இடுகைகள்

இந்தியாவில் பாலின பாகுபாடு - ஆக்ஸ்பேம் அறிக்கை

படம்
பாலின பாகுபாடு! அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபேம் நிறுவனம் வெளியிட்டுள்ள பாலின பாகுபாடு பட்டியலில் இந்தியா 147 ஆவது இடம் பிடித்துள்ளது. 1.3 பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவில், பெரும்பாலான பெண்கள் வறுமைநிலையில் வாழ்ந்துவருகின்றனர். இந்தியா பாலின பாகுபாட்டின் அளவைக் குறைத்தால் 17 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது ஆக்ஸ்ஃபேம் நிறுவன அறிக்கை. இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியலில் மோசமாக செயல்பட்டாலும் ஜப்பான்(11 வது இடம்), தென்கொரியா (56 வது இடம்), நமீபியா, உருகுவே ஆகிய நாடுகள் பாலின பாகுபாட்டை குறைப்பதில் உறுதியான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. 157 நாடுகளைக் கொண்ட ஆக்ஸ்ஃபேம் பட்டியலில் அரசு சமூகநலத்திட்டங்களுக்கு செயல்படுத்தும் தொகை, தொழிலாளர் உரிமைகள், பெண்களுக்கான சம்பளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. பாலியல் பாகுபாட்டை குறைக்கும் அசத்தலான நடவடிக்கைகளால் டென்மார்க், இப்பட்டியலில் முன்னணி வகிக்கிறது.   கல்விக்கு செலவழிப்பதில் எத்தியோப்பியாவும்(131), கார்ப்பரேட் வரிகளை விதிப்பதில் சிலியும்(35), குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சுகா

பத்திரிக்கையாளரை கொன்ற சவுதி அரேபியா!

படம்
பத்திரிகையாளர் கொல்லப்பட்டாரா? கடந்த வாரம் துருக்கியிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் காஷோகி, கொல்லப்பட்டிருக்கலாம் என வதந்திகள் கிளம்பியுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இச்செய்தியை தீர்க்கமாக மறுத்துள்ளார். விசாரணையில் விபரீதம் நடந்து காஷோகி இறந்துவிட்டார் என்று செய்திகள் கசிந்தாலும் துருக்கியும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதோடு சவுதி அரசுக்கும் இதன் மூலம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பத்திரிகையாளர் காணாமல் போய் ஒருவாரத்திற்கு மேலாகிறது. “காஷோகி உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கை தேய்ந்துவருகிறது” என கலங்குகிறார் அமெரிக்காவிலுள்ள காஷோகியின் துணைவியான ஹேட்டிஸ் சென்கிஷ். துருக்கி, அமெரிக்கா என இருநாடுகளும் சவுதியின் நட்பு வட்டத்தில் உள்ளதால் இதில் அடக்கி வாசிக்கின்றன. காஷோகி காணாமல் போன தினத்தில் சவுதியிலிருந்து பதினைந்து பாதுகாப்புத்துறை ஏஜென்டுகள் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளது காஷோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கிறது. காஷோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சல்மானுக்கு எந்த குற்றவுணர்

இன்டர்வியூவில் கட்டாயமாகும் பாலிகிராப் டெஸ்ட்!

படம்
பாலிகிராப் டெஸ்ட்! போலீஸ் விசாரணையில் ஒருவர் பொய் சொல்கிறாரா என்று கண்டறிய பயன்படுத்துவதே பாலிகிராப் டெஸ்ட். அமெரிக்காவின் சிஐஏ, எஃப்பிஐ உள்ளிட்ட அரசு ஏஜென்சிகளின் பணியாளர்களுக்கு பாலிகிராப் டெஸ்ட் கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. பொய் கண்டறியும் சோதனையில் உடலில் ஆறு சென்சார்கள் பொறுத்தப்பட்டு மூச்சு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், வியர்வை ஆகியவையும் கை, கால்களின் இயக்கமும் வரைபடமாக காகிதத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்த சோதனையில் பொதுவாக நான்கு கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதிலை ஒருவர் கூறினாலும் பாலிகிராப்பில் பதிவாகும் பதிலே நிஜம். இதயத்துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் எகிறி வியர்வை வந்தால் பதில் கூறியவர், பொய் சொல்லியிருக்கிறார் என்பது உறுதி. ஆனால் இதில் தப்பிக்கும் வித்தையை இன்று பலரும் கற்றுக்கொண்டுவிட்டதால் குற்றவாளிகளை இதில் கண்டறிவது கடினமாகி வருகிறது. பல்வேறு வேலைகளுக்கான பணியில் பாலிகிராப் டெஸ்ட், முக்கிய இடம் வகிப்பதோடு இதற்கான கேள்விகளும் இணையத்தில் பரவலாக கிடைக்கிறது.  

மூளையை எவ்வளவு பயன்படுத்துகிறோம்?

