இடுகைகள்

இம்பேக்ட் 50! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வந்த சாதனையாளர்! லாரா பல்சாரா வஜிஃப்தார்

படம்
    லாரா பல்சாரா வஜிஃப்தார் மேடிசன் வேர்ல்டு      லாரா பல்சாரா வஜிஃப்தார் மேடிசன் வேர்ல்டு 2004ஆம் ஆண்டு மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். பின்னாளில் 24 பிரிவுகளை இயக்கும் தலைவராக உயர்ந்துள்ளார். இங்கிலாந்தில் விற்பனை தொடர்பான முதுகலைப் பட்டம் பெற்றவர் லாரா. இந்த நிறுவனத்திற்காக இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தில் இவர் இணைந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. மீடியாகாம், பிராண்ட்காம், ஹைவ்மைண்ட்ஸ் ஆகிய நிறுவனங்ங்களை வாங்கி மேடிசன் வேர்ல்டுடன் இணைத்தார். இதன்மூலம் இந்த நிறுவனம் பல்வேறு தளங்களிலும் சிறப்பாக செயல்பட வழிவகுத்துள்ளார். இம்பேக்ட் 50 பட்டியல் தொடங்கியதிலிருந்தே இவர் இதில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ஜீ டிவி நிறுவனத்தை இந்தியாவில் பல்வேறு மொழிகளுக்கும் விரிவுபடுத்திய சாதனைப் பெண்மணி! - பிரதியூஷா அகர்வால்

படம்
      பிரதியூஷா அகர்வால் ஜீ என்டர்டெயின்மென்ட்     பிரதியூஷா அகர்வால் ஜீ என்டர்டெயின்மென்ட், சீ்ப் கன்ஸ்யூமர் ஆபீசர். 2017ஆம் ஆண்டு ஜீ என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்து நுழைந்தவர் பிரதியூஷா. நிறுவனத்தின் வருமானம், அதன் புதிய சேனல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் விரிவாக்கியுள்ளா். கேரளத்தில் தொடங்கிய டிவி சேனல்,  சிறப்பான வரவேற்பைப் பற்றி பார்வையாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. கன்னடத்தில் கூட பிச்சார் எனும் டிவி சேனலை தொடங்கியிருக்கின்றனர். 2020இல் இவர்கள் தொடங்கிய ஜீ தமிழ் திரை முக்கியமான திரைப்பட சேனலாக உருவாகி வளர்ந்து வருகிறது. மேலும் பிரதியூஷாவின் முயற்சியால் தொடங்கப்பட்ட போஜ்புரி டிவி சேனல் நம்பர் இடத்தில் உள்ளது.   பிரதியூஷா அகர்வால், ஜீடிவி, இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள்

நவீன காலத்திற்கு ஏற்ப கோத்ரெஜ் பிராண்டை மாற்றி அதனை சந்தையில் வேர்பிடிக்க வைத்த பெண்மணி! - தன்யா துபாஷ்

படம்
                 தன்யா துபாஷ், கோத்ரெஜ் தன்யா துபாஷ், நவீன காலத்தில் பழமையான கோத்ரெஜ் பிராண்டுகளை சிறப்பாக விற்பனை செய்யும் திட்டங்களை தீட்டி வருபவர். காலத்திற்கும், மக்களுக்கும் ஏற்றபடி கோத்ரெஜ் பிராண்டுகளில் பல்வேறு மாற்றங்களை செய்து அதன் ஆயுளை நீட்டிப்பவர் இவரே. அண்மையில் வலுவாக இருக்கும் துறைகளில் ஒரு காலையும், மாறிக்கொண்டு இருக்கு்ம் பிற துறைகளில் மற்றொரு காலை நகர்த்தியபடி இருக்கும் சூத்திரத்தை கோத்ரெஜ் நிறுவனம் கடைபிடித்து வெற்றி பெற்று வருகிறது. இதன் காரணமாகவே பலகோடி பயனர்களிடையே கோத்ரெஜ் பொருட்கள் இன்றும் சென்று சேர்கின்றன. ஹார்வர்ட் வணிகப்பள்ளியில் பட்டம் பெற்றவர், ப்ரௌன் பல்கலைக்கழகதில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் பயின்றவர். கோத்ரெஜ் நிறுவனத்தின் பல்வேறு நிறுவனங்களின் போர்டுகளில் உறுப்பினராக, தலைவராக, இயக்குநராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.  

