இடுகைகள்

ஆக்சிஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முட்டைக்குள் உள்ள குஞ்சுகள் எப்படி சுவாசிக்கின்றன?

படம்
மிஸ்டர் ரோனி எப்படி பறவைகளின் குஞ்சுகள் முட்டைக்குள் மூச்சு விடுகின்றன? அதற்கு காரணம் முட்டைக்குள் இருக்கும் திசுப்பை அமைப்புதான். மேல்திறப்பு, கீழ் திறப்பு என இரண்டு விதமாக முட்டைக்குள் மெல்லிய இழை அமைப்புகளாக இந்த அமைப்பு அமைந்து குஞ்சுகளைப் பாதுகாக்கிறது. அத்தனை விஷயங்களையும் நான் மொழிபெயர்த்து எழுத முடியாது. மேலேயுள்ள படங்களை அவ்வப்போது பார்த்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.... இரண்டாம் அடுக்கு இழை அமைப்பு முக்கியமானது. இதன் உதவியால் ஆக்சிஜனை மெல்லிய நுண்துளைகள் வழியா குஞ்சுகள் சுவாசிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை இவை வெளியிடுவது மற்றொரு வழியாக... எனவே குஞ்சுகள் பாதிப்பின்றி உயிரோடு இருக்கின்றன. நன்றி - பிபிசி

ஏன்?எதற்கு?எப்படி? - ஐந்து கேள்விகள் - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி ஒளியை  விட வேகமாக பயணிக்கும் பொருள் உண்டா? ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. இதைவிட வேகமான பொருள் இதுவரை இல்லை. நாளை கண்டுபிடிக்கப்படலாம். காரணம், விண்வெளி தொடர்ந்து விரிவாகி வருகிறது. அப்படி விரிவாகும்போது, ஒளியின் வேகம் என்பது மிகச்சிறியதாகவே இருக்கும். அனைத்து பருவகாலங்களிலும் சில செடிகள் பசுமையாக இருப்பது எப்படி? அதற்கு காரணம், அவற்றின் ஒளிச்சேர்க்கை முறையும், பருவகாலங்களுக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மைதான் காரணம். பொதுவாக செடிகள், மரங்கள் பனிக்காலத்தில் தம் இலைகளை உதிர்த்து விடும். தேவையில்லாமல் ஆற்றல் வெளியேறும் என்றுதான் இந்த ஏற்பாடு. பின்னர் வசந்தகாலத்தில் புதிய இலைகள் முளைக்கும். ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் செடிகள், ஒளிச்சேர்க்கையை குறைந்த வெப்பநிலையைப் பயன்படுத்தியும் செய்யும் தன்மை கொண்டவை. கசப்பான உணவுகளை குழந்தைகள் புறக்கணிப்பது ஏன்? குழந்தைகள் கீரைகள், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முக்கியக் காரணம் மரபணுக்களிலேயே உள்ளது. முன்னோர்கள் அப்படித்தான் இருந்தனர். கண்டது, கடியது என சாப்பிட்டால் அ

விமான மாஸ்க்கில் ஆக்சிஜன் எப்படி உருவாகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி விமானங்களில் அவசரநிலையின்போது தலைக்கு மேலிருந்து மாஸ்குகள் கீழே வரும். அவற்றை மூக்கில் பயணிகள் பொருத்த ஆக்சிஜன் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? விமானநிறுவனங்களைப் பொறுத்தவரை பயணிகள் கொடுக்கும் காசு அவர்களை மற்றொரு இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுவதற்குத்தான். எனவே முடிந்தவரை அவர்களுக்கு ஏர் இந்தியா போல சல்லீசாக வெஜ் உணவைப் போட்டு போய்த்தொலை என அனுப்பிவிடவே நினைக்கின்றன. மேலும் விமானங்களில் கொண்டு செல்வதற்கான சுமைகள் குறைவாக இருப்பது எரிபொருளைச் சிக்கனப்படுத்தும். எனவே, பயணிகள் உயிர்பிழைக்க சிலிண்டர்களை தூக்கிச்செல்வது சாத்தியம் இல்லை. 200 பயணிகள் என்றால் 200 சிலிண்டர். யோசித்துப்பாருங்கள். விலையும் ஜாஸ்தி சுமையும் அதிகம். இதற்கான ஆராய்ச்சியில் கிடைத்த துதான். சோடியம் குளோரைடு. இதனை சூடுபடுத்தினால் ஆக்சிஜன் கிடைக்கும். விமானங்களிலுள்ள மாஸ்கில் ஆக்சிஜன் இருக்காது. சோடியம் குளோரைடு இருக்கும். இதனை சூடுபடுத்தினால் ஆக்சிஜன் கிடைக்கும். ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்கான பிரச்னை தீர்ந்ததா? இதனால் நீங்கள் உயிர்பிழைத்துவிட முடியும் என நிம