மூளையின் உபயோகம் எவ்வளவு? மூளையின் பத்து சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம் என பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் தினசரி நாம் மூளையை நம் வேலைகளுக்கு தேவையான விதத்தில் முழுமையாக பயன்படுத்துகிறோம் என்பதே உண்மை. நிறங்களை புரிந்துகொள்வது, பிரச்னைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் மூளையின் பங்குண்டு.  இவை மட்டுமின்றி நாமறியாத பல்வேறு நிகழ்ச்சிகளில் மூளையின் இன்றியமையாத பங்குண்டு என்பதை ஆராய்ச்சியாளர்களை் டோமோகிராமி மூலம் கண்டறிந்தனர். உடலின் சக்தியில் 20 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் மூளை உடலின் எடையில் இருபங்காகும். ஆங்கில எழுத்தாளர் லோவெல் தாம்சன் டெல் கார்னெகியின் How to win and Influence people என்ற நூலில் மூளையின் பத்து சதவிகித திறன் பற்றிய தவறான கருத்துக்களை எழுதி மூடநம்பிக்கையை தொடங்கி வைத்தார்.பின்னர் நரம்பியல் மருத்துவரான வைல்டர் பென்ஃபீல்டு மூளையின் அமைதியான பாகங்கள் குறித்த தியரியை 1930 ஆம் ஆண்டு எடுத்துக்கூற மூளையின் திறன் பயன்பாடு குறித்த வதந்திகள் நிறைய பரவிவிட்டன. மூளையின் முழுத்திறன் என்பதை பல்வேறு புதிர்கள், அறிவுத்திறனுக்கு சவாலான விஷயங்களில் ஈடுபட்டு

கடவுச்சொல்லில் கோட்டைவிட்ட அமெரிக்கா!

படம்
அணுஆயுதங்களை இயக்க முடியுமா? புதிய தலைமுறையினர் சைபர் அட்டாக் மூலம் அணு ஆயுதங்களை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மிலிட்டரி அமைப்புகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில் ஒருமணிநேரத்தில் இதனை டெக் நுட்பம் தெரிந்தவர் கையகப்படுத்த முடியும். அமெரிக்க ராணுவம் உலகிலேயே அதிக பட்ஜெட்டாக 674 பில்லியன் டாலர்களை ஆயுதங்களை கொள்முதல் செய்யப் பயன்படுத்துகிறது. ஆனால் எங்கே சொதப்பல் தொடங்குகிறது? ஆயுத சிஸ்டங்களை பாஸ்வேர்ட் அமைத்து பாதுகாக்குமிடத்தில்தான் ஹேக்கர்கள் உள்நுழைகின்றனர். 2012-17 வரையிலும் பென்டகனிலுள்ள ஆயுத அமைப்புகளை ஹேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன. சரியான முறையில் பாஸ்வேர்டுகளையும், செய்திகளை என்கிரிப்ஷன் செய்யாமலும் இருந்தால் விரைவிலேயே அமெரிக்காவின் ஆயுதங்களை ரஷ்யர்களோ, சீனர்களோ பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை பொருளாதாரத்திற்கு பரிசு!

படம்
பொருளாதார நோபல்! உலகம் சூழலுக்குகந்த வளர்ச்சியை பெறுவதற்கான திட்டங்களை முன்வைத்த பொருளாதார அறிஞர்கள் வில்லியம் டி நார்டாஸ்(யேல் பல்கலைக்கழகம்), பால் எம் ரோமர்(நியூயார்க் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு பொருளாதார நோபல் வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்குகந்த உலகை உருவாக்கும் விதமாக கார்பன் வரிகளை உருவாக்கி பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் திட்டங்கள் நார்டாஸ் ஸ்பெஷல் தியரி. 1970 ஆம் ஆண்டிலிருந்து வெப்பமயமாதலை அதிகரிக்கும் கரிம எரிபொருட்களை கட்டுப்படுத்தும் வழிகளை ஆய்வு செய்து வந்தவர் பொருளாதார ஆய்வாளர் நார்டாஸ். பரிசு அறிவிக்கப்பட்ட அதேநேரம் ஐ.நாவின் பருவநிலை கமிட்டி நார்டாஸின் கொள்கைகளையொட்டி அறிக்கையொன்றை உருவாக்கியுள்ளது. சந்தையில் உருவாக்கும் கொள்கைகள் கண்டுபிடிப்புகள் தாக்குப்பிடிப்பதற்கான வழிமுறைகளை ரோமர் ஆராய்ந்துள்ளார். “பொருளாதார நோபல் பரிசுக்கு ஐம்பதாவது ஆண்டில் பரிசுகளை பெற்றுள்ளோம். கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சியை தொடங்கினால் நிச்சயம் மாற்றமுண்டு” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் ரோமர்.

விளம்பரமாசுக்கு தீர்வு! - விசுவல் பொல்யூசன் ஒழிக்கும் கண்ணாடி

படம்
விளம்பரங்களை நீக்கும் கண்ணாடி! தினசரி, டிவி, ரேடியோ என விளம்பரங்களை பார்த்தும், கேட்டும் அலுத்துப்போயிருப்பீர்கள். இவை இல்லாமல் தேவையான விஷயங்களை மட்டும் படிக்கும் வாய்ப்பை கண்ணாடி கொடுத்தால் எப்படியிருக்கும்? IRL கண்ணாடிகள் இவ்வாய்ப்பை நமக்கு விரைவில் வழங்கவிருக்கின்றன. 1988 ஆம் ஆண்டு வெளியான They Live என்ற படத்தில் விளம்பரங்கள் நம்மை நுகர்வில் தள்ளுவதை கண்ணாடி அணிந்து உணர்வார் நாயகன் ரோடி பைப்பர். அதே கான்செப்ட்டில் உருவாகியுள்ளது ஐஆர்எல் கண்ணாடிகள். ஆனால் இது டிவி, கம்ப்யூட்டர்களிலுள்ள நிகழ்ச்சிகளை மட்டும் தடுத்து தேவையில்லாத செய்தி திணிப்புகளிலிருந்து நம் மூளையை விடுவிக்கும். இதுதொடர்பாக கொடுத்துள்ள வீடியோவை பார்த்தால் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அல்ல என கேப்ஷன் போட்டு மக்களிடம் கண்ணாடியை கொடுத்து சோதித்திருக்கிறார்கள். இன்னும் சோதனையில் இருந்தாலும் நம்பிக்கைக்குரிய முயற்சி. விலை ரூ. 3,635