இடுகைகள்

ஹிண்டன்பர்க் அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலும் கூட அச

9. வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலமாக நடந்த நிதி முறைகேடு - மோசடி மன்னன் அதானி

படம்
  வினோத் அதானி, தான் உருவாக்கிய போலி நிறுவனங்களைப் பற்றிய கவனம் கொள்ளாமல் இல்லை. வரி விலக்கு கொண்ட நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கியவர், அதன் மீது பிறருக்கு சந்தேகம் வராமல் இருக்கவே அவற்றுக்கென தனியாக வலைத்தளங்களை உருவாக்கி வைத்தார். அந்த வலைத்தளங்களில் காணப்படும் சில அம்சங்களைப் பார்ப்போம்.   பெரும்பாலான வலைத்தள பெயர்கள் அனைத்தும் ஒரே நாளில் தனித்தனி வணிக நிறுவனங்கள் போல உருவாக்கப்பட்டவை. எ.டு. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆராய்ச்சியில் ஐந்து நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டவை என தெரிய வந்தது. மீதி ஐந்து நிறுவனங்கள் 2016 ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்டவை. அனைத்து வலைத்தளங்களின் பக்கங்களின் தலைப்புகளும் ஒன்று போலவே அமைந்திருந்தன. முகப்பு, நிறுவனம் பற்றி, சேவைகள், கேலரி (விலை கொடுத்து வாங்கிய புகைப்படங்கள்), தொடர்புகொள்ள என தலைப்புகள் அப்படியே மாறாமல் இருந்தன. தொடர்பு முகவரியில் உள்ள முகவரி, வணிக முகவர் ஒருவரின் முகவரியைக் கொண்டிருந்தது. உண்மையான வணிக நிறுவனத்தின் பெயரில் முகவரி இல்லை. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், குழுக்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை

அலட்டிக்கொள்ளாத ஆழமான பங்கு மோசடி - மோசடி மன்னன் - அதானி - பகுதி 5

படம்
  ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை 1999 – 2001ஆம் ஆண்டு கணக்குத் தணிக்கையாளரான தர்மேஷ் தோஷி, பங்கு முறைகேட்டில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. இந்த முறைகேட்டில் தோஷியுடன் கைகோத்து செயல்பட்டவர் கேட்டன் பரேக். இவர் மீதும் வழக்கு பதிவானது. அமெரிக்காவில் நடைபெற்ற பெர்னி மேடாஃப் ஊழல் போலவே, இந்தியாவில் நடைபெற்ற பங்குச்சந்தை   ஊழலை கேட்டன் பரேக் செய்தார். இது, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே   மிகப்பெரும்   ஊழலாகும்.     இந்த முறைகேட்டின் மூலம் விலை உயர்ந்த பெருநிறுவனப் பங்குகளில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த தகவலை செபி அமைப்பும், நாடாளுமன்ற குழுவின் விசாரணையும் உறுதி செய்துள்ளன. ஊழலில் ஈடுபட்டதற்காக அதானி குழுமத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர். 2002ஆம் ஆண்டு, தர்மேஷ் தோஷி தன்னை சூழும் ஆபத்தைப் புரிந்துகொண்டு காவல்துறை கைது செய்யும் முன்னரே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். 2006ஆம் ஆண்டு, எலாரா கேபிடல் நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவன இயக்குநர் ராஜ் பட், தர்மேஷ் தோஷியுடன் வணிக ஒப்பந்தங்களைச்   செய்துகொண்டார்.   இந்த காலகட்டத்தில் தோ