சமூக வலைத்தள விளம்பர நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனமாக உயர்த்திய பூஜா, ஜவ்ஹாரி, கிளிட்ச் நிறுவனம்

படம்
      பூஜா ஜவ்ஹாரி,  கிளிட்ச்   பூஜா ஜவ்ஹாரி இயக்குநர், கிளிட்ச் நிறுவனம். இந்துஸ்தான் யுனிலீவரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், தற்போது கிளிட்ச் என்ற விளம்பர நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். பூஜா, ஒரு நிறுவனத்தின் கலாசாரம், அவர்களின் தேவை ஆகியவற்றை உணர்ந்து அவர்களுக்கான விளம்பரங்களை வடிவமைத்து தருகிறார். இதன் காரணமாக அவரது நிறுவனமும், அவரது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிளிட்ச் என்ற நிறுவனம் சமூக வலைத்தள நிறுவனமாக உருவாகி இன்று ஏராளமான நிறுவனங்களுக்கு உதவி தன்னை எட்டே ஆண்டுகளில் சிறப்பாக வளர்த்துக்கொண்டுள்ளது. டபிள்யூபிபி என்ற நிறுவனம் மூலம் விலைக்கு வாங்கப்பட்டு தனிப்பட்ட நிறுவனமாக இயங்கி வருகிறது கிளிட்ச்  இந்த நிறுவனத்தின் வியாபாரம் இன்று உலகளவில் வளர்ந்துள்ளது. அதேசமயம், அலுவலகத்தில் ஆண், பெண் பணியாளர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.  

சக்திவாய்ந்த தொழில்துறை பெண் சாதனையாளர்! -சங்கீதா பென்டுர்கர்

படம்
          சங்கீதா பென்டுர்கர் இயக்குநர், பேன்டலூன்      இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள், சங்கீதா பென்டுர்கர் இயக்குநர், பேன்டலூன் சங்கீதா, நுகர்வோர் பொருட்கள், மருந்துகள், நிதித்துறை என பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய பெருமை கொண்டவர். தற்போது ஆதித்ய பிர்லா  ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் லிட். நிறுவனத்தின் பேன்டலூன் நிறுவனத்திற்கு இயக்குநராக உள்ளார். இதற்கு முன்னர் கெலாக் இந்தியா, கொக்ககோலா , நோவர்டிஸ், யுனிலீவர், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில்  பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  பார்ச்சூன் இதழில் சக்தி வாய்ந்த பெண்ணாக 2012 முதல் 17 வரையில் பாராட்டப்பட்ட பெருமை கொண்டவர். ஃபிக்கி உணவு பதப்படுத்தும் கமிட்டியில் தலைவராக இருந்தவர். விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சுயேச்சை தலைவராக செயல்பட்டவர் சங்கீதா.  

விளம்பர நிறுவனத்தின் வளர்ச்சியை உச்சத்திற்கு உயர்த்தியவர்! அனுஷா ஷெட்டி

படம்
    அனுஷா ஷெட்டி கிரே குழுமம், குழும தலைவர்    இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள், விளம்பரம், அனுஷா ஷெட்டி கிரே குழுமம், குழும தலைவர் 2020ஆம் ஆண்டில்தான் அனுஷா, நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். இந்த நிறுவனம் விளம்பரங்களை பிராண்டுகளுக்கு செய்து கொடுக்கும் நிறுவனம் ஆகும். அனுஷா விற்பனை விநியோகத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவங்களைப் பெற்றுள்ளவர். இவரது தலைமையில்தான் கிரே குழுமம், ஆட்டுமன் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை வாங்கியது. இன்டெல், ஹெச்பி, யுனிலீவர், சாம்சோனைட், டைட்டன், ஹனிவெல் ஆகிய நிறுவனங்களுக்கு புகழ்பெற்ற வரவேற்புள்ள பல்வேறு விளம்பரங்களை செய்துகொடுத்துள்ளார். ஆட்டுமன் கிரே நிறுவனத்தின் வளர்ச்சி இப்போது 40 சதவீதமாக வளர்ந்துள்ளது. நடப்பு ஆண்டுமுதல் இன்னும் வேகமாக செயல்படுவார் அனுஷா ஷெட்டி என நம்பலாம். 

