இடுகைகள்

காமெடி பிட்ஸ் -ரோனி

படம்
பள்ளத்தில் கனவுகார் ! சீனாவின் ஹெய்லாங்ஜியாங் பகுதியிலுள்ள ஹார்பின் நகர சாலையில் ஜாலி சவாரி செய்த ஒருவரின் கார் திடீரென சாலை நடுவில் உருவான 3 மீ . அகல பள்ளத்தில் விழுந்தது . ஓனர் மீட்கப்பட்டாலும் குழியில் விழுந்தது 7 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள ரோல்ஸ்‌ராய்ஸ் கார் என்பதால் வீடியோ பரிதாபங்களை அள்ளி ஹிட் அடித்துள்ளது . துபாயின் விஐபி சுட்டி ! பிரைவேட் ஜெட் , ஃபெராரி கார் என வலம்வரும் ரஷீத் பெல்ஹாசா , சல்மான்கான் , மெஸ்ஸி , ஜாக்கிசான் ஆகிய பிரபலங்களோடு எடுக்கும் போட்டோக்கள் செம வைரல் . பிசினஸ்மேன் சைஃப் அகமது பெல்ஹாசாவின் தவப்புதல்வன்தான் ரஷீத் . 15 வயதிலேயே ஆன்லைன் கடையை ஓபன் செய்து பிசினசிலும் , பப்ளிசிட்டியிலும் பின்னுகிறார் . பெண்களுக்கு சுதந்திரம் ! அண்மையில் சவுதி அரேபியா அரசு , பெண்கள் வண்டி ஓட்ட அனுமதித்துள்ளது . ஜூலை 2018 அன்று பெண்கள் புதிய லைசென்ஸ்களுக்கு அப்ளை செய்யலாம் என அரசு அறிவித்தவுடன் குஷியான கார் கம்பெனிகள் குஷியாகி , பெண்களை மையமாக்கி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன . இது உங்கள் டர்ன் , உலகை முன்னோக்கி நடத்தி செல்வோம் என விளம்பர வாசகங்

விழிப்புணர்வு காமிக்ஸ்!-ச.அன்பரசு

படம்
பெண்ணுடலைக் கொண்டாடும் விழிப்புணர்வு காமிக்ஸ் ! - ச . அன்பரசு அரசுக்கு ஆதரவான டெக்ஸ் வில்லர் மற்றும் அவரது சகாக்கள் பழங்குடிகளை பொசுக்கும் ரத்தவேட்டையும் , இரும்புக்கை மாயாவியின் உலகைக் காப்பாற்றும் ஆக் ‌ ஷன் அத்தியாயங்களும்தான் காமிக்ஸில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று மாறிவருகிறது சமகால நிகழ்வுகளைப் பேசும் ஏராள காமிக்ஸ் எழுத்தாளர்களும் , ஓவியர்களும் உருவாகி வருவதற்கு ஒரு சின்ன சாம்பிள்தான் Spreading Your Wings காமிக்ஸ் . " நான் முதன்முதலில் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திற்கு வந்து கிராமப்புற பெண்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியபின்தான் மாதவிடாயின் சவால்களை அனுபவப்பூர்வமாக உணரத்தொடங்கினேன் . அமெரிக்காவில் பள்ளியின் வகுப்பில் எனது முதல் மாதவிடாய் வந்தபோது , என் பெற்றோர் பூக்களோடும் , மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் என்னை அரவணைத்துக்கொண்டனர் . ஆனால் அது இந்தியாவில் பதட்டமும் வலியும் கொண்டதாக இருப்பது எனக்கு புதிய அனுபவம் " என புத்துணர்ச்சியோடு பேசத்தொடங்கினார் அமெரிக்காவின் போஸ்டன் நகரைச்சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான அரீனா அபாடியன் ஹெய்ஃபெட்ஸ் .

ஹைப்பர்லூப் இந்தியா! -ச.அன்பரசு

படம்
ஹைப்பர்லூப் இந்தியா ! - ச . அன்பரசு பெங்களூரு எஞ்சினியர்களின் ஃப்யூச்சர் சாதனை ! டெல்லி டூ மும்பை - 1 மணிநேரம் , நியூயார்க் டூ வாஷிங்டன் -29 நிமிஷங்கள் , லாஸ் ஏஞ்சல்ஸ் டூ சான்   பிரான்சிஸ்கோ -36 நிமிஷங்கள் போதும் . இது ஃப்யூச்சரில் நாம் செல்லவிருக்கும் ஹைப்பர்லூப் பயணத்தின் ட்ராவல் டைம் . நம்புங்கள் . சொல்வது அனைத்தும் ஹைப்பர்லூப் கனவை எப்பாடு பட்டேனும் இவ்வாண்டே நிறைவேற்றத்துடிக்கும் எலன் மஸ்க் மீது சத்தியமாக உண்மை .   2015 ஆம் ஆண்டு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் , உலகிலுள்ள அனைத்து எஞ்சினியர்களும் ஹைப்பர் லூப் டிசைனில் பங்கேற்க அழைத்தது . இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே டீம் பெங்களூரின் வொர்க் பென்ச்சர்ஸ் ( எ ) ஹைப்பர்லூப் இந்தியா மட்டுமே . ஹைப்பர்லூப் என்ற போக்குவரத்து பற்றிய எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் ஆராய்ச்சி செய்து கற்று பெங்களூரைச்சேர்ந்த பொறியியல் குழு ஹைப்பர்லூப் மாடலை வடிவமைத்துள்ளது சாதனைதானே ! வொர்க் பென்ச் நிறுவனத்தின் இயக்குநரான அனுபமா கௌடாவின் வழிகாட்டுதலில்