், அவரது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிளிட்ச் என்ற நிறுவனம் சமூக வலைத்தள நிறுவனமாக உருவாகி இன்று ஏராளமான நிறுவனங்களுக்கு உதவி தன்னை எட்டே ஆண்டுகளில் சிறப்பாக வளர்த்துக்கொண்டுள்ளது. டபிள்யூபிபி என்ற நிறுவனம் மூலம் விலைக்கு வாங்கப்பட்டு தனிப்பட்ட நிறுவனமாக இயங்கி வருகிறது கிளிட்ச்  இந்த நிறுவனத்தின் வியாபாரம் இன்று உலகளவில் வளர்ந்துள்ளது. அதேசமயம், அலுவலகத்தில் ஆண், பெண் பணியாளர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.  

விளம்பர நிறுவனத்தின் வளர்ச்சியை உச்சத்திற்கு உயர்த்தியவர்! அனுஷா ஷெட்டி

படம்
    அனுஷா ஷெட்டி கிரே குழுமம், குழும தலைவர்    இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள், விளம்பரம், அனுஷா ஷெட்டி கிரே குழுமம், குழும தலைவர் 2020ஆம் ஆண்டில்தான் அனுஷா, நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். இந்த நிறுவனம் விளம்பரங்களை பிராண்டுகளுக்கு செய்து கொடுக்கும் நிறுவனம் ஆகும். அனுஷா விற்பனை விநியோகத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவங்களைப் பெற்றுள்ளவர். இவரது தலைமையில்தான் கிரே குழுமம், ஆட்டுமன் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை வாங்கியது. இன்டெல், ஹெச்பி, யுனிலீவர், சாம்சோனைட், டைட்டன், ஹனிவெல் ஆகிய நிறுவனங்களுக்கு புகழ்பெற்ற வரவேற்புள்ள பல்வேறு விளம்பரங்களை செய்துகொடுத்துள்ளார். ஆட்டுமன் கிரே நிறுவனத்தின் வளர்ச்சி இப்போது 40 சதவீதமாக வளர்ந்துள்ளது. நடப்பு ஆண்டுமுதல் இன்னும் வேகமாக செயல்படுவார் அனுஷா ஷெட்டி என நம்பலாம். 

உணவை காசு கொடுத்து வாங்குவதில்லை!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல்! வீர் சாங்கி, உணவு விமர்சகர், எழுத்தாளர். உணவுத்துறை எப்படி மாறியுள்ளது? முதலில் நாங்கள் உணவகம் சென்று உணவை வாங்கிச் சாப்பிடுவோம். அதுபற்றி கருத்துகளை பத்திரிகையில் வலைப்பதிவில் எழுதுவோம். இது உணவகத்தின் வியாபாரம் சார்ந்த விஷயம் என்பதால், எங்களுக்கு உணவகங்களில் உணவு விலையின்றி கிடைக்கும். இன்று உணவகங்கள் குறிப்பிட்ட ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு பணம் தருகின்றனர். அங்குள்ளவர்கள் வந்து உணவைச்சாப்பிட்டுவிட்டு விமர்சிப்பார்கள். அதுதான் நவீன உலகில் மாற்றம் கண்டுள்ளது. இன்று அவர்களுக்கு இன்ப்ளூயன்சர்கள் என்று பெயர். அவர்கள் சமூக வலைத்தளங்களில் உணவு பற்றி பிரசாரம் செய்வார்கள். எழுதுவார்கள்.  உணவு சார்ந்த எழுத்தாளருக்கு என்ன தகுதிகள் தேவை? உணவு பற்றி எழுதும் எழுத்தாளருக்கு என்ன விஷயங்கள் தேவை என்று நினைக்கிறீர்கள். இன்று உணவுத்துறை சார்ந்து விமர்சனம் செய்து எழுதுபவர்களுக்கு பெரிய மரியாதை இல்லை. காரணம் முன்னர் உணவுபற்றி எழுதுவதற்கு நாளிதழ்களில் இடம் கிடையாது. வலைத்தளங்களில் எழுதுவார்கள். இன்று இன்ஸ்டாகிராம் அந்த இடத்தைப் பிடித்து விட்டது.

மாற்றுப்பாலினத்தவருக்கு மரியாதை!

இன்று விளம்பரங்கள் என்பவை திரைப்படங்களை விட கனமான விஷயங்களை இரண்டு நிமிடங்களில் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றன. இதன் தாக்கத்தை நாம் லீவர், பிஅண்ட் ஜி ஆகிய நிறுவனங்களில் விளம்பரங்களில் பார்க்கலாம். தற்போது ஃபேஸ்புக்கில் பிஅண்ட்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள ஜில்லெட் ஷேவிங் ரேஷர் விளம்பரம் , பொருளை விட எடுத்துக்கொண்ட கான்செஃப்டில் மனம் கவர்கிறது. மாற்றுப்பாலினத்தவராக உள்ள மகனுக்கு தந்தை ஷேவிங் செய்வதைக் கற்றுக்கொடுக்கிறார். இவ்வளவு அழகாக தந்தை மகனுக்கான பாசத்தைக் கூறமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறது இந்த விளம்பரம். பொதுவாக ரேஷர் விளம்பரம் என்றால் ஆண்மையின் மேன்மையாகவே அதனைக் காட்டுவார்கள். பெண்கள் கூட ஷேவ் செய்த ஆண்கள்தான் தங்களின் விருப்பம் என கன்னம் தடவி செல்வார்கள். இப்படித்தானே விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த விளம்பரம் மிக யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் பாராட்ட வேண்டியது பிராண்ட் இமேஜூக்காக யோசித்த விளம்பரக்கம்பெனி ஆட்களைத்தான். விளம்பரத்தைக் கான சொடுக்குங்கள். https://www.good.is/articles/gillette-trans-shaving-ad?utm_source=thedailygood&u

முத்தாரத்தில் புதிய தொடர்: சென்னை சீக்ரெட்ஸ்

படம்
லோகோ: திலீப் பிரசாந்த் குங்குமம் வார இதழில் அறிந்த இடம் அறியாத விஷயம் தொடரிலிருந்து தற்போது தல புராணம் வரை எழுதி வரும் பேராச்சி கண்ணனின் எழுத்தில் வெளிவரும் தொடர்தான் சென்னை சீக்ரெட்ஸ். இதில் சென்னை பற்றிய பல்வேறு வரலாற்றுத் தகவல்கள், கதைகள் வெளிவரும். சென்னையைப் பற்றிய வரலாற்று உண்மைகளை தமிழில் எழுதியவர்கள் மிகச்சிலரே. பெரும்பாலான தகவல்கள் நிறைந்துள்ள ஆங்கிலத்திலிருந்து வாராவாரம் தொடருக்கான பக்கங்களை தேற்றும் பேராச்சி கண்ணனின் அசகாய பொறுமையும் நிதானமும் என்னை இன்றுமே ஆச்சரியப்படுத்துபவை. அதனால்தான் அதிலிருந்து சில விஷயங்களை சொல்ல முடியாத சுவாரசியங்களை முத்தாரத்தில் எழுத கோரினேன். சந்தோஷமாக இசைந்தார் கண்ணன். 27.4.2018 முத்தாரம் இதழிலிருந்து சென்னை சீக்ரெட்ஸ் வெளியாகும். வாசியுங்கள்.