சமூக மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்த சாமர்த்தியசாலி! - பிரபா நரசிம்மன்

படம்
                                       பிரபா நரசிம்மன், யுனிலீவர் சவுத் ஆசியா     இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள், பிரபா நரசிம்மன் யுனிலீவர் சவுத் ஆசியா , வீட்டு உபயோகப் பொருட்களுக்கான பிரிவுத் தலைவர் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு பயன்பாடு, அழகுசாதனப் பொருட்கள் வி்ற்பதில் பிரபாவுக்கு 23 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இவர் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் யுனிலீவரின் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் விற்பனை விநியோகம் ஆகியவற்றைக் கவனிக்கிறார். 2016-19 வரையிலான காலகட்டத்தில் இவரின் தலைமையில் யுனிலீவர் நிறுவனம், இரட்டை இலக்க வளர்ச்சிபைப் பெற்றுள்ளது. சமூக மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது ஃபேர் அண்ட் லவ்லி க்ரீமைக்கூட குளோ அண்ட் லவ்லி என பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இனிமேல்தான் இந்த பிராண்டின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று தெரியும்.  

இந்தி பார்வையாளர்களின் மனநிலையை மாற்றிய தொலைக்காட்சி இயக்குநர்! - மனிஷா சர்மா

படம்
மனிஷா சர்மா வயாகாம் 18  இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள், மனிஷா சர்மா     மூத்த கருப்பொருள் அதிகாரி(இந்தி), வயாகாம் 18 கலர்ஸ் டிவியை அனைவரும் பார்க்கும் டிவி சேனலாக, பல்வேறு சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மாற்றியவர் என்று மனிஷாவை அறிமுகம் செய்யலாம். சீரியல்கள் அல்லாத பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று உருவாக்கிய பெருமை கொண்டவர் மனிஷா. கலர்ஸ் டிவியில் சோட்டி சர்தானி, பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடங்கி 2019இல் மட்டும் 60 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கலர்ஸ் பக்கம் இழுத்தவர் மனிஷா. '''2019ஆம் ஆண்டு உண்மையில் எனக்கும் எங்கள் குழுவிற்கும் கடினமான ஆண்டு. நாங்கள் சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என பாடுபட்டு உருவாக்கி கலர்ஸ் டிவியின் வருமானத்தை அதிகரித்துள்ளோம். டிவியைப் பொறுத்தவரை அதன் நிகழ்ச்சிகளிலுள்ள கருத்து கதை ஈர்த்தால் மட்டுமே பார்ப்பார்கள். நாங்கள் இதனால் சரியில்லாத சீரியல்களை நிகழ்ச்சிகளை நிறுத்தியுள்ளோம். காரணம், இணையம் இன்று தொலைக்காட்சிக்கு மாற்றாக உள்ளது. டிவி பிடிக்கவில்லையென்றால் ஒரு பட்டன் அழுத்தினால் இணையத்திற்கு செல்லமுடியும் வசதி டிவிகளில் வந்து

விற்பனை மற்றும் ஆராய்ச்சி உலகில் புகழ்பெற்ற ப்ரீத்தி ரெட்டி !

படம்
                                    ப்ரீத்தி ரெட்டி   ப்ரீத்தி ரெட்டி இயக்குநர், காந்தார் சவுத் ஆசியா ப்ரீத்தி ரெட்டி விற்பனை மற்றும் ஆராய்ச்சி உலகில் புகழ்பெற்றவர். இவர் மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு முன்னர் மைண்ட்ஸ்கேப், டிஎன்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களில் துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். சிஐஐ வணிக அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவராக செயல்பட்டுள்ளார். உலகம் முழுக்க இந்த நிறுவனத்திற்கு 28 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். மொத்தம் 90 சந்தைகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் வருமானம் அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு ப்ரீத்தி ரெட்டியின் தலைமைத்துவம் முக்கியமான காரணம், காந்தார் நிறுவனம், மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்து ஆய்வுகள் நடத்தி நிறுவனங்களுக்கு அறிக்கை அளிக்கிறது. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் தங்களின் விற்பனைப்போக்கு அணுகுமுறைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் காந்தார் நிறுவனத்தை வெற்றிகரமாக செலூத்தி வருகிறார் ப்ரீத்தி ரெட்டி.  

டைட்டன் பிராண்டை மகத்தான வெற்றி பெறச்செய்தவர் சுபர்ணா மித்ரா!

படம்
                                  சுபர்ணா மித்ரா     சுபர்ணா மித்ரா இயக்குநர், வாட்சுகள் அணிகலன்கள் பிரிவு, டைட்டன் அண்மையில்தான் சுபர்ணா மித்ரா நிறுவனத்தின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர். விற்பனை விநியோகப் பிரிவின் தலைவராக இருந்தார். டைட்டன் நிறுவனத்தின் விற்பனை பொது தலைவர், ஆசிய பசிபிக் பகுதி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகுத்துள்ளவர் இவர்.  டைட்டன் நிறுவனத்தின் வாட்சுகள், அணிகலன்களின் விற்பனை பொறுப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுபர்ணாவின் தலைமையில்தான் நடக்கிறது. டைட்டனின் ராகா, நெபுலா, ஸ்விஸ் பிராண்டான ஸைலஸ் ஆகிய பிராண்டுகளையும் விற்பனை செய்து நிறுவனம் வளர்ச்சி பெற உதவியுள்ளார். இந்துஸ்தான் யுனிலீவர், அரவிந்த் பிராண்ட்ஸ், தஸ்லிமா கார்ப் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அனைத்திலும் விற்பனை விநியோகம் சார்ந்த வேலைகள்தான். டைட்டன் பிராண்டை புதுப்பித்து சோனாட்டா பிராண்டில் ஆக்ட் எனும் வாட்சை உருவாக்கி விற்பனை செய்து சாதனை செய்துள்ளார். ஜூப், ஆக்டேன் ஆகிய பிராண்டுகளை உருவாக்கி வியட்நாம், சிங்கப்பூர், அரபு அமீரகம் ஆகியவற்றில் பிராண்டை மகத்தான வெற்றி பெற

400க்கும் மேற்பட்ட பிராண்டுகளை அறிமுகப்படுத்திய பெண்மணி! நந்தினி டயஸ், லோட்ஸ்டர் யுஎம் இந்தியா

படம்
    நந்தினி டயஸ், லோட்ஸ்டர் யுஎம் இந்தியா       இம்பேக்ட் 50! சாதனைப்பெண்கள் நந்தினி டயஸ் லோட்ஸ்டர் யுஎம் இந்தியா நந்தினி லோட்ஸ்டர் யுஎம் இந்தியாவின் இயக்குநராக 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளை விளம்பரப்படுத்தி அதனை மக்கள் மனதில் பதியவைத்துள்ளார். அமுல், மகிந்திரா, டாடா, பிஎம்டபிள்யூ, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்காக விளம்பரங்களை உருவாக்கியுள்ளார். மேலும் எஃப்சிபி கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தை உருவாக்கி ஊடகங்களுக்கான முதலீடுகளைப் பெறும் வகையில்  உழைத்தார். பிராண்டுகளுக்கான அனுபவம், பிரபலங்களுக்கான விளம்பர பணிகள் என பல்வேறு துறைகளில் நந்தினி வேலை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு தனது நிறுவனத்திற்கு சிறந்த நிறுவனம் என்ற பெயரை வாங்கிக்கொடுத்துள்ளார். மேலும், டைம்ஸ் பவர் வுமன், கேம் சேஞ்சர் ஆகிய விருதுகளைப் பெற்றார். கேன்ஸ், ஸ்பைக், ஃபோமா என பல்வேறு விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் லோட்ஸ்டர் யுஎம் இந்தியா நிறைய விளம்பரங்கள்ப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. 33 சதவீத வளர்ச்சி பெற்று சந்தையில் 10 சதவீத பங்களிப்பை பெற்றுள்ள நிறுவனம் இது.  

இம்பேக்ட் 50! விளம்பரத்துறையில் சாதனை செய்த பெண்மணி ஸ்வாதி பட்டாச்சார்யா!

படம்
        ஸ்வாதி பட்டாச்சார்யா       ஸ்வாதி பட்டாச்சார்யா மூத்த புதுமைத்திறன் அதிகாரி, எஃப்சிபி உல்கா விளம்பரத்துறைக்கு ஸ்வாதி வந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. விளம்பரத்துறை மட்டுமன்றி கிடைக்கும் நேரங்களில் குறும்படங்களை உருவாக்குவது இவருக்கு பிடித்தமான ஒன்று. இந்த வகையில் இவரின் டபுள் ஷிப்ட் என்ற குறும்படத்திற்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. படத்தின் திரைக்கதையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமன்றி, ஏராளமான திரைப்பட விழாக்களில் ஸ்வாதியின் குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவரது விளம்பர ஐடியாக்கள், படங்கள் என அனைத்துமே மக்களின் நல்வாழ்க்கை, நல்ல குணங்களை மட்டுமல்லாமல் அவர்களின் துணிச்சல், திறமை சார்ந்தும் பேசியவை. இவரின் ஐடியாக்களில் உருவான பிராண்டுகளில் பொதுத்தன்மை என்ன தெரியுமா? அனைத்துமே மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை கருப்பொருளாக கொண்ட விளம்பரங்கள் என்பதுதான். 2016ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சீஃப் கிரியேட்டிவ் ஆபீசராக பதவி உயர்வு பெற்றார். ஸ்வாதியின் தலைமைத்துவத்தால் அவரது நிறுவனம் ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. கேன்ஸ் லயன்ஸ் விழாவில் முதல

இம்பேக்ட் 50! - சிஎன்பிசி டிவி 18 தொலைக்காட்சியை முன்னணிக்கு கொண்டு வந்த சாதனைப் பெண்மணி - ஷிரின் பான்

படம்
        ஷிரின் பான்     ஷிரின் பான் நிர்வாக ஆசிரியர், சிஎன்பிசி 18 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி காஷ்மீரில் இந்து குடும்பத்தில் பிறந்தவர். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் தத்துவப்படிப்பு, பின்னர் புனே பல்கலைக்கழகத்தில் டிவி, சினிமா பற்றிய படிப்பையும் படித்துள்ளார். ஷிரின் பானுக்கு ஊடகத்துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இந்தியா பிஸினஸ் ஹவர், வாட்ஸ் ஹாட், யங் டர்க்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் இவர்தான். யங் டர்க்ஸ் என்ற பெயரில் நூலையும் எழுதி பிரசுரித்திருக்கிறார். இந்த நூலின் பெயரில் நடத்தும் நிகழ்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் தொழில்நிறுவனங்களைப் பற்றியும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளாக சிஎன்பிசி டிவி 18 சேனலில் வருவதே வரலாற்று சாதனை. ஷிரின் பான் தலைமைத்துவம் காரணமாக அவரது டிவி, வணிக செய்திகளில் 70 சதவீத சந்தை பங்களிப்பைப் பெற்றுள்ளது. இணையத்திலும் சிஎன்பிசி டிவி 18 கோலோச்சுவதற்கு ஷிரினின் நிர்வாகத்திறன் முக்கிய காரணம். வாரன் பஃபட், பில்கேட்ஸ், இந்திரா நூயி, ஷெரில் சான்பெர்க் என பல்வேறு டெக் ஆளுமைகளை, வணிக தலைவர்களை நேர்காணல் செய்த பெருமைக்குரியவர். வேர்ல்ட் எகனாம